For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு வழுக்கைத் தலையா? அப்ப கண்டிப்பா இத படிங்க...

வழுக்கைத் தலையைக் கொண்டவர்களுக்கும் பொடுகு வரும் என்பது தெரியுமா? என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், வழுக்கைத் தலையைக் கொண்டவர்களுக்கும் பொடுகுத் தொல்லை இருக்கும். ஆனால் அது மிகவும் அரிதாகும்.

|

பொதுவாக தலையில் முடி அதிகமாக இருப்பவர்களுக்கு தான் பொடுகுத் தொல்லை இருக்கும். ஆனால் வழுக்கைத் தலையைக் கொண்டவர்களுக்கும் பொடுகு வரும் என்பது தெரியுமா? என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், வழுக்கைத் தலையைக் கொண்டவர்களுக்கும் பொடுகுத் தொல்லை இருக்கும். ஆனால் அது மிகவும் அரிதாகும்.

Can Bald People Get Dandruff?

சில சமயங்களில் வழுக்கைத் தலைக் கொண்டவர்களின் தலைச் சருமம் அளவுக்கு அதிகமாக வறட்சி அடைந்தால், பொடுகு வரக்கூடும். இருப்பினும், இதை சரிசெய்து விட முடியும். அதுவும் ஒருசில பராமரிப்புக்களை வழுக்கைத் தலையின் போதும் மேற்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் அதுக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகு எப்படி வருகிறது?

பொடுகு எப்படி வருகிறது?

பொதுவாக தலைச் சருமத்தில் அளவுக்கு அதிகமாக அல்லது மிகவும் குறைவான அளவில் எண்ணெய் இருந்தால் வரக்கூடியது தான் பொடுகு. மேலும் ஒருவருக்கு பொடுகு வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அதில் அதிகளவு வறட்சியான சருமம், செபொர்ஹெக் டெர்மடிடிஸ், ஈஸ்ட் சென்சிடிவிட்டி, உச்சந்தலையில் அதிகப்படியான அளவு மலாசீசியா என்ற பூஞ்சை இருப்பது, சரும செல்களின் கட்டுப்பாடற்ற உற்பத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

வழுக்கை தலை மற்றும் பொடுகு

வழுக்கை தலை மற்றும் பொடுகு

பொடுகு என்பது தலைச் சருமத்தில் உள்ள இறந்த சரும செல்கள் வெள்ளை நிறத்தில் செதில் செதில்களாக உதிர்வது ஆகும். இந்த பொடுகு தொல்லை தலைமுடி இருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஸ்கால்ப்பில் உள்ள தலைமுடி தான். அதுவே வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கு பொடுகு வந்தால், அதன் வளர்ச்சியை எளிதில் கட்டுப்படுத்தி நீக்க முடியும். ஆகவே தான் வழுக்கைத் தலையினருக்கு பொடுகு வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளது.

சில முடி நிபுணர்கள் வழுக்கைத் தலையில் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்களை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். அதில் சில சமயங்களில், வழுக்கைத் தலையில் உள்ள பொடுகு, தீவிர பிரச்சனையின் அறிகுறியாக இருப்பதாகவும், பெரும்பாலான நேரங்களில் அதிகப்படியான வறட்சியினால் தான் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

தலையில் முடி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தலைக்கு அவசியம் பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்பது மட்டும் புரிகிறது. இப்போது வழுக்கைத் தலையைக் கொண்டவர்கள் அவசியம் கொடுக்க வேண்டிய பராமரிப்புக்களைக் காண்போம்.

ஷாம்பு மற்றும் கண்டிஷனர் அவசியம்

ஷாம்பு மற்றும் கண்டிஷனர் அவசியம்

தலையில் முடி இல்லாவிட்டாலும், ஸ்கால்ப்பில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் கட்டாயம் சேரும். இவை ஸ்கால்ப்பில் அதிகரித்தால், அது நிச்சயம் பொடுகை உண்டாக்கும். ஆகவே வழுக்கைத் தலையைக் கொண்டவர்கள் தினமும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதுவும் கெமிக்கல் குறைவாக இருக்கும் மைல்டு ஷாம்புக்களைப் பயன்படுத்துவது நல்லது.

நீர்ச்சத்துடன் இருக்கவும்

நீர்ச்சத்துடன் இருக்கவும்

குளிர் காலத்தில் எப்படி கை, கால் சருமம் அதிகம் வறட்சி அடைகிறதோ, அப்படி தான் தலைச் சருமமும் வறட்சி அடையும். எனவே இக்காலத்தில் அதிக அளவு நீரைக் குடிப்பதோடு, வழுக்கைத் தலையில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் கட்டாயம் தடவ வேண்டும். இதனால் தலைச் சருமம் வறட்சி அடைவதைத் தடுத்து, பொடுகில் இருந்து விடுபடலாம்.

சூரியனிடமிருந்து பாதுகாப்பு

சூரியனிடமிருந்து பாதுகாப்பு

முடி நிபுணர்கள் வழுக்கைத் தலையைக் கொண்டவர்களுக்கு பரிந்துரைக்கும் ஓர் விஷயம், சூரியக்கதிர்கள் தலையில் நேரடியாக தாக்காமல், பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அதிகப்படியான வெப்பம் மற்றும புறஊதாக் கதிர்கள், சருமத்தை எரிக்கக்கூடும். ஏற்கனவே தலையில் முடி இல்லாததால் தலைச் சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும் முன் சன் ஸ்க்ரீனை கைகளுக்கு தடவுவது போன்று, தலையிலும் தடவ வேண்டும். மேலும் தலையை ஏதேனும் ஒரு துணியால் கட்டிக் கொள்ள வேண்டும்.

ஸ்கால்ப் மசாஜ் அவசியம்

ஸ்கால்ப் மசாஜ் அவசியம்

முடி உள்ள தலைக்கு மட்டுமின்றி, வழுக்கை தலையைக் கொண்டவர்களும் அவ்வப்போது தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். ஒருவருக்கு பொடுகு மோசமான இரத்த ஓட்டத்தாலும் வரலாம். ஆகவே தலைக்கு மசாஜ் செய்வதன் மூலம், இரத்த ஓட்டம் தலையில் அதிகரித்து, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். எனவே வீட்டிற்கு போனதும் தினமும் இரவில் எண்ணெயால் தலையை சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இதனால் அதிர்ஷ்டம் இருந்தால் வழுக்கைத் தலையில் முடி கூட வளர வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Bald People Get Dandruff?

It is hard to believe that bald people too get dandruff but it is true. However, the chances are very less. Their scalp tends to get dry which leads to dandruff.
Story first published: Saturday, October 12, 2019, 17:23 [IST]
Desktop Bottom Promotion