Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
உங்க தலைமுடி தேங்காய் நார் போல இருக்கா? அப்ப தயிரை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க..
Hair Care Tips In Tamil: உங்க தலைமுடி எப்பவும் வறண்டு போயிருக்கா? எவ்வளவு எண்ணெய் தேய்த்தாலும், தலைமுடி வறட்சி குறைந்தபாடில்லையா? முடியின் வறட்சியைக் கட்டுப்படுத்த கடைகளில் விற்கப்படும் எத்தனையோ தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் உங்கள் முடியில் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா? அப்படியானால் ஒருமுறை இயற்கை பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பை கொடுங்கள்.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் எப்போதும் இருக்கும் தயிரைக் கொண்டு தலைமுடிக்கு ஹேர் மாஸ்க் போட்டு வரும் போது, தலைமுடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும். அதோடு தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, தலைமுடி உதிர்வதும் தடுக்கப்பட்டு, தலைமுடியும் வளரும். இப்போது முடியின் வறட்சியைப் போக்க உதவும் சில தயிர் ஹேர் மாஸ்க்குகளைக் காண்போம்.
1. தயிர் மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. தயிர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
3. தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
4. தயிர் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி, ஷவர் கேப் அணிந்து, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, முடி பட்டுப்போன்று மாறுவதைக் காணலாம்.
5. தயிர், விளக்கெண்ணெய் மற்றும் க்ரீம் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிர், விளக்கெண்ணெய் மற்றும் க்ரீம்மை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை தலைமுடி முழுவதும் தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரம் ஒருமுறை ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தும் போது, முடியின் வறட்சி குறைவதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

