For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகை விரட்ட கண்ட ஷாம்பூ எதுக்கு? 5 நிமிஷத்துல தேங்காய் எண்ணெய் ஷாம்பூ செஞ்சு பாருங்களேன்!!

கூந்தலிற்கு அரப்பு சீகைக்காய் போட நேரமில்லை. ஆனால் அதற்காக கடைகளில் விற்கும் ஷாம்புக்களை போட்டு ஏன் பாதிப்புகளை விலைக்கு வாங்க வேண்டும். இயற்கையான ஷாம்பு தயாரித்து உபயோகித்து பாருங்கள்.

|

உண்மையில் சில விஷயங்களை கால தாமதமக கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் ஒன்றுதான் ஷாம்புவில் இருக்கும் ரசாயனம் புற்று நோய் முதற்கொண்டு பல நோய்களை தரும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்

விலைகொடுத்து ஏன் நோய்களை வாங்க வேண்டும். வீட்டில் வெறும் சில நிமிடங்களில் ஷாம்பூ தயாரிக்க முடியும். அதற்கான பொருட்களை ஒரே முறை வாங்கி தயாரித்து வைத்தால் மாதம் முழுவதும் உபயோகிக்கலாம். எப்படியென்று பார்க்கலாமா?

Homemade coconut shampoo for dandruff

இந்த ஷாம்பூக்கள் பொடுகை நெருங்க விடாது, பக்க விளைவுகளை தராது, முடி வளர்ச்சியை தூண்டும். அழுக்குகளை போக்கும். மென்மையான கூந்தலை தரும். குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேங்காய் எண்ணெய் ஷாம்பூ

தேங்காய் எண்ணெய் ஷாம்பூ

தேவையானவை :

நீர் - கால் கப்

கேஸ்டைல் சோப் - அரை கப்

உப்பு - 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஜொஜொபா எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் எண்ணெய் - 10 துளிகள்

 தேங்காய் எண்ணெய் ஷாம்பூ

தேங்காய் எண்ணெய் ஷாம்பூ

செய்முறை :

முதலில் நீரை இளஞ்சூட்டில் சூடுபடுத்துங்கள். அதில் கேஸ்டைல் சோப்பை கரையுங்கள். நுரை உண்டாகும். அதில் உப்பு சேர்க்கவும். பின்னர் மற்ற எண்ணெய்களை சேர்த்து நன்றாக குலுக்கி, ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். எப்போது வேண்டுமானாலும் அதனை உபயோகப்படுத்தலாம்.

 தேங்காய் மற்றும் தேன் ஷாம்பூ :

தேங்காய் மற்றும் தேன் ஷாம்பூ :

தேவையானவை :

தேங்காய் எண்ணெய்- 1 கப்

கற்றாழை ஜெல் - 1 கப்

சுத்தமன மினரல் நீர் - கால் கப்

தேன் - 2 டேபிள் ஸ்பூன்

லாவெண்டர் எண்ணெய் - 10 துளிகள்

ரோஸ்மெரி எண்ணெய் - 10 துளிகள்

கேஸ்டைல் நீர்த்த சோப் - 2 ஸ்பூன்

 தேங்காய் மற்றும் தேன் ஷாம்பூ :

தேங்காய் மற்றும் தேன் ஷாம்பூ :

செய்முறை :

முதலில் நீரை லேசாக சூடுபடுத்து தேனை கலக்குங்கள். மீதமுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கி இரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள்.

 பொடுகிற்கான ஷாம்பு :

பொடுகிற்கான ஷாம்பு :

தேவையானவை :

தேங்காய் பால் - அரை கப்

கேஸ்டைல் லிக்விட் சோப் - 1 கப்

கிளிசரின் - அரை கப்

தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்

வாசனை எண்ணெய் (ஏதாவது)

 பொடுகிற்கான ஷாம்பு :

பொடுகிற்கான ஷாம்பு :

முதலில் எண்ணெயையும் கிளிசரினையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இன்னொரு பாத்திரத்தில் தேங்காய் பாலையும் கேஸ்டைல் சோப்பையும் கலக்கிக் கொள்ளுங்கள்.

எண்ணெய் கலவையை கலக்கிக் கொண்டே பால் கலவையை ஊற்றுங்கள். பின்னர் நீங்கள் விருப்பப்பட்ட வாசனை எண்ணெயை கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade coconut shampoo for dandruff

Try these Homemade coconut shampoo in 5 minutes to get rid of dandruff,
Story first published: Friday, December 2, 2016, 11:15 [IST]
Desktop Bottom Promotion