சீக்கிரமாக முடி வளர இந்த மூன்று பொருட்கள் உங்ககிட்ட இருந்தா போதும்!

Posted By:
Subscribe to Boldsky

முடி உதிர்தல் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. முடிக்கு தொடர்ந்து அதிகளவு ஷாம்புக்கள் மற்றும் கண்டிஸ்னர்களை உபயோகிக்கும் போது அவற்றில் உள்ள கெமிக்கல்கள் முடியை சேதப்படுத்துகின்றன. இதனால் முடி வறட்சி, முடி உதிர்தல், தலையில் அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு இயற்கை பொருட்கள் மட்டுமே மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

முட்டை முடி உதிர்வு பிரச்சனை மற்றும் பொடுகு பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. வெள்ளைக்கருவில் விட்டமின் ஏ, பி, டி மற்றும் இ ஆகியவை உள்ளன. முட்டையின் வெள்ளைக்கருவானது முடிக்கு கண்டிஸ்னராகவும் பயன்படுகிறது. முட்டையை முடிக்கு பயன்படுத்துவதால் முடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.

தேன்

தேன்

தேன் வறண்ட, சேதமடைந்த கூந்தலுக்கு உதவியாக உள்ளது. தேன் முடியை மிருதுவாக்குகிறது. இது முடி வறட்சியால் உண்டான பொடுகை போக்க உதவுகிறது. தேனை பிற மருத்துவ பொருட்களுடன் கலந்து பயன்படுத்தும் முடிக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

விளக்கெண்ணை

விளக்கெண்ணை

விளக்கெண்ணை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இது முடியின் வேர்க்கால்களை வலிமையாக்குகிறது. இதில் ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி வைரல் மூலக்கூறுகள் உள்ளன. இது முடியை மிருதுவாக்க உதவுகிறது.

செய்முறை

செய்முறை

முட்டை 1

விளக்கெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து, முடிக்கு அப்ளை செய்து, பின்னர் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை 1 முதல் 2 மணிநேரம் வரை ஊற வைத்து, முடியை நன்றாக அலச வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

இதை செய்வதோடு மட்டுமின்றி, ஆரோக்கியமான உணவுகள், சத்தான சரிவிகித உணவுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டியதும், உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

hair care tips for faster hair growth

here are the tips for faster hair growth
Story first published: Saturday, September 9, 2017, 14:15 [IST]
Subscribe Newsletter