For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகுத் தொல்லையை விரட்டுவது எப்படி?

By Maha
|

பொடுகு என்பது பூஞ்சை தொற்றினால் ஏற்படுவது. இது ஸ்கால்ப்பில் கடுமையான அரிப்பையும், வறட்சியையும் ஏற்படுத்தும். இந்த பொடுகுத் தொல்லையால் நிறைய மக்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அளவுக்கு அதிகமான பொடுகு தலையில் இருந்தால், அதனால் முடி உதிர ஆரம்பிக்கும். எனவே பொடுகைப் போக்க நம்மில் பலரும் கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. பொடுகுத் தொல்லையை நீக்கும் வெங்காயச் சாறு!

எப்போதுமே எந்த ஒரு பிரச்சனைக்கும் முதலில் இயற்கை வழிகளைப் பின்பற்ற முயலுங்கள். இதனால் அந்த பிரச்சனை நிரந்தரமாக குணமாவதோடு, ஆரோக்கியமும் மேம்படும். பொடுகைப் போக்க ஏராளமான பொருட்கள் நம் வீட்டிலேயே உள்ளது. குறிப்பாக கற்றாழை அனைவரது வீட்டிலும் இருக்கும் ஓர் செடி. தாடிகளில் பொடுகு வருகிறதா? இதை படிச்சு பாருங்க...

இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல் பொடுகைப் போக்குவதில் சிறந்தது. இங்கு பொடுகைப் போக்க கற்றாழை ஜெல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து பலன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லுக்கு பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் தன்மை உள்ளது. எனவே அந்த கற்றாழை ஜெல்லை இரவில் படுக்கும் போது நேரடியாக ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தா பொடுகு நீங்கி, முடி உதிர்வதும் குறையும்.

கற்றாழை மற்றும் டீ-ட்ரீ ஆயில்

கற்றாழை மற்றும் டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளதால், அது பொடுகைப் போக்க உதவும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லில், 5-6 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது தடவி, மறுநாள் காலையில் அலச வேண்டும்.

கற்றாழை மற்றும் வேப்ப எண்ணெய்

கற்றாழை மற்றும் வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை வெளியேற்றும். எனவே 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 9-10 துளிகள் வேப்ப எண்ணெயை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், விரைவில் பொடுகைப் போக்கலாம்.

கற்றாழை மற்றும் கற்பூரம்

கற்றாழை மற்றும் கற்பூரம்

கற்பூரம் பொடுகினால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்கி, குளிர்ச்சியைத் தரும். மேலும் கற்றாழை வறட்சியைப் போக்கும். ஆகவே 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1/2 ஸ்பூன் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை

கற்றாழை மற்றும் எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் தன்மை, பொடுகை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து, ஸ்கால்ப்பின் pH அளவை சீராக வைத்துக் கொள்ளும். அத்தகைய எலுமிச்சையை கற்றாழையுடன் சேர்த்து ஹேர் மாஸ்க் போட்டால், பொடுகு விரைவில் போய்விடும். எனவே ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் போட்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Aloe Vera To Treat Dandruff

In this article, we at Boldsky will be sharing some of the ways you can use aloe vera to reduce dandruff and other scalp-related problems. Read on to know...
Desktop Bottom Promotion