For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வழுக்கை விழற மாதிரி இருக்கா? அப்போ இந்த எண்ணெய் தேய்ங்க...

ஜோஜோபா ஆயில் பொலிவின்றி வறண்ட கூந்தலுக்கு பயன்படுகிறது. மேலும் தலையில் ஏற்படும் அழற்சி போன்றவற்றை இதன் அழற்சி எதிர்ப்பு பொருள் கொண்டு போரிடுகிறது. இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை கூந்தலில் ஏற்படும் பிரச்

|

இந்த ஜோஜோபா ஆயில் ஜோஜோபா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இது பொதுவாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வளரக் கூடிய தாவரமாகும்.

Jojoba

இந்த எண்ணெய் பொதுவாக அழகு பராமரிப்பு க்கும் கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுகிறது. பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் இதன் பங்கு இன்றியமையாததாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோஜோபா ஆயில்

ஜோஜோபா ஆயில்

இந்த ஜோஜோபா ஆயில் பொலிவின்றி வறண்ட கூந்தலுக்கு பயன்படுகிறது. மேலும் தலையில் ஏற்படும் அழற்சி போன்றவற்றை இதன் அழற்சி எதிர்ப்பு பொருள் கொண்டு போரிடுகிறது. இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை கூந்தலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

சரி வாங்க இதை எப்படி கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்துவது என்பதை காணலாம்.

MOST READ: குழந்தைங்க கழுத்துல இப்படி தடிப்பு வர்றது எதோட அறிகுறி? வந்தா என்ன செய்யணும்?

கூந்தல் வளர்ச்சி

கூந்தல் வளர்ச்சி

நமது தலையில் முடியின் வளர்ச்சிக்கு ஏற்ப இயற்கையாகவே எண்ணெய் பசை சுரக்கும். இந்த எண்ணெய் தான் சீபம் எண்ணெய் இது முடியின் வேர்கால்களை வலிமையாக்குகிறது. இந்த எண்ணெய் சரியாக சுரக்காவிட்டால் கூந்தல் வறண்டு போய், உடைய ஆரம்பித்து விடும். இதுவே கூந்தல் உதிர்வை ஏற்படுத்த ஆரம்பித்து விடும். அப்பொழுது நீங்கள் ஜோஜோபா எண்ணெய்யை பயன்படுத்தினால் கூந்தலுக்கு ஈரப்பதத்தை கொடுத்து வளர்ச்சியை தூண்டும்.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

தேவையான பொருட்கள்

ஜோஜோபா ஆயில், தேங்காய் எண்ணெய் /பாதாம் எண்ணெய்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு எண்ணெய்களையும் சேர்த்து குறைந்த தீயில் சூடுபடுத்தவும்.

சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள்

இந்த எண்ணெய் கலவை ஆறும் வரை காத்திருக்கவும்.

இந்த எண்ணெய்யை கொண்டு உங்கள் வேர்கால்களை லேசாக மசாஜ் செய்து விடுங்கள். ஒரு 30-45 நிமிடங்கள் கழித்து மைல்டு சாம்பு கொண்டு அலசுங்கள்.

MOST READ: முழங்கால் பக்கத்துல இப்படி இருந்தா அது எந்த புற்றுநோயின் அறிகுறி தெரியுமா? கவனமா இருங்க...

தலையை சுத்தம் செய்தல்

தலையை சுத்தம் செய்தல்

தலையில் எண்ணெய் சுரப்பு குறைவாக இருந்தால் மட்டும் பாதிப்பு ஏற்படாது, அதிகமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படும். அதிகமான எண்ணெய் பிசுக்கு முடியின் வேர்கால்களை அடைத்து விடும். இதனால் முடி வளர்ச்சியும் தடைபடும். எனவே உங்கள் தலையை தொடர்ச்சியாக சுத்தம் செய்து வந்தால் நல்லது.

மற்றொரு முறை

மற்றொரு முறை

தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி தலையில் தடவி 1/2 மணி நேரம் விட்டு விடுங்கள். ஒரு துண்டு அல்லது டவல் கேப் கொண்டு கட்டிக் கொள்ளுங்கள். பிறகு சாம்புவை கொண்டு அலசுங்கள்.

பூஞ்சை அழற்சி

பூஞ்சை அழற்சி

பூஞ்சை அழற்சி போன்றவை கூந்தலின் வளர்ச்சியை தடுக்க கூடிய காரணியாகும். இதற்கு ஜோஜோபா ஆயில் அழற்சியை தூரே வைக்கிறது. தலையை சுத்தம் செய்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

MOST READ: முடியை கருகருனு நீளமாக வளரச் செய்யும் கரும்பு ஜூஸ்... எப்படினு தெரியுமா?

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

சிறிதளவு ஜோஜோபா ஆயிலை சூடாக்கி தினமும் இரவு படுப்பதற்கு முன் தடவவும். பிறகு காலையில் எழுந்ததும் அலசி விடுங்கள். பிளவுபட்ட முடிகள் இருந்தால் அந்த இடத்தில் எண்ணெய்யை தடவி அலசி விடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Jojoba Oil For Hair Care?

Jojoba oil can be used on hair to treat dull and damaged hair. It has anti-inflammatory properties that make it capable of treating any inflammation on the scalp.
Story first published: Saturday, December 1, 2018, 11:47 [IST]
Desktop Bottom Promotion