For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...

வாழை இலை பற்றிய சில முக்கிய தகவல்களும் பயன்பாடுகளும் பற்றி இங்கு விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.

|

வாழை இலைகள் இந்தோனேஷியா, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்த வாழை இலைகளை இப்பொழுது எல்லாம் நாம் எங்கும் காண முடியும். அந்தளவுக்கு அதன் பயன் பரந்து விரிந்து கிடக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வாழை மரம் அதிகமாக பயிரிடப்படுகிறது.

பொதுவாக வாழை இலைகள் உணவு சாப்பிடுவதற்கு, மருந்தாக, உடல் நல சிகச்சைக்கு, பூஜை படையலுக்கு இப்படி நிறைய பயன்களை தருகிறது. இந்த வாழை இலை நமது கூந்தல் பராமரிப்பிலும் பயன்படுவது நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழை இலையின் பயன்கள்

வாழை இலையின் பயன்கள்

வாழை இலை ஏராளமான நன்மைகளை தரும் ஒரு பொருள்ள. இது பார்ப்பதற்கு பெரிதாக, மடக்க கூடிய தன்மையுடன், நீர் ஒட்டாத தன்மையுடன் காணப்படுகிறது.

இதனால் தான் தமிழர்கள் விருந்து என்றாலே தழை வாழை இலை போட்டு தான் சாப்பிடுவார்கள். வாழை இலையில் உணவை வைத்து சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது.

பயன்பாடுகள்

பயன்பாடுகள்

ஆசியா மக்கள், பாலினேசியன், அமெரிக்கன் எல்லாரும் இந்த வாழை இலையில் வைத்து தான் உணவுப் பொருளை கெட்டுகின்றனர். காரணம் வாழை இலையில் மணம் உணவிற்கு கூடுதல் சுவையையும் மருத்துவ குணத்தையும் தருகிறது.

இந்து மதத்தில் மற்றும் புத்த மதத்தில் வாழை இலையில் வைத்து தான் கடவுளுக்கு பிரசாதம் படைக்கின்றனர். சரும பராமரிப்புக்கு மேனியை இந்த வாழை இலையை சுற்றித் தான் அழகு நிலையங்களில் சிகச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஏன் உடம்பு முழுவதும் தீக்காயம் பட்டால் கூட அவர்களை வாழை இலையின் தான் படுக்க வைப்பார்கள்.

MOST READ: மூக்கின் மேல் இப்படி அசிங்கமா இருக்கா? அட இத அப்ளை பண்ணுங்க சரியாகிடும்...

அற்புத பயன்கள் எபிகலோகேட்சின் கலேட் (இஜிசிஜி)

அற்புத பயன்கள் எபிகலோகேட்சின் கலேட் (இஜிசிஜி)

க்ரீன் டீ யில் இருப்பதை போன்று இது ஒரு பாலிபினால் ஆகும். வாழை இலையில் கிட்டத்தட்ட 3 பாலிபினால் வளைவுகளும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

வலிமையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

வலிமையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

Image Courtesy

வாழை இலையில் வலிமையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சருமம் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. அதே மாதிரி சரும புற்றுநோய், பக்கவாதம், ஆர்டியோஸ்கேலரிஸ், இதயம் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து நம்மை காக்கிறது.

சரும பாதுகாப்பு

சரும பாதுகாப்பு

எக்ஸிமா, வெயிலினால் ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றை இந்த வாழை இலை குணமாக்குகிறது. வெயிலினால் சரும பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் வாழை இலையை குளிர்ந்த நீரில் நனைத்து வைக்க வேண்டும். இதே மாதிரி வாழை இலையை உடம்பு முழுவதும் சுற்றி சிகச்சை அளிக்கின்றனர்.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு

கூந்தல் ஆரோக்கியத்திற்கு

வாழை இலை நமது தலையில் உள்ள பொடுகை போக்குகிறது. இந்த பொடுகுத் தொல்லை யால் முடி உதிர்தல், தலையில் அரிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே இந்த பிரச்சினைகளை போக்கி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் இதிலுள்ள அஸ்ட்ரிஜெண்ட் மற்றும் அலன்டோயின் பொருட்கள் கூந்தலுக்கு நல்ல நிறத்தை தருகிறது. வாழை இலை சாற்றை எடுத்து தலையில் மாஸ்க் போட்டு வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

MOST READ: இவ்ளோ கருப்பா இருக்கிற அக்குளையும் சரிசெய்யும் உருளைக்கிழங்கு... எப்படி அப்ளை பண்ணணும்?

