Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசியில் உதயமாவதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது!
கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சில நேச்சுரல் ஹேர் கண்டிஷனர்கள்!!!
உடலழகு எவ்வாறு முக்கியமோ, அதே அளவு தலைமுடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம்மில் ஒரு சிலர் தான் இதனை செய்கிறார்கள். தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நாம் பயன்படுத்தும் ஷாம்புக்களிலும் கண்டிஷனர்களிலும் தான் இருகின்றது. ஆகவே, தலைமுடி பராமரிப்பில் சிறிது கவனம் எடுத்தோம் என்றால் சிறந்த போஷாக்கு நிறைந்த தலைமுடியை பெறலாம்.
அவகேடோ, வாழைப்பழம், தேன் மற்றும் தேங்காய் - இவை அனைத்தும் ஒரு நல்ல சமையலுக்கு தேவையானப் பொருட்கள் என்று நினைக்கலாம். ஆனால், இவை ஒரு இயற்கை ஹேர் கண்டிஷனர் தயாரிக்கப் பயன்படும் பொருட்களும் ஆகும். ஷாம்பு குளியலுக்குப் பிறகு நமது தலைமுடிக்கு சிறந்த கண்டிஷனர் தேவைப்படுகிறது.
முடிக்கு தேவையான நீர்சேரல் எப்பொழுதுமே பாட்டில்களில் கிடைக்கும் கண்டிஷனரில் மட்டும் இல்லை. சிலவகை உணவு வகைகளும், முடியின் வறட்சி தன்மையை சரி செய்து கண்டிஷனிங் செய்யக்கூடும். சரி வாங்க, இது பற்றி படிக்கலாம்.

வாழைப்பழங்கள்
வாழைப்பழங்களை கண்டிஷனராக பயன்படுத்துங்கள். அவற்றில் உள்ள மிகச்சிறந்த பயனுள்ள கண்டிஷனர் முடியை மேலும் மென்மையாக்கும். அவற்றுடன் தேன், கிளிசரின் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து உபயோகிக்கலாம். அவை, நமது முடியில் ஊடுருவிச் சென்று மாய்ஸ்சுரைசிங் பயன்களைக் கொடுக்கும். இவையனைத்தையும் நன்றாக கலவையாக்கிக் கொள்ளவும். இக்கலவையை தலைமுடியில் தடவி, 30-45 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, மென்மையான ஷாம்புவுடன் முழுமையாக அலச வேண்டும்.

தேன்
தேன் ஒரு வகையான வறச்சி அகற்றி. எளிதாக கூற வேண்டுமென்றால், இதற்கு நீர் மூலக்கூறுகளை ஈர்த்து தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடையதால், இது ஒரு மிகச்சிறந்த கண்டிஷனர் மற்றும் மாய்ஸ்சுரைசர். இதன் விரும்பத்தக்க பலன் நமது முடியை மென்மையாக்கி பளிச்சிடச் செய்யும். மேலும், இதில் செறிவூட்டும் வைட்டமின்களும், கனிமங்களும் நிறைந்துள்ளன. கால் பங்குச் தேனுடன் அதே அளவில் கண்டிஷனரைக் கலக்கவும். பின் இதனை நன்கு கலக்கி கொள்ளவும். பிறகு, கைகளால் கண்டிஷனர் மற்றும் தேன் முடியில் நன்றாக பரவுமாறு தடவவும். அதன் பிறகு, முடியின் வேரிலிருந்து நுனி வரை மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் பிறகு குளிக்கவும்.

அவகேடோ
தேங்காய் எண்ணெய்க்குப் பிறகு தலைமுடிக்கு மிகச்சிறந்தது அவகேடோ பழங்கள் தான் என்பது நாம் அறிந்த ஒன்று. அவற்றை தேங்காய் பால் மற்றும் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்தால், மிகச்சிறந்த கண்டிஷனர் ரெடி. அதற்கு ஒரு அவகேடோவை நன்றாக மசித்துக் கொள்ளவும். அதில் தேங்காய் பால் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கவும். நாம் கலக்கும் இந்த கலவை கண்டிஷனர் பதத்தில் இருக்க வேண்டும். நன்றாக கலந்த பின்பு ஒரு கோப்பையில் ஊற்றி வையுங்கள். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, ஒவ்வொரு முறையும் தலைக்குளியல் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய்
தலைமுடி வலிமையானதாகவும், சிறந்ததாகவும் இருக்க விரும்புவோர்க்கு இதுவே மிகச்சிறந்த கண்டிஷனர். காலம் காலமாக நமது முடியை சிறப்பாக வைப்பது இந்த தேங்காய் எண்ணெய் தான். நமது முடியுடன் பிணைந்து கரோட்டின் குறைவதை தடுப்பதே இதன் சிறப்பு ஆகும். நீர்த்தன்மையை தக்க வைப்பதற்காக தேனையும் சேர்க்கலாம். எனவே ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயையும் தேனையும் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி அதனுள் வைக்கவும். அந்த கலவை சூடாகும் வரை சிறிது நேரம் வைக்கவும். பின்னர், குளித்து முடித்தவுடன், ஈரம் வடிந்த தலைமுடியில் ஊற்றவும். 20 நிமிடங்கள் ஊறிய பின்னர் அலசவும்.

