வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க...

Posted By:
Subscribe to Boldsky

வழுக்கை மற்றும் முடி உதிர்வால் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனைகளுக்கு மூலிகை எண்ணெய் என்ற பெயரில் பல எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அந்த எண்ணெய்களில் முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு நிச்சயம் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும்.

Put a Few Drops of This Syrup on Your Scalp and Wait to See All Your Lost Hair Grow Back… Awesome!

கெமிக்கல்களின் உதவியுடன் கிடைக்கும் எந்த ஒரு நிவாரணமும் நிரந்தர பலனை அளிக்காது. ஆகவே நமக்குள்ள தலைமுடி பிரச்சனைகளுக்கு நம் முன்னோர்கள் மேற்கொண்ட இயற்கை மூலிகை எண்ணெய்கள் நல்ல தீர்வைத் தரும். இங்கு வழுக்கை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கான ஓர் அற்புதமான மூலிகை எண்ணெயின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

விளக்கெண்ணெய் - 50 மிலி
தேங்காய் எண்ணெய்- 20 மிலி
ரோஸ்மேரி எண்ணெய் - 10 மிலி
லாவெண்டர் எண்ணெய் - 5 மிலி

செய்முறை:

செய்முறை:

முதலில் ஒரு சிறு டப்பாவில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை சேர்த்து டப்பாவை மூடி நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது எண்ணெய் தயார்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெய் கலவையை தினமும் 2-3 முறை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், 2 வாரங்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

மூலிகை எண்ணெயின் சிறப்பு

மூலிகை எண்ணெயின் சிறப்பு

இந்த மூலிகை எண்ணெய் மயிர்கால்களின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர ஊக்குவிக்கும். இதனால் தலைமுடியின் அடர்த்தியும் அதிகரிக்கும்.

குறிப்பு

குறிப்பு

இந்த எண்ணெயை தலைக்கு தடவுவதால் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் தலைக்கு குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய் முற்றிலும் வெளியேறி, ஸ்கால்ப்பின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். மேலும் இந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Put a Few Drops of This Syrup on Your Scalp and Wait to See All Your Lost Hair Grow Back… Awesome!

This serum is like a magic potion, which helps stimulate hair growth very fast. No more to hair loss and baldness.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter