Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்யும் சூப்பர் எண்ணெய்கள்!!!
ஒருவர் அழகாக தோன்றுவதற்கு முக்கிய பங்கு வகிப்பது, அழகான தலை முடியின் தோற்றமே. அதே சமயத்தில், உங்களுடைய முழு உடல் நலத்தை பற்றி தெளிவாக இது சுட்டி காட்டுகிறது. பெண்கள் அடர்த்தியான மற்றும் நீளமான தலை முடியைப் பெறுவதற்கு எதையும் மற்றும் எல்லாவற்றையும் முயற்சி செய்ய தயாராக உள்ளனர். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த முயற்சிகள் துன்பகரமான முடிவுகளை தருகிறது. பாதுகாப்பான வழிகளை தேர்ந்தெடுத்து பின்பற்றுவது என்பது, உங்கள் தலை முடியை மிகவும் பத்திரமாக மற்றும் அழகாக வைப்பதற்கு முக்கியமானது.பாதுகாப்பான தலை முடி பராமரிப்பு வழிகளை பின்பற்றுங்கள். இது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிலான முடிவுகளை தர உதவுகிறது.
அடிக்கடி அழகு நிலையத்திற்கு ஓடிச் சென்று உங்கள் முடியை பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல் தலை முடி பராமரிப்பிற்கு கடைகளில் கிடைக்க கூடிய பொருட்கள், அதிக ரசாயனப் பொருட்களை உள்ளடக்கி உள்ளது. இது உங்கள் தலைமுடிக்கு மிகவும் தீங்கானது. இயற்கையான வழிகளை முயற்சி செய்வதே மிகவும் நல்லது. அதிகமான இயற்கை வழிகள் உள்ளன. அதை நீங்கள் உங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கலாம். இதுவே ஒரு பாதுகாப்பான வழி.
சமையல் எண்ணெய்யை தலை முடி பராமரிப்பிற்கு பயன்படுத்துவது என்பது ஒரு முக்கியமான மற்றும் பாதுகாப்பான வழிமுறை. சமையல் எண்ணெய்யை, தலை முடி பராமரிப்பிற்கு பயன்படுத்துவதின் மூலம், சுருட்டை முடிகளை தவிர்க்கலாம், முடி கொட்டுதலை முன்கூட்டியே தவிர்க்கலாம். மேலும் உடைந்த முடிகளை மீண்டும் புத்துணர்ச்சி பெற செய்யலாம். இங்கே தலை முடி பராமரிப்பிற்கான சில சமையல் எண்ணெய்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகள் உங்கள் உடைந்து போன தலை முடியை புத்துணர்ச்சியாக மாற்ற பயன்படுகின்றன.

தேங்காய் எண்ணெய்
தலைமுடி மற்றும் தோல் பராமரிப்பிற்கு தேங்காய் எண்ணெய்யே முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த கண்டிஷனராக உங்கள் தலை முடிக்கு பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய் கண்டிஷனராக உங்கள் தலை முடிக்கு பயன்படுவது மட்டும் இல்லாமல் உங்கள் முடியை அடர்த்தியாக வளர்க்கவும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய்,நோய் கிருமி தடுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது, இது உச்சந்தலையில் தொற்று நோய் வராமல் தடுக்கிறது.

நல்லெண்ணெய்
சமையல் எண்ணெய்களை தலை முடி பராமரிப்பிற்கு என எடுத்துக் கொண்டால், அந்த அட்டவணை எள் எண்ணெய் இல்லாமல் நிறைவு பெறாது. தலைமுடி பராமரிப்பிற்கு எள் எண்ணெய் என்பது ஒரு சிறந்த தேர்வு. நல்லெண்ணெய்யை வைத்து நீங்கள் உங்கள் உச்சந்தலையை மசாஜ் செய்தால், அது உங்கள் இரத்த ஓட்டத்தை சரி செய்து உங்கள் தலை முடி வளர்வதற்கு உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய்
சமையல் எண்ணெய்களில் நீங்கள் உங்கள் தலைமுடி பராமரிப்பிற்கு, தேவையான சிறந்த எண்ணெய்யை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் ஆலிவ் எண்ணெய்யை தேந்தேடுக்கலாம். நீங்கள் ஷாம்பு பயன்படுத்தினால் அதற்கு பிறகு சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யை உங்கள் முடியின் முழு நீளத்திற்கும் தேய்த்தால் நல்லது. அது உங்கள் தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராகவும் விளங்கும்.

கடுகு எண்ணெய்
சமையல் எண்ணெய்களில் முடி பராமரிப்பிற்கு புகழ் பெற்றது கடுகு எண்ணெய். இது அடர்த்தியான, நல்ல முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தபடுகிறது. தாதுக்களான துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவற்றை கொண்டுள்ளது கடுகு எண்ணெய். இந்த எண்ணெய் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவற்றைக் கொண்டுள்ளது.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயின் பயன்பாடு என்பது தலைமுடி பராமரிப்பிற்கான குறிப்புகளில் முக்கியமானது. பாதாம் எண்ணெய்யை உச்சந்தலையில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு அதை கழுவ வேண்டும். அடிக்கடி தொடர்ச்சியாக பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதன் மூலம் உங்களுக்கு நல்ல அடர்த்தியான மற்றும் அழகான முடி கிடைக்கும்.

சூரியகாந்தி எண்ணெய்
இந்த எண்ணெய், தலை முடியில் உள்ள வறட்சியை போக்கி எண்ணெய் பசையை முடியில் ஏற்படுத்த பயன்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் முடி வளர்ச்சிக்கும், முன்கூட்டியே முடி உடையாமல் தடுப்பதற்கும் உதவுகிறது. சமையல் எண்ணெய்களில் முடி பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் தேங்காய் எண்ணெய்க்கு பிறகு சூரியகாந்தி எண்ணெயே சிறந்தது.

கனோலா எண்ணெய்
நீங்கள் வறண்ட தலை முடியை கொண்டவராக இருந்தால், கனோலா எண்ணெய் உங்களுக்கு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். கனோலா எண்ணெய் உங்கள் முடியில் உள்ள வறண்ட தன்மை மற்றும் உடைந்த முடிகளை, மென்மையான மற்றும் மின்னக்கூடியவைகளாக மாற்றுகிறது. மென்மையான மற்றும் மின்னக்கூடிய முடிகளாக மாற்றுவது மட்டுமில்லாமல், கனோலா எண்ணெய் மீண்டும் முடி உடைதல், பூச்சி வெட்டுகள் வராமல் பாதுகாக்கிறது.



Click it and Unblock the Notifications