அடர்த்தியான கூந்தல் கிடைக்க கருவேப்பிலை, சீரகத்தை எப்படி உபயோகிக்க வேண்டுமென தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

கூந்தல் அடர்த்தியில்லாமல் இருக்கிறது என பல பெண்கள் கவலைப்படுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். வித விதமான என்ணெய் ஷாம்புகளை முயற்சித்திருந்தும் பலனில்லையா? இதை ட்ரை பண்ணுங்க.

How to grow hair longer using curry leaves

கருவேப்பிலைதான் தலை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. கூந்தல் அடர்த்தி இல்லையே என்று கவலைப்படுபவர்கள் இந்த முறைகளை உபயோகித்து பாருங்கள். பலனளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கருவேப்பிலை மாஸ்க் :

கருவேப்பிலை மாஸ்க் :

தேவையானவை :

வெந்தயம் - 2 ஸ்பூன்

சீரகம் - 2 ஸ்பூன்

கருவேப்பிலை - தேவையான அளவு .

 கருவேப்பிலை மாஸ்க் :

கருவேப்பிலை மாஸ்க் :

செய்முறை :

வெந்தயத்தையும் சீரகத்தையும் முந்தைய நாளே ஊற வைத்து விடுங்கள். மறு நாள் ஊறிய இவற்றுடன் இரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை கலந்து அரையுங்கள்.

இதனை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து அலசவும். வாரம் இருமுறை செய்தால் உங்கள் கூந்தல் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியபப்டுவீர்கள்.

 கருவேப்பிலை எண்ணெய் :

கருவேப்பிலை எண்ணெய் :

கருவேப்பிலையை கையளவு எடுத்து சுத்தம் செய்து உலர வைத்துக் கொள்ளுங்கள். கடுகு அல்லது நல்லெண்ணெயை ஒரு கப் அளவு எடுத்து சுட வைக்கவும்.

அதில் கையளவு கருவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் வைக்கவும். பின்னர் ஆற வைத்து வடிகட்டி அதனை வாரம் ஒருமுறை உபயோகித்தால் நரை முடி வராது. முடி வளர்ச்சி தூண்டும்.

யோகார்ட் மற்றும் கருவேப்பிலை :

யோகார்ட் மற்றும் கருவேப்பிலை :

கருவேப்பிலை பொடியுடன் யோகார்ட் கலந்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து அலசவும். இது முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை தரும். பொடுகு , வறட்சி பிரச்சனை ஏற்படாது.

உங்கள் டயட்டில் சேருங்கள் :

உங்கள் டயட்டில் சேருங்கள் :

கருவேப்பிலை பொடி தயார் செய்து தினமும் 2 ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இவை ஆரோக்கியம் மட்டுமல்ல கருகருவென அடர்த்தியான கூந்தலையும் விரைவில் தர உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to grow hair longer using curry leaves

Natural remedies to grow hair longer using curry leaves and cumin seeds.
Story first published: Saturday, November 5, 2016, 8:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter