தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

பூண்டில் அதிக அளவு காப்பர் மற்றும் சல்ஃபர் உள்ளது. விட்டமின் சி மற்றும் இரும்புசத்து உள்ளது. இவை அனைத்தும் கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவை.

குறிப்பாக சல்ஃபர் கெரடின் உற்பத்தியை தூண்டும். ஆகவே பூண்டு உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

How to use Garlic to prevent hair loss

அதனை எப்படி உபயோகப்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி அதிகமாகும். சாப்பிட்டாலும், மாத்திரை வடிவிலும் அதோடு, எண்ணெயாகவும் உபயோகித்தால் கூந்தல் வளர்ச்சி தூண்டப்படும். இன்னும் விரிவாக தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இயற்கை பூண்டு எண்ணெய் :

இயற்கை பூண்டு எண்ணெய் :

பூண்டு பற்களை பொடிபொடியாக நறுக்கி அதனை ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயில் போட்டு 2 வாரங்கள் வைக்கவும்.

அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது நல்லது. இரு வாரங்கள் கழித்து அந்த எண்ணெயை இரவில் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். மறு நாள் தலைக்கு குளிக்கலாம். தொடர்ச்சியாக இப்படி செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

நரை முடி தடுக்க :

நரை முடி தடுக்க :

பூண்டு பற்களை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். சில மிளகையும் நன்றாக நுணுக்கிக் கொண்டு பூண்டுடன் சேர்த்து இர்ண்டையும் தேங்காய் எண்ணெயில் கலந்து லேசாக சூடுபடுத்தவும்.

இந்த எண்ணெயை தவறாமல் வாரம் இருமுறை உபயோகித்தால் நரைமுடி மேற்கொண்டு வளராமல் தடுக்கலாம்.

அதிக பொடுகிற்கு :

அதிக பொடுகிற்கு :

அதிக சூடு மற்றும் பொடுகி இருந்தால் பூண்டை அரைத்து அதன் சாறில் சம அளவு நீர் கலந்து தலையில் த்டவுங்கள். 5 நிமிடம் கழித்து தலையை அலசவும். இது முடி வளர்ச்சியையும் தூண்டும். பொடுகையும் கட்டுப்படுத்தும்.

பூண்டு மாத்திரை :

பூண்டு மாத்திரை :

கடைகளில் பூண்டு மாத்திரை விற்கப்படுகிறது. அதனை பொடி செய்து நீங்கள் உபயோகிக்கும் ஷாம்புடன் கலந்து உபயோகித்தால் நல்லது. முடி உதிர்தல் நிற்கும். இந்த முறையை மாதத்திற்கு ஒருமுறை செய்தால் போதுமானது. அடிக்கடி செய்ய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to use Garlic to prevent hair loss

Use these homemade garlic oil to stimulate hair growth and prevent hair loss,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter