இந்த 10 வகையான பராமரிப்பில் இழந்த முடியை மீண்டும் பெறலாம்! எப்படி தெரியுமா?

Written By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நமது இந்தியப் பெண்களிடையே நீண்ட கூந்தல், குட்டையான கூந்தல், சுருள் முடி, நேரான கூந்தல், வறண்ட கூந்தல் என பலதரப்பட்ட கூந்தல் வகைகள் காணப்படுகின்றனர். அந்தக் காலத்து அம்மாக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நீளமான கூந்தல் வளர்த்து அழகு பார்த்தனர். ஆனால் இந்த காலத்தில் பெண்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு தகுந்தார் போல் தங்களது கூந்தலை மாற்றிக் கொள்கின்றனர். நீண்ட வேலை நேரம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் அவர்களின் கூந்தல் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

 Must-have Hair Products For Every Working Woman In India

மூன்று மணி நேரம் சலூன் சென்று செலவழித்தாலோ அல்லது கிச்சன் பொருட்களை கொண்டோ தங்களை அழகு படுத்திக் கொள்ளும் குறுகிய வட்டத்தில் இருக்கின்றனர்.

எல்லாரும் ராப்புன்ஷல் கதாபாத்திரப் பெண் போல் நீளமான கூந்தல் கிடைக்க ஒரு அதிசயம் நடக்காத என்று ஏங்காத நாளும் இல்லை. மேலும் அவர்கள் ஆன்லைனில் அழகு சாதனப் பொருட்கள் வாங்கி பணம் செலவழிப்பதை அவர்கள் விரும்புவதில்லை.

அவர்கள் வீட்டில் இருக்கும் எண்ணெய் மற்றும் ஷாம்பு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது எல்லாம் நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன .

இவற்றை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. உங்களுக்கு தகுந்த பிராண்ட் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே வேலைக்கு போகும் பெண்களின் கூந்தல் பராமரிப்புக்காக மிகவும் அத்தியாவசியமான சில பொருட்களை பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.ஹேர் கன்டிஷனர் :

1.ஹேர் கன்டிஷனர் :

நீங்கள் ஷாம்பு பயன்படுத்தினால் முடியில் இருக்கும் எண்ணெய் பசை மட்டும் தான் போகும். ஆனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கன்டிஷனர் தேவை.

தினமும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு கன்டிஷனர் பயன்படுத்தினால் மிருதுவான மற்றும் அலங்கரிக்க ஏதுவான கூந்தல் கிடைக்கும்.

நீங்கள் கன்டிஷனரை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் ஷாம்பு பிராண்ட் கன்டிஷனரை அல்லது உங்கள் கூந்தல் ஸ்டைல்லிஸ்ட் இடம் ஆலோசனை பெற்று தேர்ந்தெடுக்கலாம்.

2.ஹேர் வேக்ஸ் :

2.ஹேர் வேக்ஸ் :

நீங்கள் நீண்ட நேரம் வேலை பார்ப்பவரா இருந்தால் கண்டிப்பாக அந்த நாள் இறுதியில் கூந்தல் கலைந்து போகும். இந்த பிரச்சினை நிறைய பெண்களிடம் உள்ளது. எனவே இதற்கு நீங்கள் ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் நல்ல வித்தியாசத்தை காண்பீர்கள். கொஞ்சம் ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் போதும் உங்கள் கூந்தல் அதிசயிக்கும் படி அழகாக கலையாமல் இருக்கும்.

3.வறண்ட கூந்தலுக்கான ஷாம்பு :

3.வறண்ட கூந்தலுக்கான ஷாம்பு :

உங்களது முகம் மற்றும் கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டால் அது எண்ணெய் பசையுள்ள கூந்தலாகும். இதற்கு நீங்கள் தனியாக பராமரிப்பு செய்ய நேரம் கிடைக்காது.

இதற்கு ஒரே தீர்வு வறண்ட கூந்தல் ஷாம்பு இதை நீங்கள் நேரடியாக பயன்படுத்தினால் கூந்தல் அழகாக மாறும். நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது கூட கைக்கு அடக்கமான ஷாம்பு பாட்டில் வாங்கி கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4. ஹேர் வால்யுமரைசர் :

4. ஹேர் வால்யுமரைசர் :

இன்று இந்திய பெண்கள் சந்திக்கும் ஒரே பிரச்சினை கூந்தல் உதிர்தல். நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் காலநிலை மாற்றம் உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் நாளுக்கு நாள் அதிகரித்து விடும்.

