உங்கள் கூந்தலை வளம் பெற வைக்கும் பொருட்களை பற்றி தெரியுமா?

Posted By: Lekhaka
Subscribe to Boldsky

தேவையான அளவு கவனிப்பு மற்றும் ஊட்டத்துடன் சிறிது நேரமும் செலவிட்டால் உங்கள் தலைமுடியின் இயற்கையான முன்பிருந்த அமைப்பினை திரும்பப் பெறமுடிவதோடு முடி நன்கு மிருதுவாகவும் இருக்கும்.

நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய தலைமுடிக்கான எளிய செய்முறைகள் இதோ உங்களுக்காக.

how to improve hair texture naturally

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த செய்முறைகள் முற்றிலும் பாதுகாப்பானவை. ஏனென்றால் இது முற்றிலும் இயற்கையான மிகவும் நாசூக்கான சருமம் கொண்டவர்களும் அச்சமின்றி பயன்படுத்தக் கூடியது.

உங்கள் முடி அமைப்பினையும் தன்மையையும் மேம்படுத்த உதவும் இயற்கை வழிகளுக்கு மேற்கொண்டு படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 விளக்கெண்ணைய் :

விளக்கெண்ணைய் :

ஆமணக்கு எண்ணை ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுவதுடன் வறண்ட, சேதமுற்ற மற்றும் சீர்குலைந்த கூந்தலுக்கு உதவும் சில கனிமச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாரம் ஒருமுறையாவது இதனை பயன்படுத்தி நல்ல பலன்களைப் பெறுங்கள்.

சோற்றுக் கற்றாழை :

சோற்றுக் கற்றாழை :

இது பல்வேறு முடிப்பிரச்சனைகளைத் தீர்க்கும் சில அறிய உட்பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஷாம்பு போடுவதற்கு முன்னும் பின்னும் முடியின் நுனிகளில் இதைத் தடவினால் உடனடியாக முடியை மென்மையாகவும், சீராகவும் ஆக்கும்.

தேங்காய் எண்ணைய்:

தேங்காய் எண்ணைய்:

உங்கள் தலைமுடிக்கு என்ன பயன்படுத்துவது என்கிற குழப்பம் ஏற்பட்டால், கண்ணை மூடிக்கொண்டு தேங்காய் எண்ணையை பயன்படுத்துங்கள்.

இது எப்போதுமே வீண்போவதில்லை. தலைமுடியின் சீர்தன்மையை மேம்படுத்திப் பராமரிக்க இது ஒரு சிறந்த வழிமுறை.

பாதாம் எண்ணைய்:

பாதாம் எண்ணைய்:

பாதாம் எண்ணை முடிக்கு ஏற்ற ஒன்று என்பதோடு வறண்ட தலைச் சருமம் (ஸ்கால்ப்) மற்றும் பொடுகுப் பிரச்சனைகளையும் போக்குகிறது.

தொடர்ந்து இதை பயன்படுத்துவதால் முடியின் தன்மை மேம்பட்டு பட்டுப்போன்று முடி மிருதுவாக பளபளப்புடன் விளங்கும்.

மெயோனைஸ்:

மெயோனைஸ்:

இயற்கையான முடிக்கு ஏற்ற உட்பொருள்கள் கொண்ட மெயோனைஸ் உங்கள் முடியினை சீராக்கும் என்பதில் உங்களுக்கு எந்த ஐயமும் வேண்டாம்.

என்ன. இதன் புளிப்பான வாடையை நீங்கள் சற்று பொருத்துக் கொள்ளவேண்டியிருக்கும்.

முட்டை:

முட்டை:

முட்டையின் வெள்ளைக்கருவை பயன்படுத்தினால் உங்கள் முடி விரைவில் மிருதுவாகவும் வழவழப்பாகவும் மாறும். முடியின் தன்மையை உடனடியாக மாற்ற உதவும் வழிகளில் இதுவும் ஒன்று.

ஆலிவ் எண்ணைய் :

ஆலிவ் எண்ணைய் :

ஆலிவ் எண்ணை தற்போது தாராளமாகக் கிடைப்பதால் இதுவும் ஒரு நல்ல தலைமுடியின் தோழன்தான். சமையலுக்குப் பயன்படுவதால் நிறைய வீட்டு சமையலறைகளில் இதைப் பார்க்கமுடியும்.

மயிர்கால்களிலும் தலைச் சருமத்திலும் இதை வாரம் ஒருமுறை தடவி தேய்த்துவர உங்கள் தலைமுடி கட்டுக் குறையாமல் இருக்கும்.

ஆர்கன் எண்ணைய்:

ஆர்கன் எண்ணைய்:

இது ஒரு மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த முடிக்கு உகந்த எண்ணை. இதை மயிர்க்கால்களில் தடவி வந்தால் வெகு விரைவில் முடி மென்மையாக மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to improve hair texture naturally

Natural effective tips to improve your hair texture,
Story first published: Thursday, November 17, 2016, 21:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter