ஒல்லியான முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் தலைமுடியின் உதிர்வால் நிறைய பேருக்கு எலி வால் போன்று தலைமுடி உள்ளது. இப்படி அடர்த்தி இழந்து இருக்கும் முடியை அடர்த்தியாக்குவதற்கு பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பல முயற்சிகளை எடுத்திருப்பார்கள். குறிப்பாக பல எண்ணெய்களை வாங்கி தலைக்கு பயன்படுத்தியிருப்பார்கள்.

Thin To Thick Hair Magic, Grow Your Hair Fast With 3 Ingredients

ஆனால் நம் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது, மன அழுத்தம், மோசமான டயட் போன்றவை. இவைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், தானாக முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் மாஸ்க்கை தலைக்கு போட்டு வந்தால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் மயிர்கால்களை வலிமைப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

விளக்கெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு - 1

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து அடித்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

பின் அந்த கலவையை தலையில் மயிர்கால்களில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, பின் தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரையோ அல்லது ஹேர் கேப்பையோ அணிந்து, 2-5 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி அலச வேண்டும்.

எத்தனை முறை பயன்படுத்தவும்?

எத்தனை முறை பயன்படுத்தவும்?

இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை என 2 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடியின் அடர்த்தியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணபீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Thin To Thick Hair Magic, Grow Your Hair Fast With 3 Ingredients

There are many natural ways, including certain herbs that can make the process of accelerating the hair growth easier. Here we gave a recipe for a homemade remedy that will blow away your mind! Take a look!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter