For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசிங்கமாக இருக்கும் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள்!

உங்கள் குதிகாலில் வெடிப்புக்கள் அதிகமாக இருந்தால், அந்த வெடிப்புக்கள் மிகவும் வலிமிக்கதாக இருந்தால், அதைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன.

|

உடலிலேயே பாதங்கள் தான் அதிக வறட்சி அடையும் பகுதி. ஏனெனில் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. எனவே உடலின் நாம் எந்த பகுதிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கிறோமோ இல்லையோ, பாதங்களுக்கு தவறாமல் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதங்களில் வலிமிக்க வெடிப்புக்களை சந்திக்க நேரிடும்.

Natural Ways To Remove Cracked Heels

உங்கள் குதிகாலில் வெடிப்புக்கள் அதிகமாக இருந்தால், அந்த வெடிப்புக்கள் மிகவும் வலிமிக்கதாக இருந்தால், அதைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளை தினமும் பின்பற்றி வந்தால், குதிகால் வெடிப்பு விரைவில் காணாமல் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மௌத் வாஷ்

மௌத் வாஷ்

ஆம், நீங்கள் வாய் கொப்பளிக்க வைத்திருக்கும் மௌத் வாஷ் குதிகால் வெடிப்பைப் போக்கும். ஏனெனில் மௌத் வாஷில் உள்ள உட்பொருட்கள் பாக்டீரியாக்களை அழிப்பதோடு, சரும வறட்சியைப் போக்கி ஈரப்பதமூட்டும். அதற்கு ஒரு பகுதி மௌத் வாஷில், 2 பகுதி நீர் சேர்த்து கலந்து, அந்நீரில் குதிகால்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

தேன்

தேன்

தேனில் இயற்கையாகவே ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. அதோடு இது குதிகால் வெடிப்பிற்கான மிகச்சிறந்த மாய்சுரைசரும் கூட. அதற்கு தேனை வெடிப்பு உள்ள குதிகாலில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்வதோடு, பாதங்களும் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சரும வறட்சியை சரிசெய்யும் அற்புதமான எண்ணெய். அதுவும் குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி வந்தால், சீக்கிரம் பாத வறட்சியும், குதிகால் வெடிப்பும் நீங்கிவிடும்.

வினிகர்

வினிகர்

உங்கள் பாதங்களில் பூஞ்சை தொற்றுகளால் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தால், அதை சரிசெய்யும் அற்புதமான ஓர் வழி வினிகர் நீரில் பாதங்களை ஊற வைப்பது தான். இதனால் பாதங்களில் உள்ள பூஞ்சைகள் அழிக்கப்படுவதோடு, விரைவில் குதிகால் வெடிப்புகளும் மறையும்.

 சியா பட்டர்

சியா பட்டர்

மாய்ஸ்சுரைசரை விட சிறந்தது தான் சியா பட்டர். ஒருவேளை உங்களால் சியா பட்டரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், சியா பட்டர் அடிப்படையிலான க்ரீமை பாதங்களில் தடவலாம். இதனால் சீக்கிரம் குதிகால் வெடிப்புகள் காணாமல் போகும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் குதிகால் வெடிப்பைப் போக்கக்கூடியது. எனவே இனிமேல் வாழைப்பழம் சாப்பிடும் போது, சிறிது வாழைப்பழத்தை பாதங்களில் தேய்த்துக் கொள்ளுங்கள். பின் நன்கு காய்ந்த பின்பு நீரால் பாதங்களைக் கழுவுங்கள். இப்படி செய்வதால் அசிங்கமான குதிகால் வெடிப்புக்களை எளிதில் போக்கலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இத்தகைய எண்ணெயை தினமும் பாதங்களுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், உங்கள் பாதங்களுக்கு இளமையான தோற்றத்தை வழங்கும்.

ஓட்மீல் மற்றும் பால்

ஓட்மீல் மற்றும் பால்

ஓட்மீல் பொடியை பாலுடன் சேர்த்து ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்த்து விட்டு, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால், விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் பாதங்களில் காணலாம்.

பப்பாளி

பப்பாளி

வாழைப்பழத்திற்கு அடுத்தப்படியாக குதிகால் வெடிப்பைப் போக்க உதவும் பழம் தான் பப்பாளி. நீங்கள் சாப்பிடும் போது சிறிது பப்பாளியை எடுத்து மசித்து, அதை பாதிக்கப்பட்ட குதிகால் பகுதியில் தடவி ஊற வைத்து நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ways To Remove Cracked Heels

Here we listed some natural ways to remove cracked heels. Read on...
Desktop Bottom Promotion