For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...!

அந்த காலத்தில் முனிவர்கள் பின்பற்றிய பல்வேறு ஆயுர்வேத முறைகள் முடி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் அற்புதமான தீர்வு தருகிறது. பொதுவாக ஆயர்வேதம் என்றாலே முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களாகவே அ

|

தலை முடி என்றாலே அனைவருக்கும் அது அழகு சேர்க்கும். ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் முடி மிக முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கு அது மன வருத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடியை பற்றி கவலைப்படும் பிரச்சினை இருக்கிறது. ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் அவர்களின் முடிகள் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைந்து விடுகிறது.

ayurvedic treatment for male pattern baldness

இதற்கு தீர்வாக எண்ணற்ற மருந்துகளையெல்லாம் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி அந்த கவலை வேண்டாம். அந்த காலத்தில் முனிவர்கள் பின்பற்றிய பல்வேறு ஆயுர்வேத முறைகள் முடி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் அற்புதமான தீர்வு தருகிறது. பொதுவாக ஆயர்வேதம் என்றாலே முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களாகவே அதில் நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் இந்த பதிவில் ஆயர்வேத முறையை எவ்வாறு வழுக்கை பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என்பதை இனி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பிரிங்கராஜ்

1. பிரிங்கராஜ்

"மூலிகைகளின் அரசன்" என்றே அழைக்கப்படும் இந்த பிரிங்கராஜ் பல மருத்துவ குணங்களை கொண்டது. வெறும் பெயரில் மட்டும் இது ராஜாவாக இல்லை. வழுக்கை பிரச்சினையை தீர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வழுக்கை தலையில் முடி வளர, 5 டேபிள்ஸ்பூன் பிரின்கராஜ் பவ்டருடன் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாற்றை கலந்து தலையில் தடவுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசினால் சொட்டை இருந்த இடத்தில் முடி வளரும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.

2. அஸ்வகந்தா

2. அஸ்வகந்தா

பல நன்மைகளை தனக்குள்ளே வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த அஸ்வகந்தா. ஹார்மோன் பிரச்சினையினால் முடி உதிரும் பலருக்கும் இது நல்ல நண்பன் போல உதவும். 3 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 3 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் வழுக்கை தலை, முடிகளுடன் காணப்படும்.

3. வெந்தயம்

3. வெந்தயம்

நம்ம வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த சிறிய விதைகள்தான் உங்கள் சொட்டை தலைக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இதில் அதிகம் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். அத்துடன் ஹார்மோன்களை சமநிலையில் வைத்து முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும். 3 டீஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பாலை கலக்கவும். இந்த கலவையை தலையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தடவினாலே சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்.

4. பிராமி

4. பிராமி

முடியின் வளர்ச்சிக்கு வேரில் இருந்து நல்ல ஆரோக்கியத்தை இந்த மூலிகைகள் தருகிறது. முடியின் போஷாக்கை அதிகரிக்கவும், பொடுகு தொல்லையை நீக்கவும் இது நன்கு பயன்படும். 2 டீஸ்பூன் பிராமி பவுடர், 2 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 1/2 கப் யோகர்ட் ஆகியவற்றை நன்றாக கலந்து முடியின் அடி வேரில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று, வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

5. சிகைக்காய்

5. சிகைக்காய்

தலை முடிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க கூடியது இந்த சிகைக்காய். இன்று நாம் பயன்படுத்தும் ஷாம்பூக்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இனி சிகைக்காய் பயன்படுத்தி பாருங்கள். எந்தவித முடி சார்ந்த பிரச்சினைகளும் உங்களுக்கு வராது. 6 டீஸ்பூன் சிகைக்காய் பவ்டருடன் 2 கப் நீர் சேர்த்து தலையில் தடவுங்கள். பின் 10 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். மேலும் சிகைக்காயை நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களுடனும் சேர்த்து தடவலாம்.

6. நெல்லிக்காய்

6. நெல்லிக்காய்

ஆயர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் மிக முதன்மையான இடத்தில் உள்ளது. இது உடலில் உள்ள பலவித நோய்களுக்கும் நல்ல தீர்வை தர வல்லது. 5 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை நீரில் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். பிறகு அதனை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் முடிகள் மீண்டும் வளர செய்யும். அத்துடன் தலையில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி முடி உதிர்வை தடுக்கும்.

7. வேப்பிலை

7. வேப்பிலை

மூலிகைகளில் அதிக வீரியம் கொண்டது இந்த வேப்பிலைதான். இது ஒரு நல்ல கிருமி நாசினியும்கூட. அடிக்கடி இதனை தலையில் தடவி வந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடியின் வளர்ச்சியும் கூடும். தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவற்றை நீங்கும் சக்தி இந்த வேப்பிலைக்கு உள்ளது. கை நிறைய வேப்பிலையை எடுத்து கொண்டு அதனை 2 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு 15 நிமிடம் கழித்து இறக்கவும். பிறகு குளிர வைத்து வடிகட்டி கொண்டு அதனை தலைக்கு அலசினால் நல்ல பலனை தரும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை தீர்ந்து, வழுக்கை இன்றி இருக்கலாம்.

8. ஆயுர்வேத எண்ணெய்

8. ஆயுர்வேத எண்ணெய்

தேங்காய் எண்ணெய், பிரிக்கராஜ் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு டீஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு குளிர வைத்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை குறைந்து, வழுக்கையில் முடி வளரும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Ayurvedic Remedies For Baldness & Hair Regrowth

Ayurveda believed in the power of mind, that mind and body are always connected, they say there is no other thing can overcome the power of mind.
Desktop Bottom Promotion