முடி வேகமாகவும் அடர்தியாவும் வளர இந்த எளிய முறையை டிரை பண்ணுங்க!

Written By:
Subscribe to Boldsky

தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் தலையில் உண்டாகும் சில பிரச்சனைகள் காரணமாக தலைமுடி உதிர்கிறது. தலைமுடி உதிர்வது சாதாரணமான ஒன்று தான் என்றாலும், அது அதிகமாக விழுந்து புதிய முடிகள் முளைக்காத போது நாம் தலைமுடி குறித்து சற்று அக்கறை எடுத்து தான் ஆக வேண்டும்.

காற்று மாசுபாடு காரணமாகவும், வேறு சில காரணங்களாலும் தலையில் பொடுகுத் தொல்லை உண்டாகிறது. தலையில் இருக்கும் பொடுகும் கூட தலைமுடி உதிர்வதற்கு காரணமாக அமையும். எனவே பொடுகின் காரணமாக தலைமுடி உதிர்ந்தால் அந்த பிரச்சனையை சரி செய்ய முயல வேண்டும். பொடுகு தலைமுடியை உதிர வைப்பதோடு மட்டுமில்லாமல் முகத்தின் அழகையும் கெடுக்கிறது. இந்த பகுதியில் தலைமுடி உதிர்வை தடுக்க என்ன செய்யலாம் என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணெய்

எண்ணெய்

மருதாணி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் போட வேண்டும். அது கொதித்து அடங்கிய பின் அதை எடுத்து விட்டு இன்னொரு கைப்பிடி மருதாணி இலைகளைப் போட்டு கொதிக்க விட வேண்டும். இப்படியாக மூன்று கைப்பிடி மருதாணி இலைகளை கொதிக்க விட்டு இறுதியாக மூன்று கைப்பிடி மருதாணி இலைகளையும் ஒன்றாகப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை ஆற வைத்து மருதாணி இலைகளை அகற்றி விட்டு, எண்ணெயை தடவி வந்தால் முடி உதிர்வு நிற்கும்.

முடி உதிர்வு நிற்க..

முடி உதிர்வு நிற்க..

சின்ன வெங்காயம், சீரகம், கருவேப்பிலை, கடுகு, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து. தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து அப்படியே பயன்படுத்தலாம். இதன் மூலம் முடி உதிர்வு நிற்பதோடு முடியின் கருமை மாறாமல் இருக்கும்.

இதை சாப்பிடுங்க..

இதை சாப்பிடுங்க..

கற்றாழையின் தோலை நீக்கி விட்டு சோற்றை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் வாரத்துக்கு இரண்டு முறை கற்றாழை சாப்பிட்டு வந்தோமேயானால் முடி உதிர்வு நிற்பதோடு கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படாது.

தேங்காய் எண்ணெயுடன்

தேங்காய் எண்ணெயுடன்

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து முளைகட்டிய பின், அதனை காய வைத்து பொடியாக்க வேண்டும். அந்தப் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.

முடி வளர:

முடி வளர:

தேங்காய் எண்ணையில் மருதாணி பூவை ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.

கீழாநெல்லி வேர்

கீழாநெல்லி வேர்

கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

பொடுகை தவிர்க்க:

பொடுகை தவிர்க்க:

வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத் தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

பேன், பொடுகு நீங்க

பேன், பொடுகு நீங்க

வேப்ப இலை மற்றும் துளசி இலையை பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர பேன் மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

முடி உதிர்வதை தடுக்க:

முடி உதிர்வதை தடுக்க:

வெந்தயம் மற்றும் குன்றிமணியை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

நரைமுடி கருப்பாக:

நரைமுடி கருப்பாக:

நரைமுடி கருப்பாக உதவும் கீரை முளைக்கீரை. அடிக்கடி சாப்பிடுங்கள்.

எண்ணெயுடன் நெல்லிக்கையை காயவைத்து, பவுடராக்கி, கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை கருப்பாகும்.

தேன் :

தேன் :

தேன் உங்கள் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து, வறட்சியை தடுக்கிறது. இதிலுள்ள விட்டமின்கள் முடிக்கு போஷாக்கு அளிக்கின்றது.

விளக்கெண்ணை

விளக்கெண்ணை

விளக்கெண்ணெய் முடி வளர்ச்சிக்கான சிறந்த எண்ணெய். அது கூந்தலை கருமையாக்குகிறது. அடர்த்தியை தருகிறது.

கருமைக்கு

கருமைக்கு

5 மில்லி தண்ணீரில் அதிமதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துபின் குளிக்க முடி கருப்பாகி மினுமினுப்பாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

simple hair care tips for long and strong hair

simple hair care tips for long and strong hair
Story first published: Saturday, November 11, 2017, 9:38 [IST]