முடியை மேல் நோக்கி சீவுவதால் நீங்கள் சீக்கிரம் சொட்டை ஆகலாம்!

Written By:
Subscribe to Boldsky

முடியை விதவிதமாக அலங்கரித்துக்கொள்வது இன்று ஃபேஷனாகிவிட்டது. காலையில் தலைக்கு குளித்து, முடியை ஸ்டைலிஷ் செய்து பின்னர் தலைவாரிக்கொள்கின்றோம். மேலும் இரவு நேரத்தில் தலைமுடியை அவிழ்த்து ஒரு பேண்ட் போட்டுக்கொள்வது அனைவரும் செய்யும் ஒன்று தான். அதே சமயம் நாம் செய்யும் தினசரி நடவடிக்கைகள் மற்றும் ஹேர் ஸ்டைலிஷ் விசயங்கள் முடியை தொல்லை செய்யாதவாறு இருக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேர்ப்பகுதிகள்

வேர்ப்பகுதிகள்

தினமும் குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்துவிடுகின்றன. இதனால் தலைமுடி அதிகமாக உதிர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

நீண்ட நேரம் தலை சீவுதல்

நீண்ட நேரம் தலை சீவுதல்

நீண்ட நேரம் தலைசீவிக் கொண்டே இருப்பது தவறான ஒன்றாகும். இதனால் தலைமுடி உடைவதற்கும், முடியின் வேர்க்கால்கள் வழுவிழந்து போவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இறுக்கமாக இருப்பது

இறுக்கமாக இருப்பது

குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால், முடியானது இறுக்கிப்பிடிக்கப்படுகிறது. இதே போல் தொடர்ச்சியான இறுக்கம் இருந்தால், முடி உதிர்வதற்கு அதிமான வாய்ப்புகள் உள்ளது.

வழுக்கை

வழுக்கை

குதிரை வால் ஹேர் ஸ்டைல் செய்வதால் முடி மிகவும் இறுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மேல் நோக்கி சீவுவதால், முடி அதிகமாக உதிர்கிறது. இதனால் முடி படிப்படியாக பின் நோக்கி சென்று கொண்டே இருப்பதால் முன் வழுக்கையும் உண்டாகிறது.

ஈரத்தலையுடன் தலைசீவுதல்

ஈரத்தலையுடன் தலைசீவுதல்

தலைக்கு குளித்துவிட்டு வந்த உடன் தலைசீவுவது கூடாது. ஏனெனில் நீர்பட்டதும், தலைமுடியானது வழுவிழந்து காணப்படும். அந்த நேரத்தில் தலைசீவினால், முடி அதிகமாக உதிரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

hair up may be cause of baldness

hair up may be cause of baldness
Story first published: Tuesday, September 12, 2017, 17:49 [IST]
Subscribe Newsletter