ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா? அப்படின்னா இத செய்யுங்க...

Posted By:
Subscribe to Boldsky

குதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில் தீவிரமான பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தை சந்திக்க வைக்கும். அதிலும் தற்போது பனி பொழிவு அதிகம் இருப்பதால், குதிகால் வெடிப்பு இன்னும் பயங்கரமாக இருக்கும்.

Granny Remedy To Heal Cracked Heels In Just A Few Days

இந்த பிரச்சனைக்கு அற்புதமான வைத்தியம் ஒன்று உள்ளது. இந்த வைத்தியத்தை நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் செய்யலாம். அதோடு இந்த வைத்தியம் மேற்கொள்ள 20 நிமிடம் போதும். அதோடு இந்த வைத்தியத்தால், நம் பாத சருமத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகளின்றியும் அழகாக இருக்கும்.

சரி, இப்போது குதிகால் வெடிப்பைப் போக்க உதவும் அந்த வைத்தியத்தை எப்படி மேற்கொள்வதென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் #1

ஸ்டெப் #1

குதிகால் வெடிப்பைப் போக்கும் இந்த வைத்தியத்தில் முதலாவதாக வெதுவெதுப்பான நீர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை மேற்கொள்ள தேவையான பொருட்களாவன,

* வெதுவெதுப்பான நீர்

* 2 ஸ்பூன் பேக்கிங் சோடா

* மெருகேற்றும் கல்

* 2 ஸ்பூன் உப்பு

செய்முறை:

செய்முறை:

* ஒரு அகன்ற வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அதனுள் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் மெருகேற்றும் கல்லான பியூமிக் கல்லை கொண்டு குதிகால்களைத் தேய்க்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள இறந்த தோல்கள் நீங்கிவிடும்.

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

அடுத்ததாக இந்த வைத்தியத்தில் ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த ஸ்கரப் செய்ய தேவையான பொருட்களாவன,

* 2 ஸ்பூன் எண்ணெய்

* 1 ஸ்பூன் சர்க்கரை

செய்முறை:

செய்முறை:

ஒரு பௌலில் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின் நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும்.

ஸ்டெப் #3

ஸ்டெப் #3

* இறுதியாக மெழுகு மற்றும் எண்ணெயைப் பயன்படுத்தி, சுத்தம் செய்யப்பட்ட பாதங்களுக்கு ஈரப்பசையூட்ட வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதனுள் ஒரு துண்டு மெழுகு மற்றும் எண்ணெய் இருக்கும் பௌலை வைத்து, மெழுகை உருக்க வேண்டும்.

* பின் அந்த கலவையை பாதங்களில் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த வைத்தியத்தை இரவு படுக்கும் முன் மேற்கொள்வது நல்லது. இதனால் பாதங்களுக்கு கொடுக்கப்பட்ட பராமரிப்பு நன்கு வேலை செய்து, ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Granny Remedy To Heal Cracked Heels In Just A Few Days

Try this granny remedy to heal cracked heels in just a few days. Take a look...
Story first published: Wednesday, December 6, 2017, 18:00 [IST]