சின்ன சின்ன சரும பிரச்சினைகள்

சின்ன சின்ன சரும பிரச்சினைகள்

இதன் மருத்துவ குணத்தால் ஏராளமான சரும பிரச்சினைகளுக்கு உதவுகிறது. சரும வடுக்கள், பூச்சு கடி, தேள் கடி, தேனீக்கள், எறும்பு மற்றும் எட்டுக்கால் பூச்சி கடியால் ஏற்பட்ட அரிப்பு போன்றவற்றை குணப்படுத்துகிறது. எனவே தான் இது இயற்கையான நோய் அழிப்பான் என்று அழைக்கப்படுகிறது. வாழை இலை சாறு பூச்சிகளை விரட்டி அடிக்கிறது.. எனவே தான் இதை பூச்சிகளை விரட்டி அடிக்கும் லோசன்களில் பயன்படுத்துகின்றனர்.

சரும வளர்ச்சி

சரும வளர்ச்சி

இதிலுள்ள அலன்டோனின் என்ற கெமிக்கல் பொருள் சரும வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் தான் அழகு சாதன க்ரீம்கள், லோசன்கள் என எல்லாவற்றிலும் வாழை இலையை பயன்படுத்துகிறார்கள். அலன்டோனின் சரும பாதிப்பை வேகமாக சரி செய்து சரும செல்களை குணப்படுத்துகிறது. அதே மாதிரி சரும பாதிப்புக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து சரும வளர்ச்சியை புதுப்பிக்கிறது.

உணவை கெடாமல் பாதுகாத்தல்

உணவை கெடாமல் பாதுகாத்தல்

வாழை இலை நிறைய நாடுகளில் உணவை கெட்டி கொடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இது உணவை பாதுகாப்பாக வைக்கவும், வாழை இலையின் நறுமணம் உணவோடு கலந்து சுவை அதிகரிக்கவும், உணவு தீஞ்சு போகாமல் இருக்கவும் உதவுகிறது.

MOST READ: உங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா? கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

நாம் உணவுகளை கட்டுவதற்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது சுற்றுப்புறத்தில் மட்கிக் போகாமல் மாசுவை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுவே வாழை இலைகள் இயற்கையோடு மண்ணில் மட்கி போய் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகி றது.

இயல்பாகவே தூய்மையானவை

இயல்பாகவே தூய்மையானவை

நாம் உணவை வைத்து சாப்பிட தட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகே உணவை எடுக்க முடியும். ஆனால் வாழை இலைகள் இயற்கையாகவே தூய்மையாக காணப்படுகிறது. லேசாக தண்ணீர் தெளித்து விட்டு உணவை வைத்து நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். காரணம் இயற்கையாகவே வாழை இலையில் கிருமிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்களை தடுக்கும் தன்மையுடன் காணப்படுகிறது. எனவே தான் வாழை இலைகள் எப்பொழுதும் தூய்மையானவை.

MOST READ: கண்டிஷ்னர் எதுவும் போடாமலே தலைமுடி பட்டுபோல பளபளக்கணுமா? அப்போ உடனே இத அப்ளை பண்ணுங்க...

கெமிக்கல் அற்றது

கெமிக்கல் அற்றது

Image Courtesy

வாழை இலைகள் கெமிக்கல் அற்ற இயற்கையான பொருள் என்பதால் உங்கள் கூந்தல் பராமரிப்புக்கு மிகவும் சிறந்தது. சாப்பிடும் தட்டை சுத்தம் செய்வது போன்று இதற்கு சோப்பு, டிடர்ஜெண்ட் தேவையில்லை. இதனால் கெமிக்கல்கள் கலக்காத உணவை வாழை இலையில் உண்ணலாம். எனவே தட்டிற்கு பதிலாக வாழை இலையை பயன்படுத்துவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Banana Leaf Benefits for Hair Treatment and more, You Won’t Believe It

these are some information and advantages of banana leaves, as well as banana leaf benefits for hair.
Story first published: Tuesday, October 16, 2018, 11:59 [IST]
Desktop Bottom Promotion