சொன்னா நம்பமாட்டீங்க... இந்த வழிகள் வழுக்கை தலையிலும் முடியை வளரச் செய்யும்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் ஒவ்வொரு ஆணும் தன் தலைமுடி குறித்து மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இளமையிலேயே தலைமுடியின் அதிகப்படியான உதிர்வால், திருமணமாவாதற்கு முன்பே பல ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படுகிறது. இதனால் பெண் கிடைக்காமல் பல ஆண்கள் அவஸ்தைப்படுகிறார்கள்.

பல ஆண்கள் தங்கள் தலைமுடி அதிகம் உதிர்வதால், எங்கு வழுக்கை விழுந்துவிடுமோ என்று அஞ்சி, கடைகளில் விற்கப்படும் கண்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி, தலைமுடியைப் பராமரித்து வருகிறார்கள். ஆனால் அப்படி கண்டதை தலைக்குப் பயன்படுத்தினால், இருக்கும் முடியை இழக்க வேண்டியது தான்.

ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை வழுக்கைத் தலை ஏற்படாமலும், வழுக்கையாக இருக்கும் இடத்திலும் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில ஆயுர்வேத வழிகளைக் கொடுத்துள்ளது. அவற்றைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தயம்

வெந்தயம்

வெந்தயத்தில் வைட்டமின் பி6, கனிமச்சத்துக்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. இவை அனைத்தும் இறந்த மயிர்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

அதற்கு வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தைம் ஆயில்

தைம் ஆயில்

தைம் என்னும் மூலிகை எண்ணெயில் தைமோல் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளது. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டி, பொடுகுத் தொல்லையைப் போக்கும்.

அதற்கு சிறிது தைம் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி சிறிது நேரம் தேய்த்து, பின் ஸ்கால்ப்பில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

குங்குமப்பூ

குங்குமப்பூ

குங்குமப்பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

அதற்கு ஒரு சிட்டிகை குங்குமப்பூவை 4 டீஸ்பூன் பாலில் கலந்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் அதிமதுர பொடியை சேர்த்து கலந்து, வழுக்கை ஏற்பட்டுள்ள இடத்தில் இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்ய வேண்டும்.

முள்ளங்கி சாறு

முள்ளங்கி சாறு

முள்ளங்கி சாற்றில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மயிர்கால்களை வலிமைப்படுத்துவதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.

அதற்கு முள்ளங்கி சாற்றினை வழுக்கை விழுந்த இடத்தில் தடவி, அவ்விடம் ஓரளவு கதகதப்புடன் ஆகும் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

கற்பூர எண்ணெய்

கற்பூர எண்ணெய்

கற்பூரத்தில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இயற்கையாகவே உள்ளது. இது ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

எனவே வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டிவிட, சிறிது கற்பூர எண்ணெயை வழுக்கையான இடத்தில் இரவில் படுக்கும் போது தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் படுக்கும் முன் செய்து வந்தால், வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைக் காணலாம்.

செம்பருத்தி

செம்பருத்தி

செம்பருத்தியில் அத்தியாவசிய புரோட்டீன்கள் உள்ளது. இது பாதிக்கப்பட்ட மயிர்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும். அதற்கு செம்பருத்தி பூக்களை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Remedies To Fill In The Bald Spot!

Listed in this article are ayurvedic remedies to regrow hair on bald spot for both men and women. Take a look.
Story first published: Friday, August 19, 2016, 11:36 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter