For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீளமான ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க

அழகான ஆரோக்கியமான கூந்தல் பெற, வேண்டிய இயற்கை குறிப்புகளை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

|

அழகான ஆரோக்கியமான கூந்தலை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நம் அழகை கூட்டி காட்டுவதில் கூந்தல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஓரு ஆரோக்கியமான கூந்தல் என்பது இயற்கையான பொலிவுடன், அடர்த்தி நிறைந்த கருமையுடன், பொடுகு மற்றும் பிளவுபட்ட முடிகள் இல்லாமல் இருப்பது. வலிமையான மயிர்க்கால்கள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக்கும்.

ஆனால் வழக்கத்தை பார்த்தால் தினமும் 8-10 பேராவது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை இவற்றால் நிறைய கூந்தல் பிரச்சினைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கின்றனர்.

DIY Hair Masks For Healthy And Beautiful Hair

இதை தவிர்த்து நமது சுற்றுப்புற காரணிகளான தூசிகள், மாசுகள், அதிகமான சூரியக் கதிர்கள், தவறான உணவுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஹீட் ஸ்டைலில் கருவி பயன்படுத்துதல், கெமிக்கல் கலந்த பியூட்டி ஹேர் பொருட்கள் இந்த மாதிரியான காரணிகளும் நமக்கு கூந்தல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இவற்றால் நமது கூந்தல் பொலிவிழந்து, முடி உதிர்தல், பொடுகு, கூந்தலில் பிளவு, ஒல்லியாக அடர்த்தி குறைந்து காணப்படுதல் போன்ற பிரச்சினைகள் வருகின்றன. இந்த மாதிரியான பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தால் அதை சரி செய்யவே நாங்கள் சில குறிப்புகளை கூற உள்ளோம்.

எனவே உங்களுக்கு ஆரோக்கியமான அழகிய கூந்தலை பெற சில ஹேர் மாஸ்க்களை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை தமிழ் போல்டு ஸ்கை இங்கே வழங்க உள்ளது. இதை பயன்படுத்தி உங்கள் கூந்தல் பிரச்சினைகளை சரி செய்வதோடு அந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் செய்ய முடியும்.

இங்கே இயற்கை மூலிகை பொடியான நெல்லிக்காய் பொடி, சீகைக்காய் பொடி, ரீத்தா பொடி மற்றும் இயற்கை பொருட்களான கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர், தேன் இவற்றை கொண்டு ஹேர் மாஸ்க்களை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை தான் நாங்க இங்கே கூறயுள்ளோம்.

இந்த இயற்கை ஹேர் மாஸ்க்கை வீட்டில் ட்ரை பண்ணி ஆரோக்கியமான அழகான கூந்தலை பெற முயலுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி உதிர்தல் பிரச்சினைக்கான ஹேர் மாஸ்க்

முடி உதிர்தல் பிரச்சினைக்கான ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்

1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

1 டீ ஸ்பூன் ரீத்தா பொடி

1/4 டேபிள் ஸ்பூன் கற்பூரம் பவுடர்

3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

பயன்படுத்தும் முறை

ஒரு கிளாஸ் பெளலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எடுத்து கொள்ளவும்

எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் மாதிரி ஆக்கி கொள்ளவும்

இப்பொழுது இந்த மாஸ்க்கை உங்கள் கூந்தல் மற்றும் நன்றாக மயிர்க்கால்களில் படும் மாதிரி விரல்களை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

வாரத்திற்கு 2-3 முறை இந்த மாஸ்க்கை போட்டு வந்தால் முடி உதிர்தல் பிரச்சினை சரியாகி விடும்.

