For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

15 நிமிடங்களில் குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க...

கருப்பு உப்பு உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உங்கள் சருமத்தை கிருமிகள் மற்றும் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயம் போல் விளங்குகிறது.

|

நம் வீட்டு சமையலறை நமக்கு சுவையான உணவை மட்டும் தருவதில்லை. ஆரோக்கியமான உடலையும் தருகிறது. அதுமட்டுமில்லாமல் உடல் அழகையும் மெருகேற்ற உதவுகிறது. ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அழகு நிலையங்களுக்கு சென்று உங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து உங்கள் அழகை மெருகேற்றுவதைவிட வீட்டில் உங்கள் சமயலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு உங்கள் அழகை மேம்படுத்தலாம். அதற்கான பொருட்கள் பல இருந்தாலும், அழகு சார்ந்த பல நன்மைகளை தன்னிடம் கொண்ட ஒரு முக்கிய பொருள் கருப்பு உப்பு.

Black Salt For Skin And Hair: Get Rid Of Dandruff, Cracked Heels And Dead Skin

கருப்பு உப்பு உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உங்கள் சருமத்தை கிருமிகள் மற்றும் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயம் போல் விளங்குகிறது. கருப்பு உப்பு சருமத்திற்கு க்ளென்சர் போல் பயன்படுகிறது. சருமத்திற்கு கருப்பு உப்பின் நன்மைகளைப் போல், கூந்தலுக்கும் பலவிதங்களில் நன்மை அளிக்கிறது.

MOST READ: 2020 ஜீ சினி விருது விழாவிற்கு கைத்தறி புடவையில் அம்சமாக வந்த நயன்தாரா!

கருப்பு உப்பு எரிமலை கல் உப்பின் வகை ஆகும். கருப்பு உப்பில் சோடியம் குறைவாக இருக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையுடன் இருப்பவர்களுக்கு இது சிறந்தது. மேலும், கருப்பு உப்பை உட்கொள்வது செரிமானத்திற்கு சிறந்தது மற்றும் கருப்பு உப்பு தோல் மற்றும் கூந்தலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. பொதுவாக நமது வீடுகளில் கிடைக்கும் இந்த இயற்கை மூலப்பொருளை பயன்படுத்தி அழகான சருமம் மற்றும் கூந்தலைப் பெறுவது எப்படி என்று இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாத வெடிப்பிற்கு கருப்பு உப்பு

பாத வெடிப்பிற்கு கருப்பு உப்பு

குளிர் காலத்தில் சருமம் மற்றும் கூந்தல் வறண்டு காணப்படும். இத்தகைய வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுவது கால் பாதங்கள். பாதங்களில் உள்ள வெடிப்புகள் அழகைக் கெடுப்பதுடன் வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலியைப் போக்கவும், வெடிப்பைப் போக்கவும் கருப்பு உப்பு சிறந்த தீர்வைத் தருகிறது.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

ஒரு பக்கெட்டில் பாதி அளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். அதில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பக்கெட் நீரில் உங்கள் பாதங்களை வைக்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். மென்மையாக பாதங்களை ஸ்க்ரப் செய்யவும். தொடர்ந்து இப்படி செய்து வருவதால் பாத வெடிப்பின் காரணமாக உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பு நிவாரணம் பெறுவதை உங்களால் உணர முடியும். மேலும் கருப்பு உப்பு உங்கள் பாதங்களைச் சுற்றியுள்ள இறந்த அணுக்களைப் போக்கி பாதங்களை மென்மையாக்கும்.

சருமத்தின் இறந்த அணுக்களைப் போக்கும் கருப்பு உப்பு

சருமத்தின் இறந்த அணுக்களைப் போக்கும் கருப்பு உப்பு

கருப்பு உப்பு ஒரு இயற்கையான ஸ்க்ரப்பிங் மூலப்பொருள். இதனை சருமத்தில் தேய்ப்பதால் பல அற்புதங்கள் நடக்கும். குளிர் காலத்தில் உங்கள் சருமத்தில் பருக்கள் , கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்புகளுக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் என்றால் சிறிதளவு கருப்பு உப்பை உங்கள் சருமத்தில் ஸ்க்ரப் செய்து வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுங்கள். கருப்பு உப்பு கொண்டு சருமத்திற்கு ஸ்க்ரப் செய்து வருவதால் இறந்த அணுக்கள் வெளியேறுகிறது. முக்கியமாக விலை அதிகமான பேஷியல் செய்த பலன் உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.

பொடுகைப் போக்கும் கருப்பு உப்பு

பொடுகைப் போக்கும் கருப்பு உப்பு

குளிர்காலத்தில் உங்கள் உச்சந்தலை அதிகபட்ச வறட்சியை உணர்வதால் பொடுகு பாதிப்பு ஏற்படலாம். தலையில் உண்டாகும் லேசான அரிப்பு கூட பொடுகின் அறிகுறியாக இருக்கலாம். கருப்பு உப்பில் பல்வேறு தாதுக்கள் உள்ளன.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

தலைக்கு குளிக்கும் போது சிறிதளவு கருப்பு உப்பை தலையில் தேய்ப்பதால் பொடுகில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். தலையில் கருப்பு உப்பை தேய்த்து 10 நிமிடம் கழித்து தலையை நீரால் அலசவும். பின்பு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசுவதால் உங்கள் உச்சந்தலை பொடுகின்றி இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Black Salt For Skin And Hair: Get Rid Of Dandruff, Cracked Heels And Dead Skin

Want to get rid of dandruff, cracked heels and dead skin? Then use black salt for skin and hair.
Desktop Bottom Promotion