For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடை காலத்தில் உங்கள் கூந்தலை பராமரிப்பது பெரும் பாடாக இருக்கா. அப்போ இத ட்ரை பண்ணுங்க!

|

இந்த சுட்டெரிக்கும் கோடை காலங்களில் உங்கள் கூந்தலை அழகாக ஆரோக்கியமாக வைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்போ இப்போ தமிழ் போல்டு ஸ்கை உங்களுக்காக வழங்கும் டிப்ஸ்களை பின்பற்றுங்க. கண்டிப்பாக இந்த கோடைகாலத்திலும் உங்கள் கூந்தல் பட்டு போன்று அலைபாயும்.

இந்த கோடை காலத்தில் சூரியனிடமிருந்து இருந்து வரும் அதிகப்படியான வெப்ப கதிர்கள் சருமத்தை மட்டுமல்லாது கூந்தலையும் பாதிக்கும். இதனால் முடி உதிர்தல், வறண்டு போதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பொதுவான பிரச்சினை கிடையாது. இதனால் அனைவருமே பாதிக்கப்படுகிறோம்.

கோடை கால வெயிலிருந்து உங்கள் கூந்தலை பராமரிப்பது எப்படி

எனவே நாம செய்யும் சின்ன சின்ன பராமரிப்பு தான் நம் அழகிய கூந்தலை இந்த வெயில் காலத்திலிருந்து பாதுகாக்கும். நாங்கள் கூறும் சில டிப்ஸ்கள் உங்கள் கூந்தல் வறண்டு சிக்குகள் இல்லாமல் மென்மையாக இருக்க உதவும்.

இந்த டிப்ஸ்களை தினமும் நீங்கள் பின்பற்றி வந்தால் இந்த வெயில் காலத்திலும் உங்கள் கூந்தல் தன்மை மாறாமல் போதுமான ஈரப்பதத்துடன் இருக்கும்.

சரி வாங்க உங்கள் கூந்தலை பராமரிப்பதற்கான டிப்ஸ்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தலை காய வைக்கும் கருவியை உபயோகிக்க வேண்டாம்

கூந்தலை காய வைக்கும் கருவியை உபயோகிக்க வேண்டாம்

ப்ளோ ட்ரையரை இந்த வெயில் காலத்தில் மறந்து விடுங்கள். இந்த ப்ளோ ஹேர் ட்ரையர் வெப்பமும் சூரியக் கதிர்களின் வெப்பமும் சேர்ந்து அதிகப்படியான பாதிப்பை உங்கள் கூந்தலில் ஏற்படுத்தி விடும். எனவே வெயில் காலத்தில் ப்ளோ ட்ரையர் வேண்டாம். இல்லையென்றால் அளவோடு பயன்படுத்தி கொள்வது நல்லது.

ஹேர் சீரம் பயன்படுத்துங்கள்

ஹேர் சீரம் பயன்படுத்துங்கள்

ஹேர் சீரம் உங்கள் கூந்தலுக்கு தேவையான போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. உங்கள் கூந்தலுக்கு பொருத்தமான ஹேர் சீரத்தை உபயோகியுங்கள். இதனால் உங்கள் கூந்தலின் வேர்ப் பகுதி வலிமையடையும். உங்கள் கூந்தல் வறண்டு போகாமல் இருக்க உதவுதோடு கூந்தலுக்கு நல்ல பள பளப்பையும் கொடுக்கும்.

கூந்தலை மூடிக் கொள்ளுங்கள்

கூந்தலை மூடிக் கொள்ளுங்கள்

வெயில் காலத்தில் வெளியே செல்லும் போது கூந்தலை ஒரு கைக்குட்டை அல்லது தொப்பி போட்டு மூடிக் கொள்ளுங்கள். சூரியனிடமிருந்து வரும் வெப்ப கதிர்கள் நேரடியாக உங்கள் கூந்தலில் படும் போது அதன் தன்மையையே மாற்றி முரடாக கடினமாக மாற்றி விடும்.

கூந்தலை நன்றாக கட்டிக் கொள்ளுங்கள்

கூந்தலை நன்றாக கட்டிக் கொள்ளுங்கள்

வெயில் காலத்தில் உங்கள் கூந்தலை இறுக்கமாக நன்றாக சேர்த்து கட்டிக் கொள்ளுங்கள். கொண்டை மாதிரி ஹேர் ஸ்டைல் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கூந்தல் வறண்டு போவதை தடுப்பதோடு சிக்கல் ஆகாமல் இருக்கவும் உதவும்.

இரவு நேர எண்ணெய் சிகச்சை

இரவு நேர எண்ணெய் சிகச்சை

இரவு நேரங்களில் படுப்பதற்கு முன் நல்ல வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்யை கலந்து உங்கள் முடியில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கூந்தலின் வேர்கள் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும்.

முடியின் நுனியை வெட்டிக் கொள்ளுங்கள்

முடியின் நுனியை வெட்டிக் கொள்ளுங்கள்

வெப்பம் மற்றும் வெப்பமான காற்றால் உங்கள் முடியின் நுனிகள் எல்லாம் வெடித்து பிளவு ஏற்பட ஆரம்பித்து விடும். எனவே பிளவுபட்ட முடிகளின் நுனியை வெட்டி விடுங்கள்.

கண்டிஷனர் பயன்படுத்துங்கள்

கண்டிஷனர் பயன்படுத்துங்கள்

இந்த வெயில் காலத்தில் உங்கள் கூந்தலின் ஈரப்பதத்தை காக்க கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கூந்தலின் வேர்ப்பகுதிக்கு போதுமான ஈரப்பதம் கிடைப்பதோடு கூந்தலும் பட்டு போன்று மென்மையாக நாள் முழுவதும் இருக்கும்.

ஈரப்பதமேற்றும் ஹேர் மாஸ்க் அப்ளே செய்யுங்கள்

ஈரப்பதமேற்றும் ஹேர் மாஸ்க் அப்ளே செய்யுங்கள்

இந்த வெயில் காலத்தில் வீசும் வெப்பமான காற்று உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை எல்லாம் உறிஞ்சி விடும். இதனால் உங்கள் கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைக்க ஈரப்பதம் கொடுக்கும் ஹேர் மாஸ்க் அப்ளே செய்ய வேண்டும். நீங்கள் ஷாப்களில் வாங்கியோ அல்லது வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களான வாழைப்பழம், கற்றாழை ஜெல் போன்றவற்றை பயன்படுத்தியோ இதைச் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

கோடை கால வெயிலிருந்து உங்கள் கூந்தலை பராமரிப்பது எப்படி | கோடை வெப்பத்திலிருந்து கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்கள்

Want to keep your tresses happy and healthy all summer long? If so, then do read on, as today at Boldsky, we've zeroed in on the most useful tips for maintaining silky and smooth hair when the weather heats up.
Story first published: Saturday, March 3, 2018, 11:29 [IST]
Desktop Bottom Promotion