வினிகர் அலசல்
ஆப்பிள் சீடர் எனப்படும் வினிகர், ஒரே சமயத்தில் தலைமுடியை சுத்தம் செய்வது மட்டுமல்லாது, pH அளவையும் சமப்படுத்துவதால், இது மிகச்சிறந்த ஹேர் கண்டிஷனர் ஆகும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் 2 கப் தண்ணீருடன் வினிகர் சேர்த்து தலைமுடியில் தடவி 20-30 நிமிடங்கள் ஊறவிடுங்கள். தலையில் தடவிய பின்பு 4-5 முறை விரல்களால் கோதி விடுங்கள். குளிர்ச்சியான தண்ணீர் விட்டு அலசுங்கள். இது முடியை கண்டிஷனிங் செய்வது மட்டுமல்லாது, இரசாயனப் பொருள் மற்றும் தலையில் போகாமல் இருக்கும் ஷாம்பு/கண்டிஷனரை நீக்கிவிடும்.

புதினா கண்டிஷனர்
தேவையான பொருட்கள்: 3 டம்ளர் தண்ணீர், ஒரு பாத்திரம் நிறைய புதினா இலைகள்.
செய்முறை: சிறிது புதினா இலைகளை 2-3 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளிர வைக்கவும். இந்த தண்ணீரை, ஷாம்பு குளியலுக்கு பிறகு ஊற்றி அலசினால் தலைமுடி புத்துணர்ச்சி பெறும்.

வீட்டிலேயே தயாரிக்கும் கண்டிஷனர்களுடன் சில மாற்றங்கள்
தலை முடி பயனடைய வேண்டுமெனில், வீட்டில் தயாரித்த கண்டிஷனர்களுடன் சில செடி, எண்ணெய் முதலியவற்றை கொண்டு சிறந்த நறுமணத்தை பெற முடியும்.

எண்ணைப் பசை உள்ள தலைமுடிக்கு சேர்க்க வேண்டியவை
6-8 சொட்டுகள் அதி முக்கிய எண்ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள். அதிலும் பெர்கமொட், லாவெண்டர், எலுமிச்சை, ரோஸ்மேரி, சந்தனம், தேயிலை மரம் அல்லது யலங் யலங்.

வறண்ட மற்றும் பொடுகு உள்ள தலைமுடிக்கு சேர்க்க வேண்டியவை
6-8 சொட்டுகள் அதி முக்கிய எண்ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக பெப்பர்மிண்ட், தேயிலை, யூகலிப்டஸ், எலுமிச்சை, சேஜ் அல்லது ரோஸ்மேரி.

எல்லா வகையான முடிகளுக்கும் சிறந்தது
ரோஸ்மேரி அனைத்து வகையான முடிகளுக்கும் சிறந்தது. அதற்கு வினிகருடன் சிறிது ரோஸ்மேரி இலைகளை சேர்த்து 1-2 வாரங்கள் ஊற வைக்கவும். பிறகு ரோஸ்மேரி இலைகளை வடிகட்டி, வினிகரை கண்டிஷனராக பயன்படுத்தலாம். இதனால் ரோஸ்மேரி கூந்தலுக்கு சிறந்த நறுமணத்தையும் அளிக்கும். எனவே ரோஸ்மேரி எண்ணெய் இருந்தால், மேல் சொன்ன செய்முறையை தவிர்த்து விடலாம். அதற்கு பதிலாக வெறும் 6-8 சொட்டுகள் ரோஸ்மேரி எண்ணெயை கண்டிஷனருடன் சேர்த்து உடனே பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications