அடிக்கடி இந்த இடம் வலிக்குதா?... இத மட்டும் செய்ங்க… உடனே சரியாகிடும்…

By Suganthi Rajalingam
Subscribe to Boldsky

நான்கு அமெரிக்கர்களில் மூன்று பேர் தங்கள் வாழ்நாளில் பொதுவான கால் வலி பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இந்த வேதனை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு கூட இருக்கலாம். வலியை புறக்கணிப்பு செய்தல், அதைப் பற்றிய விழிப்புணர்வு கொள்ளலாமல் இருத்தல், சரியான பராமரிப்பின்றி இருத்தல் இதனால் இதன் விளைவு இன்னும் மோசமாகிறது.

foot treatment

எனவே அழகான ஆரோக்கியமான சிரிக்கும் பாதங்களை பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக அதை பராமரிப்பதும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரு விரல் வீக்கம்

பெரு விரல் வீக்கம்

பெருவிரல் பகுதியில் புடைத்த மாதிரி எலும்பு ஒன்று அமைந்துள்ளது. காலப்போக்கில் எலும்பில் ஏற்படும் முரண்பாடுகள் அவ்விடத்தில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பெருவிரல் மற்ற விரல்களிலிருந்து விலகிச் செல்லும். இந்த வலி மிகுந்த வேதனைக்குரியதாக இருக்கும்

தடுக்கும் முறை

அழற்சி எதிர்ப்பு மருந்துகள், பேட்ஸ், பரந்த காலணிகள் போன்றவை இதற்கு உதவியாக இருக்கும். மருத்துவர் பரிந்துரைக்கும் காலணிகள் மூலம் இதை கொஞ்சம் குறைக்கலாம். இதில் பலனில்லை என்றால் அடுத்து அறுவை சிகிச்சை தான் உங்களுக்கு சிறந்த தீர்வளிக்கும்.

ஆணிகள் மற்றும் தடித்த தோல்

ஆணிகள் மற்றும் தடித்த தோல்

காலில் ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தம் கால் ஆணிகள் மற்றும் தடித்த தோலை உண்டாக்குகிறது. இவைகள் அந்த பகுதியில் உள்ள தோல் மீது தாக்கத்தை ஏற்படுத்தி சிறிய வட்ட வடிவ வலியை உண்டாக்குகிறது. தடித்த தோல் பொதுவாக பாதங்களில் ஹீல் பகுதியில் ஏற்படுகிறது. அசெளகரியமான காலணிகள், பெருவிரல் வீக்கமும் இதற்கு காரணமாக அமைகின்றன.

தடுக்கும் முறைகள்

மெத்தை போன்ற காலணிகள், அடிக்கடி ஆணிகளை நீக்குதல் போன்ற பழக்கம் இந்த பிரச்சினையை குறைக்கிறது. மருத்துவர் பரிந்துரைக்கும் காலணிகள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவையும் தீர்வளிக்கும். பல ஆண்டுகளாக காலில் இருக்கும் ஆணியைப் பற்றி் கவலைப்படாமல் பின்னால் வலியால் துடிப்பவர்கள் பலர். ஆனால் தொடர்ந்து கால்களைப் பராமரித்து வந்தால், மிக எளிதாக கால் ஆணியை சரிசெய்யலாம்.

கெளட்

கெளட்

கெளட் அல்லது கீழ்வாதம் என்பது சிவந்த தோல் வீக்கம், திடீரென்று வலி, விறைப்பு தன்மை போன்ற பிரச்சினைகள் பெருவிரல் பகுதியில் ஏற்படும். அதே மாதிரி கணுக்கால் மற்றும் முழங்காலிலும் இந்த பிரச்சினை வரலாம். நமது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான யூரிக் அமிலம் எலும்பு மற்றும் மூட்டுகளில் தங்கி இந்த பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

தடுக்கும் முறைகள்

அழற்சி எதிர்ப்பு மருந்துகள், கார்டிஸோன் ஊசி போன்றவற்றின் மூலம் மருத்துவர்கள் இதை குணப்படுத்துகிறார்கள். உணவு கட்டுப்பாடு, யூரிக் அமிலத்தை குறைக்கும் மருந்துகள், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை போன்றவையும் தேவைப்படும்.

பிளானர் மருக்கள்

பிளானர் மருக்கள்

பிளானர் மருக்கள் பொதுவாக வைரல் தொற்றால் ஏற்படுகிறது. குளங்கள், பாத்ரூம் பகுதிகளிலிருந்து இந்த தொற்று கிருமிகள் கால்களை தாக்குகின்றன. ஒரு வட்ட வடிவ சரும மாற்றத்தை பாதங்களில் ஏற்படுத்தி வலியுடன் ஏற்படுகிறது.

