கூந்தல் எலிவால் போலிருக்கிறதா? இதை யூஸ் பண்ணுங்க!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

கூந்தல் நீளமாக இல்லையென்றாலும் அடர்த்தியாக இருந்தாலே அழகாய் இருக்கும். எவ்வளவுதான் நீளமாக முடி இருந்தாலும் அடர்த்தி இல்லாவிட்டால் அழகே இருக்காது.

சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் அடர்த்தி இல்லாமல் இருக்கும். அவர்கள் போதிய நேரம் ஒதுக்கி மயிர்க்கால்களை தூண்டும்படி பராமரித்தால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கூந்தல் அடர்த்தி உண்டாக்கும் பொருட்களில் முட்டையும் ஒன்று. வாரம் இருமுறை அல்லது ஒருமுறையாவது உபயோகியுங்கள். ஒரே மாதத்தில் மாற்றம் காண்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணெய் கூந்தலுக்கான ரெசிபி :

எண்ணெய் கூந்தலுக்கான ரெசிபி :

தலையில் எண்ணெய் அதிகமாக சுரந்தால், கூந்தல் பலமிழக்கும். அடிக்கடி முடி உதிர்தல் ஏற்படும். ஆகவே அவர்களுக்கு ஏற்ற குறிப்பு இது .

தேவையானவை :

முட்டையின் வெள்ளைக் கரு - 2

ஆலிவ் எண்ணெய் - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

வெள்ளைகருவை தனியாக எடுத்து அதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் அடர்த்தி பெறும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள்.

வறண்ட கூந்தலுக்கான ரெசிபி :

வறண்ட கூந்தலுக்கான ரெசிபி :

வறண்ட கூந்தல் பொலிவாக இருக்காது. பொடுகு, அரிப்பு உண்டாகும் ,இவற்றால் வேகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதற்கான குறிப்பு இங்கே.

தேவையானவை :

முட்டை - 2

ஆலிவ் எண்ணெய் - கால் கப்

விளக்கெண்ணெய் - கால் கப்

தேங்காய் எண்ணெய் - அரை கப்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

கூந்தலுக்கு தகுந்த வாறு மேலே சொன்ன விகிதத்தில் குறைவாகவோ, அதிகமாகவோ பொருட்களை எடுத்துக்ம் கொள்ளுங்கள். முதலில் முட்டை இரண்டை மஞ்சள் கருவுடன் நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதில் மற்ற பொருட்களை சேர்க்கவும்.

செய்முறை :

செய்முறை :

இதனை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து நுனிவரை தடவி 1 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தரமான ஷாம்பு பயன்படுத்தி குளிக்கவும். வாரம் இரு முறை இப்படி செய்தால் அற்புத பலன்களைத் தரும். முடி உதிர்தல் நின்று போய் கூந்தல் அடர்த்தி பெறுவதை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Recipes for Hair Growth

Different egg recipes to promote hair growth for all hair types
Subscribe Newsletter