For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் மற்றும் வெந்தயத்தை முடிக்கு இப்படி பயன்படுத்தி இருக்கீங்களா?

By Lakshmi
|

எந்தப் பொருளையும் ஆரோக்கியமாக அழகாக பராமரிக்க வேண்டும் என்றால் நீங்கள் சிரத்தை எடுத்துக்கொள்வது அவசியம். அழகை பராமரிக்க என்றால் எல்லாரும் சருமத்தை மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் கவனிக்க மறந்துவிடுகிற ஓன்று தலைமுடி.தலைமுடியில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால், மாற்றங்கள் ஏற்ப்பட்டால் மட்டுமே தலைமுடியை கவனிக்கிறோம். நிறைய வேலைகள் இழுக்கும் என்றே பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். அதோடு அதிக செலவாகுமே என்ற பயமும் இருக்கும்.இனி அந்தக் கவலை எதுவும் தேவையில்லை. வீட்டிலிருக்கும் ஒரு பொருளைக்கொண்டு தலைமுடியை எளிதாக பராமரிக்கலாம். பால், எல்லார் வீடுகளிலும் இருக்கும். இந்தப் பாலைக்கொண்டு உங்களின் தலைமுடியை எளிதாக பராமரிக்க சில குறிப்புகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பாலில் இரண்டு விதமான ப்ரோட்டீன் இருக்கிறது. வே( whey) மற்றும் கேசின் (caesin) இவை உங்கள் தலைமுடிக்க மிகுந்த ஆரோக்கியத்தை கொடுத்திடும். ப்ரோட்டீன் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் தலைமுடி வலுவிலக்கும். உங்களது ஆரோக்கியத்தை பொறுத்தே தலைமுடியின் ஆரோக்கியமும் இருக்கும் என்பதால் நேரடியாக தலைமுடிக்கு ஊட்டச்சத்து ஏற்ற வேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து

தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம், போதிய ஊட்டச்சத்து இன்றி தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது தான். இதனை தவிர்க்க முட்டை, தேன் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இது தலையின் வேர்கால்களை வலுப்படுத்தும்.

முடி வளர்ச்சி

முடி வளர்ச்சி

முடியை உதிராமல் தடுத்தால் மட்டும் போதாது, புதிய முடியையின் வளர்ச்சியும் நமக்கு அவசியம். பாலில் அதிகப்படியான க்ளுடமைன் எனப்படுகின்ற ஒரு வகையான அமினோ அமிலம் இருக்கிறது. இது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

ஸ்ட்ரைட்னிங்

ஸ்ட்ரைட்னிங்

பாலைக் கொண்டு முடியை ஸ்ட்ரையிட்னிங் செய்ய முடியும். முக்கால் கப் பாலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். சாதாரண பால் பயன்படுத்தலாம், அல்லது தேங்காய் பால் பயன்படுத்தினால் இன்னும் சீக்கிரமாக பலன் கிடைக்கும். தலை முழுவதும் அந்தப் பாலை ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

மசாஜ்

மசாஜ்

முடியின் எல்லா பகுதிகளிலும் பால் சேருமாறு ஸ்ப்ரே செய்து தலைக்கு மசாஜ் செய்திடுங்கள். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் ஹேர்பேக்காக போட பயன்படுத்தலாம். ஒரு மணி நேரம் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள். ஷாம்பு போட்டு தலைக்குளித்தால் பால் வாசனை வராது.

வெந்தயம்

வெந்தயம்

இரவில் படுக்கைக்கு போகும் முன் கையளவு வெந்தயத்தை எடுத்து சிறிய பாத்திரத்தில் குடிக்கும் நீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இரவில் மறந்து விட்டாலும் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்தால் போதுமானது.

ஊற வைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து தலையில் தடவ வேண்டும். தலை முடியின் வேர் கால்களில் படும்படி தடவினால் சால சிறந்தது. தலையில் தடவிய பின் நீங்களே வெந்தயத்தின் குளிர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக உணர முடியும். சிறிது நேரம் கழித்து குளித்து விடலாம். குளிக்கும் போது வெந்தயத்தை தலையில் இருந்து நன்கு அலசி விட வேண்டும். இல்லையெனில் குளித்து முடித்த பின் ஆங்காங்கே வெள்ளை பொடி போன்று தலையில் தெரியும்.

தினமும் இதை செய்வது முடி வளருவதை சிறப்பாக ஊக்குவிக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது வெந்தய குளியல் முடி வளர்ச்சிக்கு கண்டிப்பானது. வெந்தய மருத்துவம் குளிர்ச்சியான மருத்துவம். அதனால் சளி பிடித்த நாட்களில் வெந்தய குளியலை தவிர்த்து விடுங்கள்.

அழுத்தம்

அழுத்தம்

குளிக்கும் போதோ அல்லது தலைமுடியை காய வைக்கும் போதோ தலைமுடிக்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் முடி உதிர்வு ஏற்படும். இதற்கு லேசான காட்டன் துணியை பயன்படுத்தினாலே போதும்.

ஹேர் ஜெல்

ஹேர் ஜெல்

தலைக்கு குளித்த பின்னர் ஹேர் ஜெல்லை தலைமுடி காய்வதற்கு முன்னர் தடவி வருகின்றனர். இதன் காரணமாகவும் முடி உதிர்கிறது. பொதுவாகவே கேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குளிப்பதன் மூலம் தலைமுடி உதிர்வு குறையும். ஆனால் இதை தினமும் செய்தால் முடியில் வறட்சி ஏற்படக் கூடும்.

கொய்யா இலை

கொய்யா இலை

கொய்யா இலையை அரைத்து இரவு தூங்குவதற்கு முன் தலையில் தடவி மறுநாள் காலையில் அலசினால் முடி உதிர்தல் குறையும்.

முள்ளங்கி சாறு

முள்ளங்கி சாறு

முள்ளங்கி சாறை தலையின் அடியில் படுமாறு தடவி வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில்

கேஸ்டைல் சோப்புடன் நீர் சேர்த்து ஆப்பிள் சீடர் வினிகர், தேயிலை மர எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலக்கவும். பின்பு இதை தலையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் முடி உதிர்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

புரோட்டின்

புரோட்டின்

முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to use milk for long and strong hair

how to use milk for long and strong hair
Story first published: Saturday, October 21, 2017, 16:10 [IST]
Desktop Bottom Promotion