Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
கூந்தல் வறட்சியைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!
பெண்களுக்கு ஏற்படும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று தான் கூந்தல் வறட்சி. ஆனால் இத்தகைய கூந்தல் வறட்சியானது சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மருந்துகள் கலக்கப்பட்ட தண்ணீரினால் ஏற்படுகிறது என்றால், அப்போது கூந்தலுக்கு அதிக பராமரிப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய கூந்தல் வறட்சியினால் கூந்தல் உதிர்தல், கூந்தல் உடைதல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
ஆகவே கூந்தல் வறட்சியை தவிர்த்து, கூந்தலை மென்மையாக வைத்துக் கொள்ள ஒருசில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். இவற்றால் கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக, பொலிவோடு இருக்கும். மேலும் இத்தகைய விஷயங்கள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. இப்போது கூந்தல் வறட்சியைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், நிச்சயம் கூந்தல் வறட்சியைப் போக்கலாம்.

சீகைக்காய்
கூந்தலை வறட்சியின்றி பட்டுப்போன்று வைத்துக் கொள்ள வேண்டுமெனில், ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காய் போட்டு குளிர்க்க வேண்டும். இதனால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும்.

மயோனைஸ்
மயோனைஸ் ஒரு கண்டிஷனர் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மயோனைஸ் கொண்டு மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், கூந்தல் வறட்சியைப் போக்கலாம்.

வெங்காயம்
ஸ்கால்ப்பில் எந்த பிரச்சனையும் வராமல், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர்வதற்கு, வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி மசாஜ் செய்து வர வேண்டும்.

சீப்பை தவிர்க்கவும்
நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இத்தகைய முடி வெப்பானது கூந்தல் வறட்சியால் தான் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க, ஈரமாக இருக்கும் போது தலைக்கு சீப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் கூந்தல் உதிர்வதுடன், முடி வெடிப்புக்களும் ஏற்படும்.

தக்காளி சாறு
மென்மையிழந்து வறட்சியாக காணப்படும் கூந்தலை, மென்மையாக மாற்றுவதற்கு தக்காளி சாற்றினைக் கொண்டு தலையை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஷியா வெண்ணெய் மற்றும் ஜிஜோபா ஆயில்
கூந்தல் வறட்சியைப் போக்க சிறந்த வழிகளுள் ஒன்று தான், தலைக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது. அதற்கு ஷியா வெண்ணெய் மற்றும் ஜிஜோபா ஆயிலை ஒன்றாக கலந்து, அதனை கூந்தலுக்கு தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் சீகைக்காய் போட்டு குளிக்க வேண்டும்.

ஹேர் பேக்
ஹேர் பேக்குகளில் நிறைய உள்ளன. அதில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ரோஜா இதழ்களைக் கொண்டு செய்யப்படும் ஹேர் பேக்குகளை பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியமாக வறட்சியின்றி இருக்கும்.

பாதாம் பேஸ்ட்
பாதாம் பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்தால், வறட்சியினால் பொலிவிழந்து காணப்படும் கூந்தலை பொலிவோடும், பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளலாம்.

ஈரமான துண்டு
தலைக்கு சுடுநீரில் நனைத்து பிழந்த துண்டை தலையில் கட்டி 10 நிமிடம் உற வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், வறட்சியைத் தவிர்க்கலாம்.

பால்
கூந்தல் வறட்சியை தவிர்த்து, அதனை மென்மையாக வைப்பதற்கு, வாரத்திற்கு ஒரு முறை பாலைக் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் நாளடைவில் நல்ல மாற்றம் தெரியும்.

எண்ணெய்கள்
நல்ல வெதுவெதுப்பான தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டும் கூந்தல் வறட்சியைப் போக்கலாம். அதற்கு அந்த எண்ணெய்களை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து அலசினால், கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

முடியை இறுக்கமாக கட்ட வேண்டாம்
தலைக்கு குளித்தப் பின்னர் கூந்தலை இறுக்கமக கட்டாமல், கூந்தலில் உள்ள நீரை பிழிந்து வெளியேற்றி, அப்படியே உலர வைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
