For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! அடர்த்தியான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமா? அப்ப இதெல்லாம் செய்யுங்க...

தலைமுடியை வலிமையாக்கும் மற்றும் அடர்த்தியாக்கும் சில நேச்சுரல் புரோட்டீன் ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

தலைமுடி பலவீனமாக இருந்தால் முடி அதிகம் உதிர்வதோடு, உடையவும் செய்யும். தலைமுடிக்கு போதிய பராமரிப்பு கொடுக்காமல் இருந்தாலும், இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஒருவருக்கு தலைமுடி ஆரோக்கியமாக இருந்தால் தான், அது ஒருவருக்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.

தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க, அவ்வப்போது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில ஹேர் மாஸ்க்குகளைப் போட வேண்டும். முக்கியமாக புரோட்டீன் குறைபாட்டினால் தலைமுடி அதிகளவு உதிர்வதால், இச்சத்துக்கள் நிறைந்த பொருட்களால் தலைமுடிக்கு மாஸ்க் போடுவது நல்லது.

புரோட்டீன் நிறைந்த ஹேர் மாஸ்க்குகள் தலைமுடி உதிர்வதைத் தடுத்து வலிமையடையச் செய்வதோடு, அடர்த்தியாக்கவும் செய்யும். அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த புரோட்டீன் ஹேர் மாஸ்க்குகளைப் போடாமல், நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களால் தலைக்கு மாஸ்க் போடுங்கள்.

கீழே தலைமுடியை வலிமையாக்கும் மற்றும் அடர்த்தியாக்கும் சில நேச்சுரல் புரோட்டீன் ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து விடுமுறை நாட்களில் பயன்படுத்தி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்

முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்

* ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 2-3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை ஸ்கால்ப் மற்றும் தலைமுடி முழுவதும் படும் படி நன்கு தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

அவகேடோ மற்றும் க்ரீன் டீ மாஸ்க்

அவகேடோ மற்றும் க்ரீன் டீ மாஸ்க்

* ஒரு அவகேடோ பழத்தை மசித்து, அதில் க்ரீன் டீ சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலையை அலசுங்கள்.

* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளுங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

மயோனைஸ் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

மயோனைஸ் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

* ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதை தலை முழுவதும் தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முடியை நன்கு அலச வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை மேற்கொண்டால், தலைமுடி நன்கு வலிமையாகவும், அடர்த்தியாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில் மற்றும் வாழைப்பழ மாஸ்க்

ஆலிவ் ஆயில் மற்றும் வாழைப்பழ மாஸ்க்

* அடுத்ததாக 3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் 5-6 டேபிள் ஸ்பூன் மசித்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

* பின் அதை தலையில் தடவி 40 நிமிடம் நன்கு ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள, முடி வளர்வதோடு, அடர்த்தியும் ஆகும்.

பாதாம் எண்ணெய் மற்றும் நெல்லி மாஸ்க்

பாதாம் எண்ணெய் மற்றும் நெல்லி மாஸ்க்

* 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றினை கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த கலவையை தலை முழுவதும் மயிர்கால்களில் படும்படி தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து ஷாம்பு போட்டு அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கை மாதத்திற்கு 2 முறை மேற்கொள்ள, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

தேங்காய் பால் மற்றும் வெந்தய மாஸ்க்

தேங்காய் பால் மற்றும் வெந்தய மாஸ்க்

* 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலுடன் 1 டீஸ்பூன் வெந்தய பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஸ்கால்ப்பில் படும் படி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள, தலைமுடி நீளமாகவும், வலிமையாகவும் இருக்கும்.

தயிர் மற்றும் தேன் மாஸ்க்

தயிர் மற்றும் தேன் மாஸ்க்

* 2 டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 40 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

* இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் ஒரு முறை மேற்கொள்ள, தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மில்க் க்ரீம் மற்றும் கற்றாழை ஜெல்

மில்க் க்ரீம் மற்றும் கற்றாழை ஜெல்

* 2 டீஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி நன்கு ஊற வைத்து, 40 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு தலையை குளிர்ந்த நீரில் அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு போட்டால், அதில் உள்ள புரோட்டீன் தலைமுடிக்கு கிடைத்து, முடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Protein-rich Packs For Long And Strong Hair

Check out some of the protein-rich hair packs that go way beyond treating hair loss and try them out.
Story first published: Sunday, December 3, 2017, 14:12 [IST]
Desktop Bottom Promotion