முட்டை வெள்ளைக்கருவுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து தலைக்கு பயன்படுத்தினால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கெமிக்கல் நிறைந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தி வந்ததில், தலைமுடியின் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும். மீண்டும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தலைமுடிக்கு ஊட்டம் வழங்குமாறான சில நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகளை அவ்வப்போது போட் வேண்டும்.

அதில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்ட ஓர் ஹேர் மாஸ்க் தான் முட்டை வெள்ளைக்கரு மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க். இந்த மாஸ்க் செய்வதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் 1 முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

இப்போது இந்த ஹேர் மாஸ்க்கைப் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

What Happens When You Apply Olive Oil & Egg Whites To Your Hair?

தலைமுடி உதிர்வது

இந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க்கில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு போட்டு வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

முடி வெடிப்பு

இந்த ஹேர் மாஸ்க் தலைமுடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு உதவி, முடி வெடிப்புகள் ஏற்படுவதைக் குறைக்கும்.

முடி வறட்சி

முடி மிகுந்த வறட்சியுடன் இருந்தால், இந்த ஹேர் மாஸ்க்கைப் போடுங்கள். இதனால் அதில் உள்ள ஆலிவ் ஆயில் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஒன்றாக வேலை செய்து, முடியின் வறட்சியைத் தடுத்து, அதன் மென்மைத்தன்மையை அதிகரிக்கும்.

பொலிவிழந்த முடி

ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை மாஸ்க் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படும் முடியின் பொலிவுத்தன்மையை அதிகரித்து, தலைமுடியை அழகாக வைத்துக் கொள்ள உதவும்.

பொடுகு

அடிக்கடி பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவராயின், இந்த மாஸ்க்கை போடுங்கள். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள வறட்சி குறைந்து, பொடுகு வருவது தடுக்கப்படும்.

முடி வளரும்

இந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டி, நீளமான மற்றும் அடர்த்தியான முடியைப் பெற உதவும்.

எண்ணெய் பசை ஸ்கால்ப்

முட்டை வெள்ளைக்கரு மற்றும் ஆலிவ் ஆயில் கலவை ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதைக் கட்டுப்படுத்தி, தலையில் இருந்து அசிங்கமாக எண்ணெய் வழிவதைத் தடுக்கும்.

English summary

What Happens When You Apply Olive Oil & Egg Whites To Your Hair?

So, have a look at the hair benefits of the mixture of olive oil and egg whites hair mask, here.
Story first published: Friday, September 30, 2016, 7:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter