சுமாராய் தெரியும் கூந்தலை எப்படி சூப்பரான தோற்றத்திற்கு மாற்றலாம்? இதப் படிங்க

Written By:
Subscribe to Boldsky

கூந்தல் அழகு தனி அழகு. இதிகாசம், இலக்கியங்களில் கூந்தல் அழகு இடம் பெற்றிருக்கிறது. கூந்தல் நீளமாக இல்லாவிட்டாலும் பரவாயிலை. அழகாய் இருகக் வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு நாம் வந்துவிட்டோம்.

அதற்கு என்ன செய்யலாம். இதோ உங்களுக்காக பாட்டி வைத்தியங்கள். பின்பற்றுங்கள். எல்லாமே பலன் தரக் கூடியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கஞ்சி :

கஞ்சி :

சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.

பிசுபிசுப்பிற்கு :

பிசுபிசுப்பிற்கு :

ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

நரைமுடி மறைய :

நரைமுடி மறைய :

சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

 கலரிங்க் செய்தால் இதை செய்யவும் :

கலரிங்க் செய்தால் இதை செய்யவும் :

அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும்.

இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.

கூந்தல் உதிர்விற்கு :

கூந்தல் உதிர்விற்கு :

அதிமதுரத்தை இடித்து பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to grow hair healthier in a natural way.

Home remedies to grow hair healthier in a natural way.
Story first published: Saturday, January 28, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter