For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் அதிகமா கொட்டுதா? அப்ப வெங்காயத்தை யூஸ் பண்ணுங்க...

By Maha
|

கூந்தலைப் பராமரிப்பதற்கு உதவும் பொருட்கள் ஒன்று தான் வெங்காயம். வெங்காயத்தின் நாற்றம் மற்றும் அதனை உபயோகித்தால் வெளிவரும் கண்ணீரை பலர் வெறுக்கலாம். இருப்பினும், வெங்காயம் கூந்தலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் வெங்காயத்தை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல் மற்றும் முடி வெடிப்பு போன்றவை குறையும்.

ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் என்னும் பொருள் அதிகம் உள்ளது. இந்த பொருள் கூந்தலின் வேர்களை வலுவாக்கி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதில் பெரிதும் உதவியாக உள்ளது. அதுமட்டுமின்றி, வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், ஸ்கால்ப்பில் எந்த ஒரு தொற்றும் வராமல் இருக்கும். மேலும் வெங்காயத்தைக் கொண்டு பலவாறு ஹேர் மாஸ்க்குகள் போடலாம். இவ்வாறு வெங்காயத்தை பல பொருட்களுடன் சேர்த்து கூந்தலுக்கு மாஸ்க் போடுவதால், கூந்தல் உதிர்தல் குறைவதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று மென்மையாக பொலிவோடு காணப்படும்.

சரி, இப்போது அந்த வெங்காயத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காய சாறு

வெங்காய சாறு

வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி, ஒரு ஈரமான துணியை தலையில் சுற்றி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், மயிர்கால்கள் நன்கு வவிமையாக இருப்பதுடன், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளையும் போக்கலாம்.

வெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணெய்

வெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணெய்

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கல்நுது, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் சுற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

வெங்காய சாற்றுடன் பீர்

வெங்காய சாற்றுடன் பீர்

வெங்காய சாற்றில் சிறிது பீர் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காயம் மற்றும் தேன்

வெங்காயம் மற்றும் தேன்

கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் மாஸ்க்குகளில் இது மிகவும் சிறந்தது. அதற்கு வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால், சொட்டையாக உள்ள இடத்திலும் கூந்தல் நன்கு வளரும்.

வெங்காயச் சாறு மற்றும் ரம்

வெங்காயச் சாறு மற்றும் ரம்

இரவில் படுக்கும் போது, வெங்காயம் ஒன்றை ஒரு கப் ரம்மில் ஊற வைத்து, காலையில் எழுந்து, அந்த ரம்மை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளித்து வந்தால், கூந்தலின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

வெங்காயம் மற்றும் எலுமிச்சை

வெங்காயம் மற்றும் எலுமிச்சை

பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், எலுமிச்சை சாற்றினை வெங்காய சாற்றில் சேர்த்து கலந்து மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த முறையால் ஸ்கால்ப் சுத்தமாவதோடு, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

வெங்காயத்துடன் தயிர்

வெங்காயத்துடன் தயிர்

வெங்காய விழுதில், சிறிது தயிர் சேர்த்து நன்கு அடித்து, அந்த கலவையை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற, மசாஜ் செய்து, 45 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

வெங்காயம் மற்றும் முட்டை வெள்ளைக்கரு

வெங்காயம் மற்றும் முட்டை வெள்ளைக்கரு

கூந்தலுக்கு முட்டை மிகவும் நல்லது. அத்தகைய முட்டையின் வெள்ளைக்கருவை வெங்காயச் சாற்றுடன் சேர்த்து நன்கு அடித்து, ஈரமான கூந்தலில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Onion Juice For Hair Growth

onion is very good for the hair as it fights various hair problems like hair loss and split ends. Many people apply onion juice for hair growth. This is because onion contains sulphur which nourishes the hair roots and increases hair growth. Apply onion juice for hair growth and to deal with other hair problems like dandruff.
Story first published: Monday, July 22, 2013, 11:59 [IST]
Desktop Bottom Promotion