தடுக்கும் முறைகள்

கால்களில் தடவ சாலிசிலிக் அமிலம், எரித்தல், உறைதல் சிகச்சைகள், லேசர் தெரபி, சில சமயங்களில் அறுவை சிகிச்சை போன்றவை தேவைப்படுகிறது.

அத்தளட்ஸ் ஃபுட்

அத்தளட்ஸ் ஃபுட்

இந்த மாதிரியான பூஞ்சை தொற்று காலில் தோல் உரிதல், சிவத்தல், அரிப்பு, எரிச்சல் மற்றும் கொப்புளங்கள் , புண்களை ஏற்படுத்துகிறது. இந்த தொற்று நீச்சல் குளங்கள், ஸ்பா, லாக்கர் அறைகள் போன்ற பகுதிகளில் நடக்கும் போது அங்கு உள்ள பூஞ்சை கிருமிகளால் பரவுகிறது. இந்த பூஞ்சை காற்று போகாத ஈரமான பகுதியில் அதாவது ஷூக்களின் உள் புறம் போன்றவற்றில் வளருகிறது.

தடுக்கும் முறைகள்

பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்கள், லோசன்கள், மருந்துகள், நல்ல காற்றோட்டமான காலணிகளை அணிதல், காற்றோட்டமான சாக்ஸ் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் சரி செய்யலாம்.

பூஞ்சை நகத் தொற்று

பூஞ்சை நகத் தொற்று

மிகவும் நுண்ணிய பூஞ்சை கிருமிகள் உங்கள் நகத்தில் உள்ள பிளவுகள், தோல்கள் வழியாக உள்ளே நுழைந்து நகம் கடினமாதல், நகத்தின் நிறம் மாற்றம், நகம் உடைதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதை நீங்கள் அப்படியே விட்டு விட்டால் மற்ற நகங்களுக்கு பரவவும் வாய்ப்புள்ளது.

ஷூக்கள், நீச்சல் குளங்கள், ஸ்பா, ஜிம் போன்ற பகுதிகளில் இந்த பூஞ்சை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றுகளை பரப்புகிறது.

தடுக்கும் முறைகள்

பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்கள், மருந்துகள், லேசர் தெரபி போன்றவை தீர்வளிக்கும்.

ஹம்மெர்டோ

ஹம்மெர்டோ

கால்விரல்களை கட்டுப்படுத்தும் தசைகள் கட்டுப்பாட்டை இழக்கும் போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. பாதத் தசைகள் சரியாக செயல்படாமல் இருக்கும் போதும், சரியான காலணிகளை அணியாவிட்டாலும் இந்த மாதிரியான பிரச்சினை ஏற்படுகிறது. அப்படியே கால் விரல்கள் கீழ் நோக்கி வளைந்து காணப்படும்.

தடுக்கும் முறைகள்

சரியான காலணிகள், பரந்த காலணிகள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலணிகள், ஆணிகளை தடித்த தோல்களை அடிக்கடி அகற்றுதல், அறுவை சிகிச்சை போன்றவை நிவாரணம் தரும்.

கால்விரல் நகங்களின் சரியற்ற வளர்ச்சி

கால்விரல் நகங்களின் சரியற்ற வளர்ச்சி

கால்விரல் நகங்களின் சரி யற்ற வளர்ச்சி வலி, சிவத்தல், வீக்கம், தொற்று போன்றவற்றை ஏற்படுத்துகிறது. கால்விரல் நகங்களை ஒட்டாக வெட்டுதல், நகங்களில் ஏற்படும் காயங்கள், சரி யற்ற காலணிகள் போன்றவை காரணமாகின்றன.

தடுக்கும் முறைகள்

பாதிப்பு குறைவாக இருக்கும் போது நல்ல வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு சேர்த்து கால்விரல்களை நனைய வைக்கலாம். ஆன்டிபயாடிக் க்ரீம், பேன்டேஜ் போடலாம். ரெம்ப முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

ப்ளாட் ஃபுட் (கிடைமட்ட பாதங்கள்)

ப்ளாட் ஃபுட் (கிடைமட்ட பாதங்கள்)

கிடைமட்ட வடிவ பாதங்களில் பாதங்கள் பகுதி முழுவதும் தரையை தொடும்.பாதங்களில் ஏற்படும் காயங்கள், மரபணு பிறழ்ச்சி போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.

தடுக்கும் முறைகள்

சரியான காலணிகள், ஆர்த்தோடிக் ஷூக்கள், அறிகுறிகளை கண்டறிந்து முன்னரே செயல்படுதல், அறுவை சிகிச்சை பாத திருத்தம் போன்றவற்றின் மூலம் சரி செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Common Causes Of Foot Pain

    Three out of four Americans will experience a common foot problem in their lifetime.These conditions can be painful and embarrassing. Choosing correct shoes, surgery, medicine, anti allergy creams these are the best way to get rid off foot problems.
    Story first published: Wednesday, March 28, 2018, 12:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more