முடி உதிர்வை வீட்டிலேயே கட்டுப்படுத்தும் சூப்பரான மாஸ்க் ரெசிபி !!

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

முடி உதிர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் மில்லியன் கணக்கிலான மக்களிடையே காணப்படும் பெரிய பிரச்சினையாக உள்ளது. முடி உதிர்வை ஏற்பட நிறைய காரணங்கள் உள்ளன.

மரபணு பிரச்சினைகள், உடல் நலக்குறைவு, தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை பழக்கங்கள், வெப்பம் அதிகமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துதல் போன்ற எண்ணிலடங்காத காரணங்கள் முடி உதிர்வை ஏற்படுத்துகின்றனர்.

தினமும் சில முடிகள் உதிர்வது இயற்கையான ஒரு செயல். ஆனால் அளவுக்கு அதிகமான முடி உதிர்வு பெரும் பிரச்னையாக உள்ளது. இதை கண்டு கொள்ளலாமல் விட்டாலோ அல்லது சரியான சிகச்சை முறையை கடைப்பிடிக்காமல் விட்டாலும் இதன் முடிவு பெரும் முடி இழப்பை நமக்கு இட்டுச் செல்கிறது.

இந்த முடி உதிர்தல் பிரச்சினையை சரி செய்ய நிறைய அழகு சாதன சிகச்சை முறைகள், அறுவை சிகிச்சை முறைகள் போன்றவை உள்ளன. இவைகள் நமக்கு பக்க விளைவுகளை உண்டு பண்ணுவதோடு நமது பர்சையும் காலி செய்யாமல் விடாது.

DIY Homemade Hair Fall Mask Recipe

எனவே இதற்கு செலவு குறைந்த பக்க விளைவுகள் ஏற்படுத்தாத சில முறைகளை தமிழ் போல்டு ஸ்கை உங்களுக்காக இங்கே வழங்க உள்ளது. இந்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் மாஸ்க்கை பயன்படுத்தி உங்கள் முடி உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

இந்த மாஸ்க்கில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முடிக்கு நல்ல போஷாக்கை கொடுப்பதோடு முடி உதிர்வையும் தடுக்கிறது.

இங்கே சில ஹோம்மேடு கூந்தல் மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது உங்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்காய் பொடியின் பயன்கள் !!

நெல்லிக்காய் பொடியின் பயன்கள் !!

நெல்லிக்காய் பொடி நாம் பாரம்பரியமாக இயற்கையாக பயன்படுத்தி வரும் பொருளாகும். இது முடி உதிர்தலை தடுக்கக் கூடியது. இதுலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வலுவிழந்த முடியின் மயிர் கால்களை வலுவாக்கி முடி உதிர்தலை குறைக்கிறது.

 பூந்தி கொட்டை பொடியின் பயன்கள்

பூந்தி கொட்டை பொடியின் பயன்கள்

பூந்தி கொட்டை பொடியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் என்ஜைம்கள் மயிர்க்கால்களை வலுவாக்குவதோடு முடியில் உள்ள அழுக்கு, தூசிகள், நச்சுப் பொருட்கள் போன்றவற்றையும் நீக்கி சுத்தம் செய்கிறது.

மேலும் உங்கள் முடிகள் உடைந்து பிளவு பட்டு போவதை தடுத்து அதற்கு காரணமான நச்சுப் பொருட்களை நீக்குகிறது.

ரோஸ் வாட்டர் பயன்கள்

ரோஸ் வாட்டர் பயன்கள்

முடி உதிர்வை தடுப்பதில் ரோஸ் வாட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் முடியின் வேர்க் கால்களை புதிப்பித்து முடியின் pH(அமில கார சமநிலையை) நடுநிலையாக்குகிறது.

வீட்டிலேயே தயாரிக்கப்படும் மாஸ்க்கின் பயன்கள்

வீட்டிலேயே தயாரிக்கப்படும் மாஸ்க்கின் பயன்கள்

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து கூந்தலுக்கு பயன்படுத்தும் போது மிகச் சிறந்த பலன் கிடைக்கிறது.

முடி உதிர்வை அதன் வேர்க் கால்களிலிருந்து இந்த மாஸ்க் தடுக்கிறது

இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் கூந்தல் அலைபாயும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

1 டேபிள் ஸ்பூன் பூந்தி கொட்டை பொடி

1/4 டீ ஸ்பூன் கற்பூரம் பொடி

3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

ஒரு கண்ணாடி பெளலில் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்

நன்றாக பொருட்களை எல்லாம் கலக்கவும்

நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

இப்பொழுது இந்த பேஸ்ட்டை உங்கள் முடி மற்றும் மயிர் கால்களில் நன்றாக படும் படி அப்ளே செய்து மசாஜ் செய்ய வேண்டும்

பிறகு 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்

பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசவும்

வாரத்திற்கு 2- 3 முறை இதை செய்து வந்தால் உங்கள் முடி உதிர்தல் பிரச்சினை குறைந்து அடர்த்தியான கூந்தல் பெறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

DIY Homemade Hair Fall Mask Recipe

DIY Homemade Hair Fall Mask Recipe,
Story first published: Friday, December 8, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter