ஈறுகள் மேலே ஏறி அசிங்கமாக உள்ளதா? அதை சரிசெய்ய இதோ சில எளிய வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பற்களை சூழ்ந்துள்ள மென்மையான திசுக்களால் ஆனது தான் ஈறுகள். இந்த ஈறுகள் மோசமான வாய் பராமரிப்பின் காரணமாக வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தாலும், பற்காறைகளின் உருவாக்கத்தாலும், புகைப்பிடித்தல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றாலும் மேலே ஏறி அசிங்கமான தோற்றத்தைத் தரும்.

Make Receding Gums Grow Again And Fast With These Natural Methods

ஈறுகள் மேலே ஏறிவிட்டால், பற்கள் மிகவும் பெரியதாக காட்சியளிக்க ஆரம்பித்துவிடும். ஆகவே ஈறுகளின் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது. அதற்கு தினமும் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களை அன்றாடம் பின்பற்ற வேண்டும்.

இங்கு அசிங்கமாக மேலே ஏறி இருக்கும் ஈறுகளை மீண்டும் பழைய நிலைக்கு அழகாக மாற்ற உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீன் டீ

க்ரீன் டீ

தினமும் ஒரு கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வாய்க்கு ஒரு நல்ல பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி, ஈறுகளை நோய்கள் தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

கற்றாழை

கற்றாழை

தினமும் காலையில் பற்களைத் துலக்கிய பின், சிறிது கற்றாழை ஜெல்லை வாயில் போட்டு, 5 நிமிடம் கொப்பளித்து, பின் வாயைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலமும் ஈறுகளைத் தாக்கும் பாக்டீரியாக்களின் அளவு குறைந்து, ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்கும் ஈறு பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதற்கு தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10-15 நிமிடம் கொப்பளித்து, பின் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அகற்றப்பட்டு, ஈறுகள் வளர்ச்சி அடைவதோடு, பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெயில் உள்ள மருத்துவ குணம், வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து, ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். அதற்கு தினமும் பற்களைத் துலக்கும் போது, 2 துளிகள் கிராம்பு எண்ணெயை பற்பசையுடன் சேர்த்து துலக்குங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை

1 எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 1/4 கப் ஆலிவ் ஆயில் சேர்த்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்கி, 1 வாரம் கழித்து, அந்த கலவையால் வாரத்திற்கு 2-3 முறை பற்கள் மற்றும் ஈறுகளை மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Make Receding Gums Grow Again And Fast With These Natural Methods

Here are some home methods for receded gums to grow back. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter