For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய முறை!

இங்கு கருமையாக இருக்கும் பாதங்களை வெள்ளையாக்கும் எளிய முறை கொடுக்கப்பட்டுள்ளது.

|

உடலில் முகம், கழுத்து மற்றும் கைகளுக்கு கொடுக்கும் பராமரிப்பில், பாதி கூட நம் கால்களுக்கு நாம் கொடுக்கமாட்டோம். இதனால் கால்கள் மட்டும் மற்ற பகுதிகளை விட மிகவும் கருமையாக இருக்கும். அதிலும் வெயிலில் அதிகம் சுற்றுபவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். கால்கள் பயங்கர கருப்பாக இருக்கும்.

மேலும் தற்போது பலரும் தங்கள் அழகை இயற்கை வழியில், அதுவும் அழகு நிலையங்களுக்குச் செல்லாமல் பராமரிக்க விரும்புகின்றனர். அழகு நிலையங்களில் கால்களின் அழகை மேம்படுத்த செய்யப்படும் ஒரு முறை தான் பெடிக்யூர். இந்த பெடிக்யூரை வீட்டிலேயே நாம் எளிதில் செய்யலாம்.

இக்கட்டுரையில் கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே எப்படி பெடிக்யூர் செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து உங்கள் கால்களை அழகாகவும் வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் #1

ஸ்டெப் #1

முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

பின்பு ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.

ஸ்டெப் #3

ஸ்டெப் #3

அடுத்து அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, எலுமிச்சைத் தோலை நீரிலேயே போட்டு, கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும்.

பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.

ஸ்டெப் #4

ஸ்டெப் #4

ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி பொடி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

ஸ்டெப் #5

ஸ்டெப் #5

இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

குறிப்பு:

குறிப்பு:

இந்த பெடிக்யூரை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதைத் தடுக்கலாம். மேலும் இச்செயலால் குதிகால் வெடிப்பு வராமலும் இருக்கும் மற்றும் பாதங்களும் மென்மையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tan Removal Feet Whitening Spa Pedicure At Home

How to do tan removal feet whitening spa pedicure at home? Take a look...
Story first published: Thursday, May 18, 2017, 12:53 [IST]
Desktop Bottom Promotion