For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹேர் கலரிங் பண்ண ஆசையா இருக்கா? அப்ப வீட்லயே இப்படி ட்ரை பண்ணுங்க...

இயற்கை பொருட்களைக் கொண்டு ஹேர் கலரிங் செய்யலாமா? ஆம், கீழே தலைமுடிக்கு கலரிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

தற்போது ஹேர் கலரிங் செய்வது ட்ரெண்ட்டாக உள்ளது. ஆனால் அதே சமயம் ஹேர் கலரிங் செய்ய பலருக்கும் பயமாக உள்ளது. ஏனெனில் அழகு நிலையங்களில் செய்யப்படும் ஹேர் கலரிங் சிகிச்சையில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கல்கள் மயிர்கால்களுக்கு சேதத்தை விளைவிக்கிறது. சில சமயங்களில் இந்த கெமிக்கல்கள் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தக்கூடும். எனவே தலைமுடியை கெமிக்கல்கள் கொண்டு கலரிங் செய்வதற்கு பதிலாக இயற்கை பொருட்களைக் கொண்டு கலரிங் செய்யுங்கள்.

Colour Your Hair Naturally With These Ingredients

என்ன, இயற்கை பொருட்களைக் கொண்டு ஹேர் கலரிங் செய்யலாமா? ஆம், கீழே தலைமுடிக்கு கலரிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹென்னா

ஹென்னா

பழங்காலம் முதலாக ஹேர் கலரிங் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் மருதாணி என்னும் ஹென்னா. இது முடிக்கு ஒரு வகையான அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். ஹென்னாவைக் கொண்டு ஹேர் கலரிங் செய்வதற்கு, ஹென்னா பவுடரை காபி டிகாசனுடன் சேர்த்து கலந்து ஒரு எட்டு மணிநேரம் ஊற வைத்து, பின் அதை தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலசுங்கள்.

இல்லாவிட்டால் சிறிது நல்லெண்ணெயை சூடேற்றி, அதில் கறிவேப்பிலையை சேர்த்து, எண்ணெயின் நிறம் மாறும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அந்த எண்ணெயில் ஹென்னா பவுடரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு அடர் வாசனையைக் கொண்டது. ஆனால் இது தலைமுடிக்கு ஒரு நல்ல ஷேடுகளை கொடுக்கும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை சிறிது ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் அதே அளவில் நீரை சேர்த்து கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையில் நனைத்து தலைமுடியில் தடவ வேண்டும். இப்படி 10 நிமிடம் கழித்து மீண்டும் ஒருமுறை தடவ வேண்டும். பின் அதை சிறிது நேரம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், தலைமுடி நல்ல சிவப்பு நிறத்தைப் பெறும்.

வால்நட் ஷெல்

வால்நட் ஷெல்

அடுத்தமுறை வால்நட்ஸ் லாங்கினால், அதன் ஓட்டை தூக்கி எறிந்துவிடாதீர்கள். ஏனெனில் இதன் ஓடு தலைமுடிக்கு கலரிங் செய்ய உதவும். வால்நட்ஸின் ஓடுகளை நீரில் போட்டு, குறைந்தது ஒரு மணிநேரம் அடுப்பில் வைத்து சூடேற்றி இறக்கி குளிர வைத்து, அந்நீரை தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தலைமுடியானது கலரிங் செய்வது போன்ற தோற்றத்தைத் தரும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளதால், இது வறண்ட மற்றும் உயிரற்ற தலைமுடிக்கு மிகவும் நல்லது. மேலும் இது தலைமுடிக்கு ஒரு புதிய நிறத்தை அளிக்கும். நீங்கள் இயற்கை முறையில் உங்கள் முடிக்கு கலரிங் செய்ய விரும்பினால், எலுமிச்சை சாற்றினை தலைமுடியில் தடவி சூரிய ஒளி படும் இடத்தில் சிறிது நேரம் அமர வேண்டும். இதனால் எலுமிச்சையும், சூரியனும் ஒன்றாக எதிர்வினையாற்றி, தலைமுடிக்கு புதிய நிறத்தை அளிக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ்

நீங்கள் உங்கள் தலைமுடியை சிவப்பு நிறத்தில் மாற்ற நினைத்தால், பீட்ரூட்டைப் பயன்படுத்துங்கள். அதற்கு பீட்ரூட்டை எடுத்து தோலுரித்து விட்டு, துருவி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சாற்றினை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஈரமான முடியில் பீட்ரூட் சாற்றினை ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

காபி

காபி

நீங்கள் நல்ல அடர் ப்ரௌன் நிற தலைமுடியைப் பெற விரும்பினால், 3 டேபிள் ஸ்பூன் காபி பவுடரை (தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப) நீரில் போட்டு 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். டிகாசன் நிறம் அடர் நிறத்தில் மாற ஆரம்பித்ததும், அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஈரமான தலைமுடியில் ஸ்ப்ரே செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Colour Your Hair Naturally With These Ingredients

If you want to colour your hair without using any chemicals, then here are a few natural ingredients that will do the trick for you.
Story first published: Monday, July 18, 2022, 18:51 [IST]
Desktop Bottom Promotion