For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலவீனமான முடியை வலிமையாக்க உதவும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

|

தற்போது முடி பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. அதில் தலை முடி உதிர்வதில் இருந்து, பேன், பொடுகு, முடி வெடிப்பு, முடி வறட்சி என்று சொல்ல ஆரம்பித்தால், பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பொதுவாக தலைமுடியில் இவ்வளவு பிரச்சனை ஏற்படுவதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, நமது மோசமான பழக்கவழக்கங்களும் தான் காரணம்.

ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ்களை ட்ரை பண்ணுங்க...

ஆனால் இந்த பிரச்சனைகளைப் போக்கி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில அட்டகாசமான எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளை பின்பற்றி வந்தால், தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதை நீங்களே காண்பீர்கள்.

ஆண்களே! இதோ வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும் சில நாட்டு வைத்திய வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்ணெய்

வெண்ணெய்

வெண்ணெயை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலசி வந்தால், தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி பளபளப்புடனும், பொலிவோடும் காணப்படும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நொதிகள், தலைமுடியின் பிரச்சனைகளைப் போக்கி, அமுடியி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு கற்றாழை ஜெல்லை தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தா, தலைமுடி நன்கு வளர்வதையும் காணலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் பாதிக்கப்பட்ட முடியை சரிசெய்ய உதவும் பொருட்களில் ஒன்று. ஏனெனில் அதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அது பாதிக்ககப்பட்ட மயிர்கால்களை சரிசெய்து, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதற்கு வாழைப்பபழத்தை மசித்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 15 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து ஷாம்பு போட்டு அலசி வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயிலும் சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. ஆகவே இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி 2 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

முட்டை

முட்டை

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் பாதிக்கப்பட்ட முடிக்கு மிகவும் நல்லது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை தலையில் தடவி 20 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ பழத்தை மசித்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து அலசினால், அதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், புரோட்டீன்கள், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் இதர கனிமச்சத்துக்களால், பாதிக்கப்பட்ட தலைமுடி சரியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Top Seven Best Home Remedies To Treat Damaged Hair

Hair damage is an extremely common problem today. And most people face this problem. Here are some best home remedies to treat damaged hair.
Desktop Bottom Promotion