தலையில் அரிப்பா? குணப்படுத்த ஈஸி வழிகள்!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

 அலுவலக மீட்டிங்கில் உட்கார்ந்து சீரியசாக பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் தலையை சொரிந்தால் எப்படி இருக்கும். அவர் மீதான மதிப்பு மரியாதையுமே குறைந்திடும். எவ்வளவு தான் அரிக்காமல் இருக்க முயற்சி செய்தும் கடைசி நேரத்தில் தலையில் கை வைத்துவிடுகிறீர்களா? இதனை கடைபிடித்து பாருங்கள்.

Home Remedies For Itching Scalp

அதற்கான சிகிச்சை முறைகளை எடுப்பதற்கு முன்னால் என்ன காரணத்திற்காக அரிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு பொடுகு, அதிக வியர்வை, அலர்ஜி, பயன்படுத்திய எண்ணெய் அல்லது ஷாம்பு ஒவ்வாமை, தலையில் அதிகப்படியான வறட்சி,பேன். இவற்றில் ஏதாவது ஒன்று தான் காரணமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தயம் :

வெந்தயம் :

ஒரு கைப்பிடியளவு வெந்தயத்தை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். மறுநாள் காலை அதைத் தலையில் தேய்த்து குளித்துவிடுங்கள். தலையில் அலர்ஜி, கிருமித் தொற்று ஏதேனும் இருந்தால் இது தீர்த்திடும் வறட்சி ஏற்படாமல் தவிர்த்திடும். அதோடு பொடுகையும் வராமல் தடுக்கும்.

வேப்ப இலை :

வேப்ப இலை :

வேப்ப இலையில் இயற்கையாகவே ஆன்ட்டி பேக்டீரியாக்கள் இருக்கின்றன. அவை நோய்த் தொற்று வராமல் தடுத்திடும். வேப்பிலையோடு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள் பின்னர் அதனை தலையில் தேய்த்து காய்ந்ததும் அதிக கெமிக்கல் சேராத மைல்டான ஷாம்பு கொண்டு தலையை கழுவிடுங்கள்.

துளசி :

துளசி :

தலையில் ஏதேனும் அலர்ஜி இருந்தாலோ அல்லது அதிகப்படியான வறட்சி இருந்தாலோ இதனைப் பயன்படுத்தலாம். சிறிது நல்லெண்ணெயுடன் துளிசியை போட்டு சூடேற்றுங்கள். நன்றாக சூடானதும் அதில் சிறிது வெந்தையத்தை தூவுங்கள். அது பொரிந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். பின்னர் அதனை ஆற வைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறிய பின்னர் தலைக்கு குளிக்கலாம்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

பெரும்பாலானோர் தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள் வெறும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்ப்பதை விட லேசாக சூடேற்றி வெதுவெதுப்பாக தலைக்கு தேய்த்து குளிக்கலாம். தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்கும் முன்னர் உங்கள் தலையில் அதிக வியர்வை இருக்கிறதா என்று பாருங்கள். அதிக வியர்வை இருந்தால் தேங்காய் எண்ணெயை தவிர்த்திடுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் :

ஆப்பிள் சீடர் வினிகர் :

அதிகமாக அரிப்பு இருந்தால் இதனை பயன்படுத்துங்கள். இது வறட்சி வராமல் தடுப்பதுடன் பிஎச் அளவை பேலன்சிங்காக வைத்திருக்கும். தலையில் இருக்கும் தேவையற்ற பாக்டீரியாக்களையும் அழித்திடும். இதை பயன்படுத்துவதற்கு முன்னர் தலையை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள் பின்னர் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவு கலந்து கொள்ளுங்கள். அதனை தலைக்கு எல்லா புறமும் வருமாறு தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்கு குளியுங்கள்.

கற்றாழை :

கற்றாழை :

அதிகப்படியான தண்ணீர் மற்றும் க்ளைகோ ப்ரோட்டீன்ஸ் நிரம்பியிருக்கும் இது நம் சருமத்திற்கு மட்டுமல்ல தலைக்கும் மிகவும் நல்லது. கற்றாழை ஜெல் எடுத்து தலையில் அப்ளை செய்து 10 நிமிடம் ஊறிய பின்னர் கழுவி விடலாம். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் வரை தினமும் இதனைச் செய்யலாம்.

லெமன் ஜூஸ் :

லெமன் ஜூஸ் :

இதில் அதிகப்படியான சுத்தப்படுத்தும் பொருட்கள் உள்ளன. தலையில் வறட்சி ஏற்பட காரணமான சீபம் சுரக்காமல் தடுத்திடும். இதை அப்படியே தேய்த்திடலாம். அல்லது லெமன் ஜூஸுடன் ஃபிரஷ்ஷான தயிர் கலந்து தலையில் தேய்த்திடுங்கள் 15 நிமிடங்கள் ஊறிய பின்னர் தலையை அலசிடுங்கள். வாரம் இருமுறை இதனைச் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: beauty, haircare, tips, home remedies
English summary

Home Remedies For Itching Scalp

Learn How to get rid of itchy scalp with ingredients available in home.
Story first published: Monday, July 17, 2017, 14:26 [IST]
Subscribe Newsletter