TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
உங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா? கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...
கடுகு எண்ணெய்யை பயன்படுத்துவதால் ஏற்படும் கூந்தல் நன்மைகள்
கடுகு எண்ணெய் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் இந்த எண்ணெய்யை சமையலில் மட்டுமல்ல நிறைய உடல் நல நன்மைகளையும் நமக்கு அள்ளித் தருகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சலதோஷத்தை போக்குதல், சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்தல், கூந்தல் வளர்ச்சியை தூண்டுதல் போன்றவற்றை செய்து வருகிறது.
கடுகு எண்ணெய்
உங்களுக்கு ராபுன்சல் போன்ற அழகிய நீண்ட கூந்தல் வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த கடுகு எண்ணெய் உதவி செய்யும். நாம் எல்லாரும் பிறக்கும் போது அழகிய கூந்தலுடன் தான் பிறக்கிறோம். ஆனால் நம்மை சுற்றியுள்ள மாசுக்கள், சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாமை, வெயில், கெமிக்கல் சாம்பு, பொருட்கள் இவற்றால் நம் கூந்தல் களையிழந்து பொலிவிழந்து போகிறது. ஆனால் உங்கள் கூந்தல் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை போக்க இந்த கடுகு எண்ணெய் மாஸ்க் உங்களுக்கு உதவும்.
இயற்கை கண்டிஷனர்
கடுகு எண்ணெய்யில் ஆல்பா கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது நமது கூந்தலுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது. மேலும் இந்த அமிலங்கள் ஒரு நல்ல கண்டிஷனராக செயல்படுகிறது. இதனால் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை உடனே பெறலாம்.
Most Read : உங்க ராசிப்படி நீங்க பூமியில் பிறந்த நோக்கம் என்னவென்று தெரியுமா? இத பாருங்க தெரியும்...
ஈரப்பதம்
இந்த நவீன காலங்களில் கூந்தல் உதிர்தல் மற்றும் அடர்த்தி குறைந்து போவது எல்லாருடைய பிரச்சினையாகவே இருக்கிறது. இதற்கு காரணம் நமது முடியின் வேர்க்கால்கள் வலிமையிழந்து போவது தான். இந்த பிரச்சினை நம்மை சுற்றியுள்ள மாசுக்கள், மன அழுத்தம், ஊட்டச்சத்து பற்றாக்குறை இவற்றால் ஏற்படுகிறது. கடுகு எண்ணெய்யை கொண்டு உங்கள் முடியை மசாஜ் செய்யும் போது வலிமையடைகிறது. முடி உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
ஊட்டச்சத்துக்கள்
கடுகு எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் மற்றும் விட்டமின் ஏ, டி,ஈ மற்றும் கே, ஜிங்க், பீட்டா கரோட்டீன், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்
உங்களுக்கு களையிழந்த கூந்தல் இருந்தால் கடுகு எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலுக்கு பொலிவு தருகிறது.
கூந்தல் வளர்ச்சி
கடுகு எண்ணெய்யில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது கூந்தல் வளர்ச்சியை மிக வேகமாகத் தூண்கிறது.
பூஞ்சை எதிர்ப்பு பொருள்
இதிலுள்ள எரியூக் அமிலம் மற்றும் ஏஎல்ஏ பொருள் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு பொருளாக செயல்பட்டு பொடுகு, தலையில் உள்ள வறண்ட சருமத்தை போக்குகிறது. இந்த பூஞ்சை அழற்சி தான் நமது வேர்க்கால்களை மூடி முடி உதிர்வை ற்கு காரணமாக அமைகிறது. கடுகு எண்ணெய் அதை சரி செய்து நமக்கு நன்மை அளிக்கிறது.
கடுகு எண்ணெய் ஹேர் பேக்ஸ்
கடுகு எண்ணெய் மற்றும் யோகார்ட்
ஒரு பெளலில் கடுகு எண்ணெய் மற்றும் யோகார்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். அதை தலை மற்றும் கூந்தலில் அப்ளே செய்யுங்கள். ஒரு துண்டை சுடுநீரில் நனைத்து தலையை சுற்றி அணிந்து கொள்ளுங்கள். இதை 30-40 நிமிடங்கள் வைத்து இருந்து மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என ஒரு மாதம் செய்து வந்தால் மென்மையான பொலிவான கூந்தல் கிடைக்கும்.
MOST READ: இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?
கடுகு எண்ணெய் மற்றும் கற்றாழை பேக்
கடுகு எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்லை கலந்து கொள்ளவும். இதை தலையில் அப்ளே செய்து 30-40 நிமிடங்கள் கழித்து மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் கூந்தல் பிரச்சனை ஓடி விடும்.
கடுகு எண்ணெய் மற்றும் லெமன் ஜூஸ் பேக்
ஒரு பெளலில் கடுகு எண்ணெய், லெமன் ஜூஸ், பாசிப்பருப்பு பவுடர் எல்லாம் சேர்த்து கலந்து தலையில் அப்ளே செய்யுங்கள். 30 நிமிடங்கள் கழித்து மைல்டு சாம்பு கொண்டு அலசுங்கள். பயத்த மாவு கூந்தலுக்கு ஈரப்பதத்தையும், லெமன் ஜூஸ் கூந்தலில் உள்ள பொடுகை யும் போக்குகிறது.
MOST READ: உட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது? வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?
கடுகு எண்ணெய் மற்றும் வாழைப்பழ பேக்
ஒரு பழுத்த வாழைப் பழத்தை எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும். அதனுடன் கடுகு எண்ணெய் மற்றும் யோகார்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு சாதாரண சாம்பு கொண்டு அலசவும். தலைக்கு குளித்த பிறகு ஹேர் ட்ரையர் கொண்டு முடியை உலர்த்தாதீர்கள்.
மேற்கண்ட கடுகு எண்ணெய் பேக் உங்கள் கூந்தலை பட்டு போன்று மென்மையாக்குவதோடு அடர்த்தியாக அலைபாய வைக்கும்.