 பிளவுபட்ட முடிகளை சரி செய்யும் ஹேர் மாஸ்க்

பிளவுபட்ட முடிகளை சரி செய்யும் ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்

1டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால்

1 டீ ஸ்பூன் ரீத்தா பொடி

1 டீ ஸ்பூன் சிகைக்காய் பொடி

1 டீ ஸ்பூன் பால்

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு பெளலில் எடுத்து நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்

இப்பொழுது இந்த மாஸ்க்கை உங்கள் கூந்தலில் மற்றும் ஸ்கால்ப்பில் உள்ள மயிர்கால்களில் படும் படி தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

நன்றாக அப்ளே செய்த பிறகு ஒவ்வொரு பகுதியையும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்

30-40 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

 பொடுகுக்கான ஹேர் மாஸ்க்

பொடுகுக்கான ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்

1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

5-6 வேப்பிலை

1 டீ ஸ்பூன் சிகைக்காய் பொடி

1 டீ ஸ்பூன் வெந்தயம் பொடி

1டீ ஸ்பூன் ரீத்தா பொடி

1 கப் தண்ணீர்

பயன்படுத்தும் முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை அதில் போட்டு ஒரு மூடியை கொண்டு மூடி விடவும். 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்

பிறகு மூடியை திறந்து அடுப்பை அணைத்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

கொஞ்சம் ஆறியதும் ஒரு ஸ்பூனை கொண்டு நன்றாக கலக்கவும்.

பிறகு தண்ணீரை ஒரு பெளலில் வடிகட்டி கொள்ளவும்

இந்த வடிகட்டிய தண்ணீரை தலையில் கூந்தலில் ஊற்றி சில நிமிடங்கள் விரல்களை கொண்டு மசாஜ் செய்யவும்.

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

வாரத்திற்கு 2-3 முறை இதை செய்து வந்தால் பொடுகு தொல்லை இருக்காது.

 அடர்த்தியான கூந்தலுக்கு ஹேர் மாஸ்க்

அடர்த்தியான கூந்தலுக்கு ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்

1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

1 டீ ஸ்பூன் சிகைக்காய் பொடி

1டீ ஸ்பூன் ரீத்தா பொடி

2 டீ ஸ்பூன் நல்லெண்ணெய்

1 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் மேலே குறிப்பிட்டுள்ள ஹெர்பல் பொடிகளை ஒன்றாக கலக்கவும்

பிறகு அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் நல்லெண்ணெய்யை சேர்த்து கெட்டியாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்

பிறகு உங்கள் முடி மற்றும் ஸ்கால்ப்பில் நன்றாக தடவி மசாஜ் செய்து சில நிமிடங்கள் விரல்களை கொண்டு மசாஜ் செய்யவும்

பிறகு ஷவர் கேப் அல்லது ஒரு பிளாஸ்டிக் ஹேரி பேக் கொண்டு தலையை கவர் பண்ணி 30-40 வைத்திருக்க வேண்டும்

பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு அலசவும்

இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

பட்டு போன்று மென்மையான கூந்தல் ஹேர் மாஸ்க்

பட்டு போன்று மென்மையான கூந்தல் ஹேர் மாஸ்க்

1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

1 டீ ஸ்பூன் சிகைக்காய் பொடி

1டீ ஸ்பூன் ரீத்தா பொடி

1/2 டீ ஸ்பூன் தேன்

1 முட்டை

பயன்படுத்தும் முறை

ஒரு கிளாஸ் பெளலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எடுத்து கொள்ளவும்

மிதமான நீர்ம பதத்திற்கு அதை கலந்து கொள்ளவும்

மயிர்கால்கள் மற்றும் கூந்தல் முழுவதும் அப்ளே செய்யுங்கள்

ஸ்கால்ப்பில் விரல்களை கொண்டு சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்

பிறகு 40-50 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்

பிறகு குளிர்ந்த நீரில் அலசவும்

வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பட்டு போன்ற மென்மையான கூந்தலை பெறலாம்.

 கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

ஹீட் ஸ்டைல் கருவியை பயன்படுத்தாதீர்கள். இது உங்கள் கூந்தலை பாதிப்படைய வைத்து விடும்.

கெமிக்கல் ஹேர் பராமரிப்பு பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

ஆரோக்கியமான உணவுகள், நல்ல பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Hair Masks For Healthy And Beautiful Hair

DIY Hair Masks For Healthy And Beautiful Hair
Desktop Bottom Promotion