பிசுபிசுப்பான கூந்தலுக்கான காரணமும் தீர்வுகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பிசுபிசுப்பான கூந்தல் என்பது நம்முள் பலரிடமும் காணப்படுகிற ஒரு பிரச்னை. தலைமுடியின் வேர்கால்களில் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெயே பிசுபிசுப்பான நிலையை கூந்தலுக்கு தருகிறது.

செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம். செபேஷியஸ் சுரப்பி சுரக்கும் எண்ணெய் கூந்தலை வெளிப்புற மாசிலிருந்தும் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கும். அது ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

what can we do for oily hair

அதுவே அளவுக்கதிகமாக இந்த எண்ணெய் சுரந்தால், கூந்தலில் பிசுபிசுப்பான நிலையை கொண்டு தரும். இதனால் பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியவை அதிகமாக ஏற்படும்.

எண்ணெய் பசையின் காரணமாக ஏற்படும் பொடுகு, அதிகமாகி, புருவம் மற்றும் சருமத்தில் படும்போது, முகப்பரு, கரும்புள்ளி  ஆகிய சரும பிரச்சனைகளும் தோன்ற ஆரம்பிக்கும்.

எண்ணெய் பசை கூந்தலுக்கு என்ன செய்ய வேண்டும்?

எண்ணெய் பசைக் கூந்தலுக்கான ஷாம்பு உபயோகித்து வாரம் 3 முறை கூந்தலை அலச வேண்டும். உங்கள் கூந்தல் ரொம்பவும் எண்ணெய் பசையுடன் இல்லை என்றால், ஷாம்பு குளியலுக்குப் பிறகு மிதமான கண்டிஷனர் உபயோகிக்கலாம்.

what can we do for oily hair

என்ன செய்யக் கூடாது?

கூந்தலுக்கு எண்ணெய் வைக்கக் கூடாது. இவை கூந்தலை பலவீனமாக்கும். முடியை வேகமாய் உதிரச் செய்யும். அதேபோல் அதிகமாய் கூந்தலை சீவுதல் கூடாது. அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, எண்ணெய் சுரப்பை அதிகப்படுத்தும்.

what can we do for oily hair

தீர்வுகள் :

வாரம் மூன்று முறை குளிக்க வேண்டும். காய்ந்ததும் பேபி பவுடரை தலையில் லேசாக தடவினால், அதிகப்படியான எண்ணெயை அது உறிஞ்சு கொள்ளும்.

சீகைக்காய் உபயோகப்படுத்தினால் என்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தலாம் அல்லது எண்ணெய் கூந்தலுக்கென்றே பிரத்யேக ஷாம்பு கிடைக்கிறது. தினசரி உபயோகத்துக்கேற்ற வகையில் மைல்டான ஷாம்புவாக தேர்ந்தெடுக்கவும்.

what can we do for oily hair

நீரில் கால் கப் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கபும். ஆறியபின் வடிகட்டி அந்த நீரை தலையில் தடவுங்கள். 15 நிமிடங்கள்கழித்து, தலையை அலசவும்.

இவ்வாறு செய்தால், அதிகப்படியான எண்ணெய் சுரப்பது குறையும். 15 நாட்களுக்கொரு ஒரு முறை தலைக்கு ஹென்னா உபயோகிப்பதும், அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.

அதே போல் அதிகப்படியான எண்ணெய் கூந்தலில் சுரந்தால் எலுமிச்சை சாறினை தலையில் தேய்த்து அலசினாலும் கட்ட்ப்படும்.

what can we do for oily hair

உணவுப்பழக்கங்கள் :

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளுக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் இடம் அளிக்காதீர்கள். தினசரி உணவில் நிறைய பழங்களும் காய்கறிகளும் எடுத்துக் கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சை, பாதாம், பெர்ரி மற்றும் நிறைய பழ ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும்.

English summary

what can we do for oily hair

what can we do for oily hair
Please Wait while comments are loading...
Subscribe Newsletter