அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது?

Written By:
Subscribe to Boldsky

செம்பருத்தி எண்ணெய் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடி மீண்டும் வளர, அடர்த்தியான முடியை பெற, கூந்தல் ஆரோக்கியம் என அனைத்து வகையிலும் உதவியாக இருக்க கூடியது. இந்த எண்ணெய் முடி வளர்ச்சிக்கும், முடி உதிர்வுக்கும் நல்ல பலனை கண்கூடாக தரக்கூடியது.

மேலும் நீங்கள் சந்தைகளில் வாங்கும் எண்ணெய்கள், இயற்கையானதா என்பது பற்றி உங்களுக்கு தெரியாது. ஆனால் வீட்டிலேயே செய்யக்கூடிய எண்ணெய்யின் தரம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செம்பருத்தி பூ மற்றும் இலை

செம்பருத்தி பூ மற்றும் இலை

இந்த எண்ணெய்யை செய்வதற்கு உங்களுக்கு பிரஷ் ஆன செம்பருத்தி பூ மற்றும் இலை தேவைப்படும். சில செம்பருத்தி பூக்களையும், இலைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

அரைத்த விழுதுகளை தேங்காய் எண்ணெய்யில் போட வேண்டும். இதனை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். செம்பருத்தி நன்றாக வேக வேண்டும்.

வேப்பிலை

வேப்பிலை

உங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால், செம்பருத்தி நன்றாக வேந்த உடன், அதில் சிறிதளவு வேப்பிலையை போட வேண்டும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

முடி உதிர்வு மற்றும் முடி நன்றாக வளர இதில் சிறிதளவு கறிவேப்பிலையை போட வேண்டும். கறிவேப்பில்லை மற்றும் வேப்பிலை இரண்டையுமே சேர்த்தால் மிகவும் நன்று.

பாட்டிலில் ஊற்றவும்

பாட்டிலில் ஊற்றவும்

செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை போன்றவை நன்றாக எண்ணெய்யில் கலந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும். எண்ணெய்யை நன்றாக ஆற வைத்து பாட்டிலில் ஊற்றி விட வேண்டும்.

பயன்படுத்தும் காலம்

பயன்படுத்தும் காலம்

இந்த எண்ணெய்யின் மனம் மாறினாலோ அல்லது கெட்ட வாசனை அடித்தாலோ இதன் ஆயுள் காலம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். அதற்கு பின் இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

எப்படி பயன்படுத்த வேண்டும்?

இந்த எண்ணெய்யை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்து காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். அல்லது தலைக்கு குளிப்பதற்கு அரை மணிநேரம் முன்னர் தலையில் போட்டு மசாஜ் செய்து பின்னர் குளிக்கலாம்.

நீங்கள் இதனை தினசரி பயன்படுத்தும் எண்ணெய்யாக கூட பயன்படுத்தலாம். இதனை வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது உபயோகப்படுத்த வேண்டும். இதனை ஆண்களும் பயன்படுத்தலாம்.

பயன்கள்

பயன்கள்

1. செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும்.

2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.

3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.

4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது.

5. நரைமுடியை போக்கும்

6. தலை அரிப்பை தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Prepare Homemade Hibiscus hair oil

How to Prepare Homemade Hibiscus hair oil
Story first published: Tuesday, August 1, 2017, 14:56 [IST]
Subscribe Newsletter