தலையை வாரம் 2 முறை சுத்தப்படுத்துங்கள்!! எப்படி தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

தலைமுடியை வாரம் ஒருமுறை சுத்தப்படுத்தினாலும் அழுக்குகள் அதிகம் சேர்ந்துகொண்டேயிருக்கும். கூந்தலில் இயற்கையாகவே எண்ணெய் சுரப்பதால் அதில் வியர்வை, தூசு, புகை எல்லாம் சேர்ந்து கொண்டு அழுக்குகளை ஏற்படுத்திவிடும்.

Homemade Hair Scrubs to cleanse the Scalp

இதனை தவிர்க்க வெறும் கூந்தலை ஷாம்பு கொண்டு அலசுவதை விட, ஸ்க்ரப் உபயோகித்தால் அழுக்குகள்,பொடுகு ஆகியவை வெளியேறி ஸ்கால்ப் சுத்தமாகிவிடும். அவ்வகையிலான சில ஸ்க்ரப் கூறப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

ஓட்ஸ் மற்றும் நாட்டுச்சர்க்கரை :

வியர்வையால் கிருமிகள் எளிதில் ஸ்கால்ப்பில் தங்கிவிடும். நாற்றத்தை தரும். நாட்டுச்சர்க்கரை கிருமிகளை அழிக்கும். ஓட்ஸ் அரிப்பு, பொடுகளை விரட்டும்.

தேவையானவை :

ஓட்ஸ் - 2 டீஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன்

பாதாம் எண்ணெய் - 10 துளிகள்

செய்முறை :

ஓட்ஸை பொடி செய்து கொள்ளுங்கள். அதில் நாட்டுச் சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து தலையின் ஸ்கால்ப்பில் தேய்த்து மெதுவாக எல்லா இடங்களிலும் பரவும்படி மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து அலசவும்.

Homemade Hair Scrubs to cleanse the Scalp

சமையல் சோடா மற்றும் விட்டமின் ஈ :

தேவையானவை :

சமையல் சோடா - 1 டேபிள் ஸ்பூன்

விட்டமின் ஈ - 3 டேபிள் ஸ்பூன்

லாவெண்டர் எண்ணெய் - சில துளிகள்.

Homemade Hair Scrubs to cleanse the Scalp

சமையல் சோடாவில் விட்டமின் ஈ எண்ணெயை கலந்து அவற்றுடன் லாவெண்டர் அல்லது வேறு ஏதாவது ஒரு எண்ணெயை கலந்து தலையில் தேயுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். சமையல் சோடா இறந்த மற்றும் வறண்ட செதில்களை அகற்றிவிடும். விட்டமின் ஈ சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து இதம் தரும்.

புதினா எண்ணெய் மற்றும் தேன் :

தேவையானவை :

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

புதினா எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

Homemade Hair Scrubs to cleanse the Scalp

புதினா எண்ணெயில் தேன் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடங்கள் கழித்து நீரில் அலசுங்கள். புதினா எண்ணெய் எல்லாவித கிருமிகளையும் அழித்துவிடும். பொடுகு இரந்த செல்களை அகற்றிவிடும். தேன் ஈரப்பதம் அளிக்கும். நாட்டுச் சர்க்கரை கூந்தலுக்கு பலம் தரும்.

English summary

Homemade Hair Scrubs to cleanse the Scalp

How can We Solve all hair problems using home remedies,
Subscribe Newsletter