Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
உங்க கால்விரல் நகங்கள் 'இப்படி' அசிங்கமா இருக்கா? இதோ அதை போக்கும் சில இயற்கை வழிகள்!
Foot Care Tips In Tamil: அழகு என்பது வெறும் முகத்தில் மட்டுமல்ல, உடலின் ஒவ்வொரு பகுதியும் அடங்கும். அழகாக காட்சியளிக்க எத்தனையோ அழகு பராமரிப்புக்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
அதே சமயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அழகு தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். அதில் ஒன்று தான் கால் விரல் நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று. ஒருவரது கால் விரல் நகங்களில் பூஞ்சை தொற்றானது எளிதில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

கால்விரல் நகங்களில் பூஞ்சை தொற்றுகுள் ஏற்பட்டால், நகங்களில் நிறம் அடர் மஞ்சள் அல்லது ப்ரௌன் நிறத்தில் மாறிவிடும். அதோடு நகங்களில் விரிசல் ஏற்பட்டு, உடைந்து போகும். அதுமட்டுமின்றி இந்த தொற்று பிற நகங்களுக்கும் பரவிவிடும். மேலும் இந்த தொற்று பெண்களை விட ஆண்களுக்கு தான் ஏற்படுகிறது.
இந்த பூஞ்சை தொற்றுகளுக்கு பல ஆயின்மெண்ட்டுகள், க்ரீம்கள் இருந்தாலும், ஒருசில இயற்கை வழிகளின் மூலமும் இந்த தொற்றை சரிசெய்யலாம். இப்போது கால்விரல் நகங்களில் ஏற்பட்டுள்ள பூஞ்சை தொற்றை சரிசெய்யும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
வழி #1
* ஒரு பௌலில் 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயிலை எடுத்து, அத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, இந்த கலவையை பாதிக்கப்பட்ட நகங்களில் தடவ வேண்டும்.
* இப்படி ஒரு நாளைக்கு 2 முறை தடவ வேண்டும். இவ்வாறு செய்தால், கால்விரல் நகங்களில் உள்ள தொற்றுகள் நீங்கும்.
வழி #2
* ஒரு பௌலில் 3-4 துளிகள் ஆரிகனோ அல்லது கற்பூரவள்ளி இலை எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை பாதிக்கப்பட்ட நகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* இப்படி ஒரு நாளைக்கு 2 முறை தடவினால், பூஞ்சை தொற்று விரைவில் அகலும்.
வழி #3
ஆலிவ் ஆயிலில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அந்த ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட கால்விரல் நகங்களில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை தடவி வந்தால், சீக்கிரம் கால்விரல் நகங்களில் ஏற்பட்டுள்ள பூஞ்சை தொற்றுகள் நீங்கும்.
வழி #4
* ஒரு அகலமான டப்பில் 1/2 கப் வினிகரை எடுத்து, அத்துடன் 2-3 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பாதிக்கப்பட்ட கால்விரல் நகங்களை அந்த கலவையில் 20 நிமிடம் ஊற வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், சீக்கிரம் பூஞ்சை தொற்று சரியாகும்.
வழி #5
* பூண்டில் கால்விரல் நகங்களில் ஏற்பட்டுள்ள பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளன.
* அப்படிப்பட்ட பூண்டு பற்களை 2 எடுத்து, அதை மசித்து பேஸ்ட் போல் செய்து, தொற்று ஏற்பட்டுள்ள விரல்நகங்களின் மேல் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
வழி #6
* பேக்கிங் சோடாவில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அந்த பேக்கிங் சோடாவை 1-2 டீஸ்பூன் எடுத்து ஒரு பௌலில் போட்டு, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை தொற்று ஏற்பட்டுள்ள கால்விரல் நகங்களில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் 1-2 முறை மேற்கொண்டால், தொற்றுகள் சீக்கிரம் சரியாகும்.
வழி #7
* ஒரு வாளியில் 1 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு எடுத்து, அத்துடன் 3 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கரைசலில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் மேற்கொண்டால், பூஞ்சை தொற்றுகள் விரைவில் சரியாகும்.
வழி #8
* கற்றாழை ஜெல்லில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
* அந்த கற்றாழை ஜெல்லை தொற்று ஏற்பட்டுள்ள கால் விரல் நகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் இரண்டு முறை பயன்படுத்தினால், பூஞ்சை தொற்றுகள் சரியாகிவிடும்.



Click it and Unblock the Notifications