For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொத்து கொத்தா முடி கொட்டுதா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...

தலைமுடி பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்பது தெரியுமா? ஆம், கடுகு எண்ணெய் தலைமுடிக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

|

இன்று நிறைய பேர் தலைமுடி தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மோசமான சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம் மட்டுமின்றி, தலைமுடிக்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்காமல் இருப்பதும் தான். சிறுவயதில் நமது அம்மாக்கள் விடுமுறை நாட்களில் தங்களின் தலைமுடிக்கு முட்டை, நல்லெண்ணெய், வெந்தயம் மற்றும் பல இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய பரபரப்பான உலகில் நமக்கு நமது தலைமுடிக்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க நேரமின்றி இருக்கிறோம்.

How To Use Mustard Oil For Hair In Tamil

இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பலவிதமான தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறோம். தலைமுடி பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்பது தெரியுமா? ஆம், கடுகு எண்ணெய் தலைமுடிக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. ஏனெனில் இதில் ஒமேகா-3 கொழுப்ப அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்துமே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.

சரி, கடுகு எண்ணெயை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்துவது என்று நீங்கள் கேட்கலாம். எனவே தான் கீழே கடுகு எண்ணெயைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் பேக் போடலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கடுகு எண்ணெய் மற்றும் தயிர் ஹேர் பேக்

1. கடுகு எண்ணெய் மற்றும் தயிர் ஹேர் பேக்

உங்கள் தலைமுடி பொலிவிழந்து மற்றும் மென்மையிழந்து காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை மென்மையாக்கவும் மற்றும் பொலிவாக்கவும் இந்த ஹேர் பேக்கை போடுங்கள். அதற்கு,

* ஒரு பௌலில் கடுகு எண்ணெயை தயிருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை நன்கு தடவ வேண்டும்.

* பிறகு சுடுநீரில் நனைத்த துணியைக் கொண்டு தலைமுடிச் சுற்றி 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

2. கடுகு எண்ணெய் மற்றும் கற்றாழை ஹேர் பேக்

2. கடுகு எண்ணெய் மற்றும் கற்றாழை ஹேர் பேக்

தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? தலையில் கையை வைத்தாலே கொத்தா தலைமுடி கொட்டுகிறதா? அப்படியானால் இந்த ஹேர் பேக் நல்ல பலனைத் தரும். அதற்கு,

* ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

* இப்படி வாரம் ஒருமுறை போட்டு வந்தால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3. கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஹேர் பேக்

3. கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஹேர் பேக்

உங்கள் தலைமுடி ஆரோக்கியமின்றி இருப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஹேர் பேக்கை போடுங்கள். அதற்கு,

* ஒரு பௌலில் கடுகு எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் சிறிது வெந்தயப் பொடியை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலைமுடி மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

4. கடுகு எண்ணெய் மற்றும் வாழைப்பழ ஹேர் பேக்

4. கடுகு எண்ணெய் மற்றும் வாழைப்பழ ஹேர் பேக்

உங்கள் தலைமுடி வறண்டு நார் போன்று உள்ளதா? உங்கள் தலைமுடியை மென்மையாக்க வேண்டுமா? அப்படியெனில் இந்த ஹேர் பேக்கை போடுங்கள். அதற்கு,

* நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது கடுகு எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து அந்த கலவையை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

5. கடுகு எண்ணெய் மற்றும் வெந்தயம் ஹேர் பேக்

5. கடுகு எண்ணெய் மற்றும் வெந்தயம் ஹேர் பேக்

உங்கள் தலையில் பொடுகு அதிகமாக உள்ளதா? பொடுகு தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா? அப்படியானால் இந்த ஹேர் பேக் உங்களுக்கு உதவி புரியும். அதற்கு,

* ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் வெந்தயத்தை மென்மையாக அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதை தலையில் ஸ்கால்ப்பில் படும் படி தடவி, 30 நிமிட ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Mustard Oil For Hair In Tamil

In this article, we discussed about how to use mustard oil for hair. Read on to know more..
Story first published: Monday, December 19, 2022, 17:50 [IST]
Desktop Bottom Promotion