For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எகிப்து மம்மிகள் அழகாக இருந்ததற்கான இரகசியம் என்னனு தெரியுமா..?

|

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சிறந்த வரலாறு இருக்க தான் செய்யும். வரலாறுகள் மிகவும் ஆற்றல் கொண்டவை. இவை ஒரு நாட்டின் முழு வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும். வரலாற்றில் நிச்சயமாக எண்ணற்ற ராஜா ராணிகள் இடம் பெற்றிருப்பர். இவர்களின் அழகை பற்றி இன்றளவும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் இந்த எகிப்தியர்கள்.

Egyptians Beauty Secrets and Skin Care Tips

எகிப்தில் இருந்த ராஜாக்கள் மற்றும் ராணிகள் உலகிலேயே வியக்க தக்க அழகுடன் இருந்ததாக வரலாறுகள் சொல்கிறது. இந்த பதிவில் எகிப்திய மம்மிகள் அழகில் திளைக்க முக்கிய காரணமாக இருந்த சில அழகு இரகசியங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எகிப்திய மர்மங்கள்..!

எகிப்திய மர்மங்கள்..!

எந்த காலகட்டத்திலும் எகிப்தியர்களின் மர்மங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எகிப்தில் உள்ள சிறு சிறு விஷயங்கள் கூட மர்ம முடிச்சுகளை வைத்திருக்கும். அந்த வகையில் உலகே பார்த்து ஆச்சரிய பட கூடிய விஷயங்களில் ஒன்று, எகித்தியர்களின் அழகுதான்.

கூந்தல் பொலிவிற்கு

கூந்தல் பொலிவிற்கு

எகிப்தியர்கள் கூந்தலை பொலிவு பெற செய்ய ஒரு சில முக்கிய குறிப்புகளை கட்டிப்பிடித்து வந்தனர். அதில் மிக முக்கியமானவை தேங்காய் வெண்ணெய் தான். பிரத்தியேகமாக எந்த வித செயற்கை பொருளும் சேர்க்காத இந்த தேங்காய் வெண்ணெயை அவர்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

முக பருக்களுக்கு

முக பருக்களுக்கு

முக பாரு என்றாலே நமக்கெல்லாம் கடுப்பு நிச்சயம் வரத்தான் செய்யும். இதனை எளிதில் போக்க எகித்தியர்கள் வெந்தயத்தை பயன்படுத்தினர். முகத்தில் உள்ள பருக்களில் இந்த வெந்தய விதைகளை அரைத்து போட்டு கொண்டால் விரைவில் மறைந்து விடுமாம்.

செக்க சிவந்த உதடு

செக்க சிவந்த உதடு

எகிப்திய ராணிகள் அவர்களின் உதடுகளை அழகு செய்து கொள்ள சிவப்பு நிறமுள்ள ஒன்றை பயன்படுத்தினர். ரெட் அச்ரே என்ற ஒன்று களிமண்ணில் கிடைக்க கூடிய மூல பொருளாம். இதனை பயன்படுத்தி தான் ராணிகள் ராஜாக்களை கவர்ந்து வந்தனர்.

MOST READ: கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பது நல்லதா? கெட்டதா?

முதலை சாணம்

முதலை சாணம்

எகிப்தியர்கள் அவர்களின் அழகை மேம்படுத்த முதலை சாணத்தை பயன்படுத்தினர். அதாவது, கழுத்தை பாலில் இந்த முதலை சாணத்தை கலந்து அவர்கள் தங்களது அழகை மேம்படுத்த உபயோகித்தனர். இது சற்றே அருவருக்கதக்க விஷயமாகவே மற்றவர்களால் பார்க்க படுகிறது.

பாலும் தேனும்

பாலும் தேனும்

குளியல் மிக முக்கியமான ஒன்றாகும். ஒருவரின் அழகை இது நிர்ணயிக்க கூடிய இடத்தில உள்ளது. குளியலுக்கு தேனையும் பாலையும் கலந்து குளிப்பார்களாம் எகித்திய மம்மிகள். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்கி, உடலை சுத்தமாக வைத்து கொள்ளும். மேலும், இளமையான தோற்றத்தையும் இந்த குளியல் தரும்.

கிளியோபாட்ராவின் மர்மம்

கிளியோபாட்ராவின் மர்மம்

குளிப்பதற்காக கிளியோபாட்ரா அவர்கள், இந்த கடல் உப்பை பயன்படுத்துவாராம். ஏனெனில் இதில் எண்ணற்ற தாதுக்கள் உள்ளன. இவற்றை தோலில் பயன்படுத்தினால் மென்மை பெற்று எந்த வித நோய் தொற்றுகளும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும்.

நீண்ட இளமைக்கு

நீண்ட இளமைக்கு

நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும் ஆசைதான். இளமையை அப்படியே பாதுகாக்க எகிப்தியர்கள் பாதாமை பயன்படுத்தினர். பாதாம் எண்ணெய்யை சருமத்தில் பூசி மசாஜ் செய்வதால் மென்மையான சருமம் பெறலாம்.

MOST READ: புகைப்பழக்கம் இருந்தாலும் உங்களின் நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ளும் எளிய வழிகள்..!

காபி ஸ்க்ரப்

காபி ஸ்க்ரப்

உடல் முழுக்க மொழு மொழுவென வைத்து கொள்ள இந்த எளிமையான முறையை அவர்கள் கடைபிடித்து வந்தனர். காபி தூள், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து உடலில் தடவி வந்தால், சருமம் அழகு பெறுமாம்.

கைகளின் அழகு

கைகளின் அழகு

நகங்களை அழகு செய்ய இரு வித முறைகளை கடைபிடித்தனர். அவற்றில் ஒன்று மருதாணி, வேறொன்று பாதாம் எண்ணெய். இவை இரண்டும் அவர்களின் தோலில் எந்த வித நோய்களும் ஏற்படாமல் பார்த்து கொள்ளுமாம். மேலும், குங்குமப்பூவை கண் இமைகளின் மேல் தடவினால் ஒரு வித நிறத்தை பெற்ற கவர்ச்சியாக இருக்குமாம்.

கற்றாழை

கற்றாழை

சருமத்தின் பாதுகாப்பை அதிகரிக்க இந்த கற்றாழை நன்கு பயன்படும். இதை தான் எகிப்தியர்களும் பயன்படுத்தினர். கற்றாழை ஜெல்லை மட்டும் முகத்தில் பூசி அழகு படுத்தி வந்தனர். மேலும், இதை உட்கொள்ளும் பழக்கமும் அவர்களிடம் இருந்ததாம்.

வாசனை திரவியங்கள்

வாசனை திரவியங்கள்

உடலில் வாசனை மண மணக்க எகிப்தியர்கள் முதன்மையான சில குறிப்புகளை உபயோகித்தனர். லாவெண்டர், ரோஸ்மேரி, சிடார் போன்ற பூக்களை கொண்டு வாசனை திரவியம் செய்து அதனை உடலில் அடித்து கொண்டனர்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Egyptians Beauty Secrets and Skin Care Tips

This article is about the beauty of egyptian and the tips, they use to get pretty face.
Desktop Bottom Promotion