Latest Updates
-
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
ஒரு ஹேர் பின் வச்சு சூப்பரா எப்படியெல்லாம் உங்கள் கூந்தலை எப்படி எல்லாம் அழகுபடுத்தலாம்?
நீங்கள் ஹேர் பின்களையும் அது சார்த்த கிளிப்களையும் இதுவரை தவறாகவே பயன்படுத்தி இருப்பீர்கள்.அதன் காரணத்தை இக்கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
சிறு ஆணியும் பல் குத்த உதவும். அப்படித்தான் ஹேர்பின் எப்படியெல்லாம் நமக்கு உபயோகமாகிறது என்பற்கான குறிப்புகள்தான் இங்கே சொல்லியிருக்கிறோம்.
உங்கள் கூந்தலை எவ்வாறு ஹேர்பின்களின் மூலம் அலங்கரிக்கலாம் என்பதை நாங்கள் விளக்க உள்ளோம். நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத சிறப்பான அலங்கார வழிகளை தெரிந்துகொள்ளலாம்.

இந்த கட்டுரையை தொடர்ந்து படிப்பதன் மூலன் சரியான முறையில் எவ்வாறு ஹேர் கிளிப் மற்றும் ஹேர் பின்களை பயப்படுத்தமுடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் வேடிக்கையான தந்திரங்கள் மூலம் ஹேர் பின்களை அழகாக உபயோகிக்கும் வழிகளை தெரிந்து கொள்ளலாம்.

தலைகீழ் முறை :
'பாபி பின்' என்று அழைக்கப்படும் சிறிய வகை ஹேர் பின் வகைகள் கூந்தலில் பயன்படுத்தும் போது தலைகீழ் முறையில் உபயோகப்படுத்த வேண்டும்.
அந்த ஊக்கின் வளைந்த பகுதி தலைக்கு அருகிலும் அதன் சமமான பகுதி மேல்நோக்கியும் இருக்க வேண்டும்.நீங்கள் இதுநாள் வரை உபயோகித்த முறையை விட இந்த வகையான முறை கூந்தலை பிடிப்பாக வைத்திருக்க உதவும்.

2 ஹேர் ஸ்ப்ரே யுடன் :
ஹேர் பின் வகைகளின் மேலே முடி தெளிப்பான்களை உபயோகப்படுத்தினால் அவை அசையாமல் நிலையாக ஓரிடத்தில் இருக்கும். இந்த முடி தெளிப்பான்களை பயன்படுத்துவதனால் ஹேர்பின்களினால் கூந்தலில் ஏற்படும் சிக்குகளை தவிர்க்க முடியும்.

3 . கூந்தலை அடர்த்தியாக்க
கூந்தலின் போனி டைல் அமைப்புக்கு கீழ் பட்டர்ப்ளை கிளிப்பை வைத்துக்கொண்டால் அது நல்ல கன அளவை கொடுப்பதுடன் போனி டைல் அலங்காரத்தை மேல்புறமாக உயர்த்த உதவுகிறது.இந்த முறை நிச்சயம் இதுவரை உங்களுக்கு தெரியாத பயனுள்ள குறிப்பாகும்.

4 பாபி பின்களின் மூலம் போனி டைலை உயர்த்துதல் :
போனி டைல் அமைப்புக்கு கீழாக கோர்வையாக கூந்தல் கட்டு இருக்கும்.அந்த இடத்தில ' பாபி பின்' என்று அழைக்கப்படும் ஹேர்பின்களை நேராக வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். போனி டைல் அமைப்பை சற்று உயர்த்த இது ஒரு சிறந்த வழியாகும்.

5 . 'பாபி பின் பன்' :
ஹேர் பின்களின் மூலம் கூந்தலின் கொண்டை அமைப்பை நேர்த்தியாக அமைக்க முடியும். கொண்டை அமைப்புக்கு எந்த மாற்றமும் ஏற்படாமல் நீங்கள் விரும்பும் வகையில் சிறப்பாக வைத்து கொள்ள இந்த வகையான அலங்காரம் உதவுகிறது.

முன்முடி அமைப்பிற்கு ஹேர்பின்களை உபயோகித்தல்:
சதுரமாக வெட்டப்பட்ட முன்முடி அமைப்பை மாற்றி அலங்கரிக்க இரண்டு ஹேர்பின்களை கொண்டு குறுக்கு மறுக்காக வைத்து கூந்தலை பின்புறமாக பின்னிக்கொள்ள முடியும். இந்த வகை ஊக்கிகளை கொண்டு கூந்தலை மிகச்சிறப்பாக அழகு படுத்த முடியும்.

7 . கூந்தலின் பின்னல்களுக்கு உதவும் 'பாபி பின்' :
பல்வேறு பின்னல்கள் மூலம் கூந்தலை ஹேர்பின்கள் கொண்டு உட்புறமாக அலங்கரிக்க முடியும். இதன் மூலம் அந்த பின்னல் கலையாமல் நாள் முழுவதும் இருக்கும். இவ்வாறான கூந்தல் கிளிப் மற்றும் ஹேர் பின் வகைகளின் மூலம் கூந்தலை மிகச்சிறப்பாக அழகு படுத்த முடியும்.



Click it and Unblock the Notifications
