ஹேர் ட்ரையர் கருவியை பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ஹேர் ப்ளோ ட்ரையர் என்பது நம் கூந்தலை உலர வைக்க நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு கருவி. இந்த கருவியை பொதுவாக எல்லா வயதுப் பெண்களும் பயன்படுத்துகின்றனர். இந்த அவசர உலகத்தில் விரைவாக ஆபிஸிக்கோ அல்லது ஒரு நிகழ்ச்சிக்கோ போக வேண்டிய சூழ்நிலையில் உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை போக்க ஹேர் ப்ளோ ட்ரையர் கருவி பயன்படுகிறது.

இந்த கருவி கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை போக்குவதோடு கூந்தலுக்கு பட்டு போன்ற மென்மையையும், பராமரிக்க எளிதாகவும் இருக்கச் செய்கிறது. இருப்பினும் இதை சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியம். இதை சரியாக பயன்படுத்தாத போது உங்கள் கூந்தல் ஆரோக்கியம் கெடுவதற்கும் வாய்ப்புள்ளது.

Common Blow Dryer Mistakes You Might Be Making

கூந்தல் நிபுணர்கள் கருத்து என்னவென்றால் இந்த ப்ளோ ஹேர் ட்ரையரை நீங்கள் சரியாக பயன்படுத்தா விட்டால் கூந்தல் உடைவது, கூந்தல் ஒல்லியாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவிக்கின்றன.

எனவே இந்த மாதிரியான பிரச்சினைகளிலிருந்து விடுபட நீங்கள் ட்ரையரை பயன்படுத்தும் போது செய்யும் தவறுகளையும், அதைப் பயன்படுத்தும் முறையையும் உங்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை இங்கே கூற உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் கூந்தல் அதிகமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்

உங்கள் கூந்தல் அதிகமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்

கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் படத்தில் காட்டப்பட்டுள்ள ஈரப்பத நிலையில் கூந்தல் இருக்கும் போது ஹேர் ட்ரையர் பயன்படுத்துங்கள். உங்கள் கூந்தல் ஏற்கெனவே 80% உலர்ந்து இருந்தால் அப்பொழுது ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் போது வெப்பத்தை குறைத்து கொண்டு பயன்படுத்துங்கள். அப்பொழுது கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம் .

வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களை தவிர்த்தல்

வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களை தவிர்த்தல்

நிறைய பெண்கள் செய்யும் தவறு இது தான். வெப்பத்திலிருந்து கூந்தலை பாதுகாக்கும் பொருட்களை பயன்படுத்த தவிறிவிடுகின்றனர். நீங்கள் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதற்கு முன் கண்டிப்பாக உங்கள் கூந்தலுக்கு ஏற்ற வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களை கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் அதிகப்படியான வெப்பத்தால் உங்கள் கூந்தல் பாழாகாமல் இருக்கும்.

ப்ளோ ட்ரையர் பயன்படுத்தும் தவறான முறை

ப்ளோ ட்ரையர் பயன்படுத்தும் தவறான முறை

நிறைய பெண்கள் இந்த ட்ரையரை தவறான திசையில் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் கூந்தல் மிகவும் வறண்டு போய் கடினமாகவும் காணப்படும். நீங்கள் பட்டு போன்ற மென்மையான கூந்தலை விரும்பினால் எப்பொழுதும் ட்ரையரை முடியின் நுனியை நோக்கி கீழ் திசையில் உபயோகிக்க வேண்டும். இப்படி தான் உங்கள் கூந்தலின் வேர்க் கால்களுக்கும் உபயோகிக்க வேண்டும். இதற்கு எதிர்திசையில் செய்யும் போது முடி இழப்பு ஏற்படுகிறது.

தவறான வெப்பநிலையை தேர்ந்தெடுத்தல்

தவறான வெப்பநிலையை தேர்ந்தெடுத்தல்

எல்லா ஹேர் ட்ரையரிலும் மூன்று விதமான வெப்பநிலை அமைப்பு இருக்கும். கூல், குறைவு மற்றும் அதிக என்று பிரிவுகள் இருக்கும். நீங்கள் ஒல்லியான கூந்தலை பெற்று இருந்தால், குறைவான வெப்பநிலையை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் அடர்த்தியான கடினமான முடியை பெற்று இருந்தால், அதிக வெப்பநிலையை பயன்படுத்துங்கள். இருப்பினும் மிதமான வெப்பநிலையை தேர்ந்தெடுத்து உபயோகிப்பதே உங்கள் கூந்தலுக்கு சிறந்தது.

கூந்தலை பகுதிகளாக பிரிக்காமல் பயன்படுத்துதல்

கூந்தலை பகுதிகளாக பிரிக்காமல் பயன்படுத்துதல்

நிறைய பெண்கள் செய்யும் தவறு ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் போது தங்கள் கூந்தலை பகுதிகளாக பிரிக்காமல் உலர வைப்பர். இப்படி செய்யும் போது எல்லா பக்கங்களும் வெப்பம் ஓரே மாதிரி பரவாமல் முடி கடினமாக மாற வாய்ப்புள்ளது. மேலும் முடி பறந்து உலர வைப்பதில் சிரமமும் ஏற்படும். எனவே கூந்தலை பகுதி பகுதியாக பிரித்து அப்புறமாக ஹேர் ட்ரையர் பயன்படுத்துங்கள். முடியும் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.

சீப்பை பயன்படுத்தாமல் இருத்தல்

சீப்பை பயன்படுத்தாமல் இருத்தல்

நீங்கள் ப்ளோ ட்ரையர் பயன்படுத்தும் போது உங்கள் கூந்தலில் உள்ள சிக்கல் மற்றும் முடிச்சுகளை சீப்பு கொண்டு எடுத்து கொள்ளுங்கள். இவற்றை செய்ய உங்களுக்கு சிறிது நேரம் ஆகலாம். ஆனால் இதன் மூலம் உங்கள் கூந்தலை எளிதாக பராமரிக்கலாம். மேலும் மென்மையான கூந்தலை பெற இயலும். எனவே சிக்கலை எடுக்காமல் ட்ரையரை பயன்படுத்துவதை தவிருங்கள்.

ப்ளோ ட்ரையரை பயன்படுத்திய பிறகு சீரம் பயன்படுத்துவதில்லை

ப்ளோ ட்ரையரை பயன்படுத்திய பிறகு சீரம் பயன்படுத்துவதில்லை

நிறைய பெண்கள் கூந்தலை ட்ரை செய்த பிறகு சீரம் உபயோகிப்பது இல்லை. இதனால் கூந்தல் பார்ப்பதற்கு வறண்டு போய் கடினமாக மற்றும் எப்பொழுதும் பறந்து கொண்டு பராமரிக்க கடினமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Blow Dryer Mistakes You Might Be Making

A blow dryer is one of those hair-styling tools that most of us use on a regular basis. Hair care experts have found that making certain blow dryer mistakes can damage your hair and lead to problems such as breakage and thinning of hair. You can be making one of these mistakes too.
Story first published: Monday, February 26, 2018, 19:10 [IST]