இதை சரி செய்ய ஹேர் வாளியுமரைசரை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த வாளியுமரைசர் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கிறது.

ஷாம்பு போட்ட பிறகு இதை பயன்படுத்தினால் கூந்தல் அழகாக அடர்த்தியாக காணப்படும். மேலும் இது வறண்ட சிக்கலான கூந்தலை சமாளிக்கவும் உதவுகிறது.

5.ஹேர் சீரம் :

5.ஹேர் சீரம் :

இது அமினோ அமிலங்கள், சிலிக்கான் மற்றும் செராமைடு போன்றவற்றால் ஆனது. இதை ஈரமான தலைமுடியில் வேரில் படும் படி தடவினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டி விடுகிறது. ஹேர் ஸ்சீரம் பயன்படுத்தினால் கன்டிஷனர் தேவையில்லை.

6.ஹேர் மாஸ்க் மற்றும் க்ரீம்கள்:

6.ஹேர் மாஸ்க் மற்றும் க்ரீம்கள்:

உங்களது நீளமான கூந்தல் என்றால் அதை முழுமையாக பராமரிக்க நீண்ட நேரம் தேவைப்படும். ஆயில் மற்றும் ஷாம்பு அதன் வேரை சென்றடைய நீண்ட நேரம் ஆகும்.

எனவே இதற்கு ஹேர் மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் எளிதில் முடியின் வேருக்கு சென்று நல்ல பலனை தரும். மேலும் மூலிகை மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் அதிகமான பலனை பெறலாம்.

7.ஹேர் ஸ்பிரே :

7.ஹேர் ஸ்பிரே :

நாம் ஒவ்வொரு வரும் முடியை அழகாக ஸ்டைல் பண்ணுவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளவோம். ஆனால் அந்த ஸ்டைல் எல்லாம் கொஞ்ச நேரத்தில் காணாமல் கலைந்து போகும்.

எனவே இந்த ஹேர் ஸ்பிரே பயன்படுத்தினால் உங்கள் ஸ்டைல் கலையாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். பிளைட் மற்றும் போனி ஹேர் ஸ்டைல்க்கு இந்த ஹேர் ஸ்பிரே மிகவும் அழகாக கச்சிதமாக இருக்கும்.

8.ஹேர் பவுடர் :

8.ஹேர் பவுடர் :

நம் முகம் அழகாக தெரிய பவுடர் பயன்படுத்துகிறோம். ஆனால் ஏன் நம் கூந்தலுக்கு மட்டும் பவுடர் பயன்படுத்துவதில்லை. உண்மையில் கூந்தலுக்கு பவுடர் பயன்படுத்தினால் நல்லது.

ஆனால் இதற்கு ஹேர் பவுடரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாதாரண முகப் பவுடரை பயன்படுத்தக் கூடாது. உங்களுக்கு தேவையான குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். ஸ்பெஷல் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தினால் பார்ப்பதற்கு அழகாகவும் நறுமணம் கமழும்.

9.ஹேர் பட்டர் :

9.ஹேர் பட்டர் :

முடிக்கு தேவையான வழுவழுப்பு தன்மை எண்ணெய் கொண்டு குளிப்பதால் கிடைப்பது இல்லை. எனவே உங்களுக்கு பிடித்த நறுமணமுள்ள ஹேர் பட்டரை பயன்படுத்தினால் உங்கள் கூந்தல் பட்டு போன்று வழுவழுக்கும். இதை தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம் அல்லது மசாஜ் செய்தால் அதிகமான பலன் கிடைக்கும்.

10.ஹேர் ஜெல் :

10.ஹேர் ஜெல் :

பெண்கள் மத்தியில் ஆண்கள் தான் ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில் பெண்களும் தங்கள் கூந்தலுக்கு ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.

இதை குறைந்த அளவு பயன்படுத்தினால் போதுமானது. முதலில் சிறிது எடுத்து பயன்படுத்தி பார்த்துக் கொண்டு பிறகு தேவைக்கேற்ப அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்ய வேண்டும்.

என்னங்க இந்த டிப்ஸ்யை பயன்படுத்தி உங்கள் கூந்தலை அழகாக மாற்றி வேலை இடத்தில் ஜொலியுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Must-have Hair Products For Every Working Woman In India

Must-have Hair Products For Every Working Woman In India
Story first published: Monday, June 19, 2017, 15:26 [IST]
Subscribe Newsletter