For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இப்படி உங்க தலையும் ஆகாம இருக்கணுமா?... அப்போ இந்த 3 விஷயத்தையும் கட்டாயம் பண்ணுங்க...

  |

  இந்த நவீன காலத்தில் நீங்கள் ஒரு முறை வெளியே சென்று வீடு திரும்பினால் போதும் உங்கள் கூந்தல் முழுவதும் அழுக்கு, மாசு என்று நிறைந்திருக்கும். இதன் பயன் முடி உதிர்தல், வறண்ட கூந்தல், பொடுகு போன்ற ஏராளமான பிரச்சினைகளையும் நாம் சந்திக்க நேரிடும்.

  beauty

  இதுமட்டுமல்ல ஆபிஸ் டென்ஷன், மன அழுத்தம், துரித உணவுகள் இவற்றாலும் நமது கூந்தல் மிகவும் பாதிப்பிற்குள்ளாகுகிறது. ஏன் நாம் அதிகமான நீர் அருந்தாமல் கூட எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கும். போதுமான தண்ணீர் குடிப்பதும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தலைமுடி உதிர்தல்

  தலைமுடி உதிர்தல்

  சரி இந்த கூந்தல் உதிர்வு பிரச்சினையை எப்படி எளிதாக சமாளிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா. அப்படியானால் தினமும் ஒரு அரை மணி நேரம் உங்கள் பிஸி லைப்வில் ஒதுக்குங்கள். ஆமாங்க சில யோகாசனங்களை செய்தாலே போதும் உங்கள் முடி உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் யோகாசனங்களை பற்றி நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

  யோகாசனத்தின் பயன்கள்

  யோகாசனத்தின் பயன்கள்

  நீங்கள் தினமும் சிறிது நேரம் யோகாசனம் செய்யும் போது தலைக்கு இரத்த ஒட்டம் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளை சீராகி முடி உதிர்தல் கட்டப்படுகிறது. மேலும் இது முடி வளர்ச்சியை தூண்டவும் செய்கிறது.வறண்ட தலை சருமம் மற்றும் முடியில் ஏற்படும் வறட்சி போன்றவற்றை நீக்குகிறது . மேலும் சிறிது நேரம் யோகா செய்வதால் உங்கள் மன அழுத்தமும் குறைந்து அதன் மூலம் ஏற்படும் முடி உதிர்வை யும் கட்டுப்படுத்துகிறது என்று உடற்பயிற்சி நிபுணர் ஷிவணி படேல் கூறுகிறார்.

  காரணங்கள்

  காரணங்கள்

  மன அழுத்தம்

  ஹார்மோன் சமநிலையின்மை

  ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

  மருந்துகள்

  ஹேர் டை

  நோய்கள்

  மரபணு ரீதியான பிரச்சினை

  புகைப் பிடித்தல்

  ஹைப்போ தைராய்டு

  கீழ்வரும் மூன்று ஆசனங்களையும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

  அதோமுகா ஸ்வாசனா

  அதோமுகா ஸ்வாசனா

  இது ஒரு கீழ்ப்புற நாய் போன்ற நிலையாகும். முதலில் கைகளும் உங்கள் பாதங்களும் தரையை தொட வேண்டும். கைகள் உங்கள் முழங்காலுக்கும் மற்றும் தோள்பட்டைக்கும் செங்குத்தாக இருக்க வேண்டும். இப்பொழுது கால்களை நேராக்கி உங்கள் குதிகால் கொண்டு நிற்கவும். உள்ளங்கையை கொண்டு தரையை அழுத்தி தண்டுவடத்தை நேராக்கவும். பிறகு மெதுவாக உங்கள் இடையை இறக்கி பழைய நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தின் மூலம் தலைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்தல் பிரச்சினை இல்லாமல் போகும்.

  உத்தனாசனா (Uttanasana)

  உத்தனாசனா (Uttanasana)

  இது ஒரு முன்னோக்கி நிற்கும் பயிற்சி ஆகும். அதே நேரத்தில் உங்கள் தொப்பையை குறைக்கவும், தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்தலை தடுக்கவும் உதவுகிறது. மேலும் முடியின் அடர்த்தி, வளர்ச்சி போன்றவற்றை மேம்படுத்துகிறது.

  வஜ்ராசனா

  வஜ்ராசனா

  மண்டியிட்டு தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகு தண்டுவடம் மற்றும் குதிகால் நேராக இருக்க வேண்டும். உள்ளங்கை தரையை நோக்கி இருக்க வேண்டும். கொஞ்சம் அமைதியாக அமர்ந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். இதை ஒரு நிமிடம் வரை செய்யுங்கள். இப்பொழுது உங்கள் கால்களை முன்னே நீட்டிக்கவும்.

  பயன்கள்

  பயன்கள்

  மன அழுத்தத்தை போக்கு தல், அனிஸ்சிட்டி பிரச்சினையை சரி செய்தல், சீரண சக்தியை மேம்படுத்துதல், முடி உதிர்தலை தடுத்தல் போன்ற பயன்களை தருகிறது.

  செயல்படும் விதம்

  செயல்படும் விதம்

  சர்வங்ஹாசனம் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சரியாக்கி முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

  பிரயாணமா மற்றும் மூச்சுப் பயிற்சி நமது உடலுக்கும் தலைக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

  இதனுடன் ஆரோக்கியமான உணவுகள்,போதுமான நீர் போன்றவற்றை எடுத்து கொண்டு வந்தால் என்றும் நாம் இளமையாக இருக்கலாம்.

  அதீத முடி உதிர்தல் பிரச்சினையை சந்திக்கும் மக்கள் உணவில் அதிகப்படியான புரோட்டீன் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் முடி வலிமைக்கு கெரோட்டின் என்ற புரோட்டீன் முக்கியம்.

  புரோட்டீன் ஒரு அமினோ அமிலம். இவை தான் உடலின் கட்டமைக்கு உதவுகிறது. இவை சரும வளர்ச்சி, தசை வலிமை, முடி வளர்ச்சி, நக வளர்ச்சி, செல் வளர்ச்சி மற்றும் திசுக்கள், உறுப்புகள் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அதே மாதிரி நமது உடலில் மெட்டாபாலிச செயல்பாடு, ஹார்மோன் சமநிலை, ஆன்டி பாடிகள் உருவாக்கம் போன்றவற்றையும் சீராக்குகிறது. எனவே இனி இந்த யோகாசனத்துடன் ஆரோக்கியமான புரோட்டீன் உணவுகளையும் எடுத்து கொள்ளுங்கள். இனி முடி உதிர்தல் பிரச்சினைக்கு பை பை சொல்லி விடலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Hair fall? Try these yoga poses says expert

  Yoga asanas and pranayama stimulate circulation of blood and oxygen to the scalp and thereby help rejuvenate dry and limp hair to promote hair growth.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more