For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேயிலை மர எண்ணெயை முடி உதிர்தலுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா? இப்டி ட்ரை பண்ணுங்க!!

கூந்தல் வளர்ச்சியை தேயிலை மர எண்ணெய் தூண்டும். பொடுகு அரிப்பு, மற்றும் ஸ்கால்ப் பிரச்சனையிலிருந்து குணப்படுத்தும். அதனை உபயோகித்து எப்படி முடி உதிர்தலை தடுக்கலாம் என இதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

தேயிலை மர எண்ணெய் தேயிலை தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதிலுள்ள கிருமிக்கு எதிராக செயல்படும் குணம் கூந்தலில் உண்டாகும் பொடுகு, தொற்று, ஆகிய்வற்றை அழித்து கூந்தலை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

How to use tea tree oil to stimulate hair growth

கூந்தலின் தன்மைக்கு பொறுத்தவாறு எண்ணெய்களை தேர்ந்தெடுத்து அவற்றுடன் தேயிலை மர எண்ணெயை உபயோகித்து எப்படி உங்கள் கூந்தல் உதிர்தலை தடுக்கலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தல் வளர்ச்சிக்கு :

கூந்தல் வளர்ச்சிக்கு :

தேவையானவை :

ஏதாவது ஒரு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தேயிலை மர எண்ணெய் - 10 துளிகள்

டர்க்கி துண்டு - 1

 செய்முறை :

செய்முறை :

கூந்தலுக்கு ஊட்டம் தரும் ஏதாவது ஒரு எண்ணெயுடன் தேயிலை மர எண்ணெய் கலந்து லேசாக சூடுபடுத்தி தலையில் அழுந்த தேய்க்கவும்.

5 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் டர்க்கி துண்டை நனைத்து பிழிந்து தலையில் கட்டிக் கொள்ளுங்கள்.

20 நிமிடம் கழித்து துண்டை கழட்டி தலையை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் நன்றாக அடர்த்தி பெறும்.

இந்த முறையில் அவரவர் கூந்தலுக்கு தகுந்தாற் போல் எண்ணெய்களை தேர்ந்தெடுங்கள். கீழே சொல்லப்பட்டுள்ள எண்ணெய்களை கூந்தலுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து மேலே சொன்னபடி உபயோகியுங்கள்.

 வறண்ட கூந்தலுக்கு :

வறண்ட கூந்தலுக்கு :

ஜுஜுபா எண்ணெய் உங்கள் ஸ்கால்ப்பில் சுரக்கும் இயற்கையான எண்ணெய் போன்ற குணத்தை ஒத்தது. ஆகவே வறண்ட கூந்தல் பெற்றிருப்பவர்களுக்கு பாதுகாப்பானது.

ஜுஜுபா எண்ணெயுடன் சில துளி தேயிலை மர எண்ணெய் கலந்து தலைக்கு உபயோகித்தால் முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.

எண்ணெய் கூந்தலுக்கு :

எண்ணெய் கூந்தலுக்கு :

தேங்காய் எண்ணெயுடன் தேயிலை மர எண்ணெய் சில துளி கலந்து தலையில் வாரம் ஒருமுறை தடவி வந்தால் முடி உதிர்தல் நிற்கும். இது கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கும். பிசுபிசுப்பு, பொடுகு ஆகிவய்ற்றை போக்கச் செய்து நீளமாக வளர தூண்டும்.

 எல்லா விதமான கூந்தலுக்கு :

எல்லா விதமான கூந்தலுக்கு :

பாதாம், ஆலிவ் மற்றும் விளக்கெண்ணெயை எல்லாவித கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். இவைகளுடன் தேயிலை மர எண்ணெய் கலந்து கூந்தலுக்கு உபயோகப்படுத்தினால் பொடுகு, முடி உதிர்தல் பாதிப்பு குறைந்து அடர்த்தியாக நீண்டு வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use tea tree oil to stimulate hair growth

Different hair care recipes to stimulate hair growth and prevent hair fall,
Story first published: Monday, November 21, 2016, 10:00 [IST]
Desktop Bottom Promotion