Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பீட்ரூட் வெச்சே சூப்பரா ஹேர் கலரிங் செய்யலாம் தெரியுமா? அது எப்படி-ன்னு பாருங்க...
Hair Care Tips In Tamil: தற்போது இளம் வயதிலேயே நிறைய பேருக்கு தலைமுடி நரைத்துவிடுகிறது. இப்படி முடி நரைப்பதால், அந்த நரை முடியை மறைக்க பலரும் ஹேர் கலரிங் செய்து வருகிறார்கள்.
அதுவும் ஹேர் கலரிங் செய்வதற்கு நிறைய பேர் பார்லர் சென்று நிறைய பணத்தை செலவிடுகிறார்கள். இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களால் ஹேர் கலரிங் செய்வதற்கு பதிலாக இயற்கை பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே அடர் ப்ரௌன் நிற முடியைப் பெறலாம்.

ஹேர் கலரிங் என்று வரும் போது அதில் நிச்சயம் ஹென்னா என்னும் மருதாணி இடம் பெறும். ஆனால் வெறுமனே அந்த மருதாணி பொடியை பயன்படுத்தினால், அது ஓரிரு நாட்களே வரும் மற்றும் எதிர்பார்த்த நிறத்தைக் கொடுக்காது. ஆனால் அந்த மருதாணி பொடியுடன் ஒருசில பொருட்களை கலந்து பயன்படுத்தும் போது, அது முடிக்கு நல்ல நிறத்தைத் தரும்.
அதில் ஒன்று தான் பீட்ரூட். இயற்கையாகவே பீட்ரூட் நல்ல நிறத்தைக் கொண்டது. அந்த பீட்ரூட்டை ஹென்னாவுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, தலைமுடி நல்ல ப்ரௌன் நிறத்தில் மாறுவதோடு, நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். இப்போது ஹேர் கலரிங் செய்ய பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
இந்த ஹேர் கலரிங் செய்வதற்கு ஒரு பௌல் துருவிய பீட்ரூட் வேண்டும். அதன் பின் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப மருதாணி பொடி அல்லது ஹென்னா பவுடர் தேவை. அதற்கு அடுத்தபடியாக தேவையான அளவு தண்ணீர் வேண்டும்.
தயாரிக்கும் முறை:
* ஒரு மெட்டல் பாத்திரத்தில் துருவிய பீட்ரூட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து நீர் பாதியாக சுண்டும் வரை நீரைக் கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது பாதியானதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் நீரை வடிகட்டிவிட வேண்டும். அதன் பின் வேக வைத்த பீட்ரூட்டை சிறிது எடுத்து அரைத்து, அதை வடிகட்டி வைத்துள்ள நீரில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஹென்னா பவுடரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
* தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை தலைமுடியில் சீராக தடவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குறைந்தது 5 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஹேர் கலரானது குறைந்தது ஒரு வாரம் வரை தலைமுடியில் இருக்கும். அதன் பின்னரே அது மங்கத் தொடங்கும்.
* முக்கியமாக இந்த பேஸ்ட்டை தலையில் தடவும் போது, கைகளில் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கையில் நிறம் ஒட்டிக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications